எளிய தமிழில் CAD/CAM/CAE 7. ஃப்ரீகேட் (FreeCAD) 3D
சால்வ்ஸ்பேஸ் செய்யும் எல்லா வேலைகளையும் ஃப்ரீகேட் செய்ய முடியும். இது தவிர மேலும் பல வேலைகளையும் செய்ய முடியும். ஃப்ரீகேட் பணிமேடைகள் (workbenches) உங்கள் பட்டறையில் மர வேலையும் உலோக வேலையும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மர வேலைக்கு வாள் (saw), இழைப்புளி (planer), உளி (chisel) போன்ற கருவிகள் கொண்ட ஒரு பணிமேடை தனியாக வைத்திருப்பீர்கள். மற்றொரு பணி மேடையில் பணை (anvil), நிலையிடுக்கி (vice), அரம் (file) போன்ற கருவிகள் உலோக வேலைக்கு வைத்திருப்பீர்கள்… Read More »