Category Archives: கணியம்

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – ஜூலை 3 2022 மாலை 5-6 – சைபர் பாதுகாப்பு – எலக்ட்ரானிக் கேட்

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல் ஜூலை 3, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 – 5:00 மணி வரை ஆன்லைன் மீட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLug எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம்.அனைத்து விவாதங்களும் தமிழில்தான். பேச்சு விவரங்கள்பேச்சு 0:தலைப்பு: சைபர் பாதுகாப்பு அறிமுகம் விளக்கம் : 1) சைபர் பாதுகாப்பு பற்றிய விரைவான அறிமுகம். 2) PE கோப்பைத் தெரியாமல் பதிவிறக்குவதைத் திரும்பப் பெற வேண்டுமா? மற்றும் எப்படி… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 26.06.2022 ஞாயிறு – மாலை 5.30… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 29.05.2022 ஞாயிறு – மாலை 6.00… Read More »

லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் – சாதித்துக் காட்டிய நம்மவர்கள்!

எதிர்பார்த்த படி, லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் இணையவழி ஹேக்கத்தானுக்கு ஆர்வத்துடன் பலர் குவியத் தொடங்கினார்கள். சரியாகப் பதினொன்றரைக்கு உள்ளே நுழைந்தார் இல்மாரி. அவர் உள்ளே நுழையும் போதே இருபதுக்கும் அதிகமானோர் இணைந்திருந்தனர். சில மணித்துளிகளில் நிகழ்வை இல்மாரி தொடங்கும் போது இணைந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதைத் தொட்டிருந்தது. மிக இயல்பாக, லிப்ரெஆபிஸ் தொகுப்பில் எப்படி வேலை செய்ய வேண்டும்? விண்டோஸ், லினக்ஸ் என ஒவ்வொரு இயங்குதளத்திலும் எப்படி நிறுவ வேண்டும்? வழுக்களை(bug) எப்படிப் பதிய வேண்டும்? என அனைத்தையும் நாற்பது… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 15 – இனிதே துவங்கிய பயணம்

இனிதே துவங்கிய பயணம் மதன் மற்றும் கார்த்திகாவின் திருமணத்திற்கு முன்தைய நாள். காஞ்சிபுரத்தில் மதனின் குடும்பத்தின் சொந்த மண்டபத்தில் மதன் மற்றும் கார்த்திகாவின் ரிஷப்ஷன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேடையில் பட்டு வேட்டியுடன் மதனும் தங்கநிற பட்டுப்புடவையில் கார்த்திகாவும் நின்றிருந்தனர். கயலும் குருவும் கார்த்திகா வீட்டினரையும் தன்வீட்டினரையும் கவனித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் சுரேஷும் தீப்தியும் விருந்தினர்களுக்கு என்ன வேண்டும் என்று கவனித்துக் கொண்டிருந்தனர். மதனின் தங்கை மதன் வீட்டாரை கவனிக்க பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள். வழக்கம்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 14 – உடன்கட்டை

உடன்கட்டை அன்று வெள்ளிக்கிழமை, சுரேஷ் மற்றும் தீப்தியின் திருமனத்திற்கு முந்தைய நாள். சுரேஷின் பார்ம் அவுஸ் அவன் திருமனத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகிக்கொண்டிருந்தது. அவன் பார்ம் அவுஸ் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் கோவலம் கடற்கரையை தாண்டி ஒரு இடத்தில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் சவுக்கு மரங்களை கொண்டு முழுவதும் காம்பவுன்ட் சுவர்கள் எழுப்பி அமைக்கப்பட்டிருந்தது. ஈசிஆர் ரோட்டில் இருந்து சுரேஷின் பார்ம் அவுஸ்ஸுக்கு சொன்னையிலிருந்து பாண்டிக்கு போகும் திசையில் இடதுபுறம் திரும்பி ஐநூறு மீட்டர் சென்றாலே வந்துவிடும்.… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 13 – அந்த ஒரு நம்பர்

அந்த ஒரு நம்பர் காலை நான்கு மணி, ‘எந்திரா டைமாச்சு’ மதன் வழக்கம்போல் சுரேஷை எழுப்பினான். இருவரும் குளித்து முடித்துவிட்டு ஹாலுக்கு வந்து அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தனர். தீப்தியும் தன் பைகளை எடுத்துக்கொண்டு மாடியில் இருந்து இறங்கி வந்து சுரேஷுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். கார்த்திகாவின் தந்தையும் வெளியில் போய் செவ்வாழை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, என்று பல கனிகளை மூன்று பைகளில் போட்டு கொண்டுவந்து மதனிடமும் சுரேஷ் மற்றும் தீப்தி இடமும் கொடுத்தார். ‘எதுக்கு சார் இதெல்லாம்’, மதன்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 12 – அதையும் தாண்டி புனிதமானது

அதையும் தாண்டி புனிதமானது காரின் முன்னால் பார்த்துக் கொண்டு வந்த மதனுக்கு திடீரென்று ரியர் வியூவ் மிரரை பார்க்க தோன்றியது, யாரும் பார்க்காதவாறு மிரரை பார்க்க கார்த்திகா மதனை பார்த்தவாரே இருந்ததை கண்டான். மதனை பார்த்ததும் கார்த்திகா வேறு இடத்தை பார்க்க தொடங்கினாள். மதன் சிறிய புன்முருவலுடன் மிரரை பார்த்தவாரே இருந்தான். சில நொடிகள் கழித்து கார்த்திகா யாரும் பார்க்காதவாறு மீண்டும் மிரரை பார்க்க, அங்கே மதன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தாள். இருவரும் ஒருவரை… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 11 – பதினாறும் பெற்று

பதினாறும் பெற்று அன்று திங்கட்கிழமை, மதியம் உணவு இடைவேளையில் சுரேஷ், தீப்தி, மதன், கார்த்திகா நல்வரும் ஒன்று கூடினர். ‘நேத்தி கயலும் குருவும் வீட்டுக்கு வந்திருந்தாங்க, அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்தாங்க’ சுரேஷ் ஆரம்பிக்க ‘உங்க வீட்டுக்குமா, எங்க வீட்டுக்கும் போய் அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்திருக்காங்க, அம்மா போன் பண்ணி சொன்னாங்க’ தீப்தி கூற ‘வர சண்டே மேரேஜ், நீ போறியா இல்ல நாங்க போகட்டுமான்னு எங்க வீட்லயும் கேட்டாங்க’ மதன் கூற ‘போன்ல சொன்ன… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 10 – குலசாமி

குலசாமி ‘எங்கடா இருக்க ரூம்லயா?’ தீப்தி சுரேஷை போனில் கேட்க ‘இல்லடி வீட்டுக்கு வந்திருக்கேன்’ சுரேஷ் கூற ‘கோயிங் டு பி பிக் ப்ராப்ளம் இன் மை ரூம், கயல் அக்காவோட அம்மாகிட்ட கயல் அக்காவோட மாமா பையன் மறுபடியும் போய் பொண்ணு கேட்டிருக்கார், கொடுக்கலைன்னா மெட்ராஸ்ல இருக்கிற உங்க பொண்ண கூட்டிட்டு போய் தாலி கட்டி அப்படியே ஸ்ரீநகர் கூட்டிட்டு போயிடுவேன்னு சொல்லி இருக்கார். அவங்க அம்மா உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு சொல்லி இருக்காங்க, இந்த… Read More »