Category Archives: கணியம்

எளிய தமிழில் GNU / Linux – மின்நூல்

ஸ்ரீனிவாசன் கணியம் ஆசிரியர் <editor@kaniyam.com> GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. GNU / Linux -ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. ‘எளிய தமிழில் MySQL‘ என்ற மின்புத்தகத்திற்கு நீங்கள் அளித்த பெரும் வரவேற்பே இந்த நூலுக்கு வித்திட்டது. இந்ந நூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி… Read More »

லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்

தனசேகர் <tkdhanasekar@gmail.com> கட்டளை விளக்கம் 1 vmstat விர்சுவல் நினைவகம் (virtual memory) பற்றிய புள்ளி விவரங்களை அளிக்கும் 2 iostat சாதனங்கள் (devices) மற்றும் கடின வட்டு பகிர்வுகளுக்கான (Hard disk partitions) சிபியூ மற்றும் உள்ளீடு வெளியீடு I/O புள்ளி விவரங்களை அளிக்கும் 3 sar கணினி செயல்பாடுகள் பற்றிய அறிக்கை அளிக்கும் 4 ps கணினியில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் ப்ராசஸ் (process) பற்றிய விவரங்களை அளிக்கும் 5 free கணிணியில் உள்ள… Read More »

கட்டற்ற மென்ம தொழிற் பயிலர் தேவை

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ குமரி மாவட்டங்களைச் சார்ந்த B. Com., B. Sc., (Maths, Physics, Chemistry), B. Sc., (Comp. Sci), B. C. A., முடித்த பட்டதாரிகள் கட்டற்ற மென்ம தொழிற் பயிலராகத் (Apprentice) தேவைப்படுகிறார்கள்.தொடக்கத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படும். பணியுடன் சேர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள M.Sc (FOSS) இணைய வழி பட்டப்படிப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். இது தொடர்பாக அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: cde.annauniv.edu/MSCFOSS/Advertisement.pdf M.Sc (FOSS) இணைய வழி… Read More »

FreeBSD – ஒரு அறிமுகம்

FreeBSD – ஒரு அறிமுகம் திறந்த மூலநிரல் இயக்கு தளமான FreeBSD சமீபத்தில் தனது இருபதாவது வயதை கடந்தது. FreeBSD தனது அதிவேக வளர்ச்சியினால் கணினி துறையில் பட்டொளி வீசி தன்னிகரில்லாத இடத்தினை பிடித்தது. மேலும் அது தனது சேவையை பல்வேறு லினக்ஸ் கருவாகவும், லினக்ஸ் வழங்கள்களாகவும் விரிவடைந்தது. ஜுன் 19 ஆம் தேதி தனது 20வது வயதை கடந்த போதிலும் முக்கிய பிணைய உள்கட்டமைப்பு சேவைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. FreeBSDயின் பல பதிய பரிமாணங்களையும்,… Read More »

க்னு/லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)

சென்னையை மையமாய்க் கொண்ட இந்திய க்னு/லினக்ஸ் (ILUGC) குழுவின் முனைப்பால், கணிணி பயனாளர்களுக்கு க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்துப் பார்க்க சிறப்பானதொரு வாய்ப்பினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந் நிகழ்வு 2013 ஆகஸ்டு மாதம் முழுதும் நடைபெற உள்ளது. (August 1 – 31 , 2013). க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை உங்கள் வீட்டுக் கணிணிகளில் முயற்சிக்க இந்த நிறுவல் விழாவினை நடத்துகிறோம்.  எங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள  GNU/Linux Users Group Chennai www.ilugc.in பக்கம் செல்லுங்கள் நீங்கள்… Read More »

கணியம் – இதழ் 19

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர் அனைவருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள்.   சென்ற சில மாதங்களுக்கு முன், நாம் திட்டமிட்ட ‘கட்டற்ற தமிழ் மின்னூல்கள்‘ FreeTamilEbooks.com தனது முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  ஆகஸ்ட் மாதம் முழுதும் ‘க்னு லினக்ஸ் நிறுவல் விழா‘ கொண்டாடப்படுகிறது. விவரங்கள் உள்ளே.  MySQL க்கு புத்தகம் எழுதிய நித்யா அவர்கள் ‘எளிய தமிழில் GNU/Linux’ ன் முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.… Read More »

எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1

GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. GNU/Linux-ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. ‘எளிய தமிழில் MySQL‘ என்ற மின்புத்தகத்திற்கு நீங்கள் அளித்த பெரும் வரவேற்பே இந்த நூலுக்கு வித்திட்டது. இந்ந நூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு… Read More »

கணியம் – இதழ் 18

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணியம் வாசகர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.   இலங்கையில் கணியம் அச்சு வடிவில் வெளியிடப்படுகிறது. “கம்ப்யூட்டர் டுடே” இதழின் அனுராஜ் சிவரஜா அவர்களின் முயற்சியில் மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது.   கணியம் இதழுக்கு கட்டுரைகள் எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இனிய செய்தியின் மூலம் நன்றிகளை தெரிவிக்கிறேன்.   கணியம் இதழுக்கு இன்னும் பல எழுத்தாளர்கள் தேவை. புது எழுத்தாளர்களை உருவாக்க உங்கள்… Read More »

கணியம் – இதழ் 17

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மின் புத்தகங்கள் , அவற்றை வாசிக்கும் கருவிகள் ( கிண்டில், நூக் , ஐபேட், டேபிலேட்) போன்றவை நமது வாசிக்கும் பழக்கத்தையும் ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன. சென்ற இதழை பல்வேறு வடிவங்களில் மின் புத்தகங்களாக வெளியிட்டோம். இதே போல இன்னும் பல துறைகளில் மின்னூல்கள் வெளி வர வேண்டும். இதற்கான நமது அடுத்த முயற்சி freetamilebooks.com இந்த திட்டத்தில், கிரியட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்படும் வலை… Read More »

கணியம் – இதழ் 16

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உபுண்டு லினக்ஸின் அண்மைய பதிப்பான 13.04(Raring Ringtail) 25-ஏப்ரல்-2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்ய: www.ubuntu.com/download/desktop உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர்.  உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. Getting Started With Ubuntu :என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது  ubuntu-manual.org/ உலகெங்கும் உள்ள உபுண்டு லினக்ஸ் பயனர்கள் இதன் வெளியீட்டு விழா ஒன்றை நடத்துகின்றனர்.… Read More »