Category Archives: கணியம்

சாப்ட்வேர் டெஸ்டிங் – 15- வெள்ளைப் பெட்டி உத்திகள் -4

மாற்ற வழிச் சோதனை(Mutation Testing) அதென்ன மாற்ற வழிச் சோதனை? ஒரு சின்ன கதை வழியாக இதைப் புரிந்து கொள்வோம். அருள், வியன் – இருவரும் நண்பர்கள்; மென்பொறியாளர்கள். இருவரும் இணைந்து இணையத்தளம் ஒன்றை வடிவமைக்கிறார்கள். இணையத்தளத்தின் பின்னணி நிறம் சிவப்பாக இருந்தால் பளிச்சென்று எல்லோருக்கும் பிடித்தது போல் இருக்கும் என்று நினைக்கிறார் அருள். ஆனால், வியனுக்கோ வேறொரு எண்ணம் – பின்னணி நிறம் பச்சையாக இருந்தால், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்குமே என்பது வியனின் கருத்து. இருவரும்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 13. 2D வரைபடமா அல்லது 3D மாதிரியா?

ஒவ்வொரு CAD மென்பொருளிலும் அதற்கேயான தன்னகக் கோப்பு வடிவத்தில் (Native format) சேமித்து வைப்பது அவசியம் என்று முந்தைய கட்டுரையில் கூறினோம். முக்கியமாக 3D CAD மென்பொருட்களில், நாம் முன்னர் பார்த்தபடி, அளவுரு மாதிரிகளின் வரலாற்றையும் படிமுறைகளையும் இம்முறையில் மட்டுமே சேமிக்க முடியும் என்றும் பார்த்தோம். இம்மாதிரி வரைபடங்களும் மாதிரிகளும் ஒரு நிறுவனத்தின் விலைமதிப்பற்ற அறிவுசார் சொத்து (intellectual property) ஆகும். ஆகவே எந்த மென்பொருளை பயன்படுத்துவது, எந்தக் கோப்பு வகையில் மூல வடிவங்களை சேமித்து வைப்பது… Read More »

ஜாவாஸ்கிரிப்ட் – சென்னையில் 2 நாள் பயிற்சி வகுப்புகள்

ஜாவாஸ்கிரிப்ட் – சென்னையில் 2 நாள் பயிற்சி வகுப்புகள் வணக்கம். வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் ஜாவாஸ்கிரிப்ட் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பயிற்றுநர்: இராம் காலம்: அக்டோபர் 19,20 – 2019 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை இடம்: பயிலகம் 7, விஜய நகர் முதல் தெரு, வேளச்சேரி சென்னை 42 (ஆர்த்தி ஸ்கேன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா எதிரில்) பேசி: 8344777333 என்னென்ன பயிற்றுவிக்கப்படுகின்றன: இந்த இணைப்பில் பார்க்கலாம்.… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 12. பாகங்களைத் தொகுத்து இயக்கிப் பார்த்தல் (Motion simulation)

ஃப்ரீகேட் அசைவூட்டம் (Animation) பணிமேடை பாகங்களின் இயக்கத்தை உருவகப்படுத்தவும், படங்களின் காட்சித்தொடர்களை உருவாக்கவும், இவற்றைக்கொண்டு அசைவூட்டத்தை உருவாக்கவும் இப்பணிமேடை பல கருவிகளைக் கொண்டுள்ளது. பாகங்களின் நிலை மற்றும் திசையமைவை தேவைப்பட்டபோது மாற்றலாம். மேலும் கண்ணுக்குப் புலப்படுதல் (visibility), ஒளிபுகுதன்மை (transparency), வடிவத்தின் நிறம் (shape color) மற்றும் நிழற்படக் கருவி நிலை (camera position) போன்ற பிற பண்புகளையும் மாற்றலாம்.  தொகுப்பை விரித்துக் காட்டும் தோற்றம் (Exploded view) ஒரு இயந்திரத்தை எவ்வாறு தொகுப்பது எந்தெந்த பாகம்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 11. பாகங்களைத் தொகுத்துப் பார்த்தல்

பாகங்களை இணைக்கும் பொழுது வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிதல் நம்முடைய தயாரிப்பில் உள்ள பாகங்களை எல்லாம் 2D மென்பொருளில் உருவரைவு தயார் செய்துவிட்டோம். இந்த பாகங்களை எல்லாம் தயாரித்து துணைத் தொகுதிகளாகவும் முழுத் தொகுதியாகவும்  இணைக்கும் பொழுது சில பிரச்சினைகள் தெரியவரலாம். எடுத்துக்காட்டாக சில திருகாணிகள் முடுக்கியால் அணுக இயலாத இடத்தில் இருக்கலாம்.  நம்மால் 3D மாதிரியில் பாகங்களை இணைத்துப் பார்க்க முடிந்தால் இம்மாதிரி பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டு பிடித்து ஓரளவாவது தவிர்க்கலாம் அல்லவா? இந்த வசதி… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 10. எளிய வரைபடப் பயிற்சிகள்

உங்களுக்கு வரைபடங்களில் அடிப்படைப் பயிற்சி தேவை என்றால் என்னுடைய முந்தைய கட்டுரைகளை கீழ்க்கண்ட இணைப்புகளில் காணலாம்: பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 1 பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 2 பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 3 சித்திரமும் கைப்பழக்கம் சித்திரமும் கைப்பழக்கம் என்பது பழமொழி. நாம் வரைவது சித்திரமல்ல, வரைபடம்தான். இருப்பினும் நாம் பல்வேறு படங்களை வரைந்து பார்க்கப் பார்க்கத்தான் நம் மென்பொருளிலுள்ள கருவிகள் மற்றும் நாம்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 9. CAD கோப்பு வகைகள்

ஒவ்வொரு CAD மென்பொருளிலும் அதற்கேயான தன்னகக் கோப்பு வடிவத்தில் (Native format) சேமித்து வைப்பது அவசியம். முக்கியமாக 3D CAD மென்பொருட்களில், நாம் முன்னர் பார்த்தபடி, அளவுரு மாதிரிகளின் வரலாற்றையும் படிமுறைகளையும் இம்முறையில் மட்டுமே சேமிக்க முடியும். இதுதான் உங்கள் மூல வடிவம். எனினும் பல காரணங்களால் நாம் மற்ற கோப்பு வகைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.  CAD கோப்பு வகைகள் ஏற்றுமதி பொறியியல் பகுப்பாய்வு (CAE) மற்றும் சிஎன்சி நிரல் இயற்றல் (CAM) மென்பொருட்களுக்கு வேறு கோப்பு… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 8. வடிவியல் கட்டுப்பாடு தீர்வி (Geometric constraint solver)

வழக்கமாக நாம் 2D வரித்தோற்றம் (orthogonal view) உருவரைவுகள் செய்யும்போது வரைபலகையில் கையால் வரைவது போலவே வரைவோம். அதாவது கோடுகளைத் தேவையான துல்லியமான அளவில் தேவையான திசையிலேயே வரைவோம். ஏனெனில் நம்முடைய நோக்கம் அந்தப் படத்தை வரைந்து, அளவுகள் காட்டி, அச்சிட்டுப் பணிமனையில் உற்பத்தி செய்யக் கொடுக்க வேண்டும். தோராயமாக வரைந்து கட்டுப்பாடு அமைத்தல் (Constraint Sketching) திட வடிவங்களை உருவாக்குவதற்கு நாம் பெரும்பாலும் 2D வடிவங்களிலேயே தொடங்க வேண்டும். ஏனெனில் இயந்திரவியல் பாகங்களை பெரும்பாலும் 2D… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 7. ஃப்ரீகேட் (FreeCAD) 3D

சால்வ்ஸ்பேஸ் செய்யும் எல்லா வேலைகளையும் ஃப்ரீகேட் செய்ய முடியும். இது தவிர மேலும் பல வேலைகளையும் செய்ய முடியும். ஃப்ரீகேட் பணிமேடைகள் (workbenches) உங்கள் பட்டறையில் மர வேலையும் உலோக வேலையும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மர வேலைக்கு வாள் (saw), இழைப்புளி (planer), உளி (chisel) போன்ற கருவிகள் கொண்ட ஒரு பணிமேடை தனியாக வைத்திருப்பீர்கள். மற்றொரு பணி மேடையில் பணை (anvil), நிலையிடுக்கி (vice), அரம் (file) போன்ற கருவிகள் உலோக வேலைக்கு வைத்திருப்பீர்கள்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 6. சால்வ்ஸ்பேஸ் (SolveSpace) 3D

எளிதாக நிறுவி இயக்க முடியும் சால்வ்ஸ்பேஸ் 3D என்பது அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) கட்டற்ற திறந்தமூல மென்பொருள். இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயங்குகிறது. விண்டோஸ் கணினிகளில் நிறுவ வேண்டிய அவசியம் கூட இல்லை. EXE கோப்பு அப்படியே ஓடும். இது சிறிய கோப்பு ஆகையால் உங்கள் கணினியில் அதிக இடத்தையும் எடுத்துக் கொள்ளாது. தொடக்கப்பயிற்சியாக ஒரு கோணத்தாங்கி (angle bracket) வரையும் படிமுறைகள் இங்கே உள்ளன. சால்வ்ஸ்பேஸ் குறிப்புதவிக் கையேடு இங்கு உள்ளது.… Read More »