Category Archives: கணியம்

இலங்கையில் கணியம் – அச்சு வடிவில்

கணியம் இதழ் இப்பொழுது விற்பனையில்! யாழ்ப்பாணம் – 021 567 6700 கொழும்பு – 077 514 3907   கணியம் இதழ் 1 அச்சுப்பிரதியின் முதல் பிரதியை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கணியம் அலுவலகத்தில் அனுராஜ் சிவரஜா வெளியிட திரு ம அருள்குமரன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். ஆக்கங்கள், வர்த்தக விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகளுக்கு: KniyamLK@gmail.com, 021 567 7600

எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(6)

-சுகந்தி வெங்கடேஷ் இதுவரை ஒரு இணையப்பக்கத்தின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தோம். இனி ஒரு இணையப் பக்கத்தின் உட்பொருள்களை எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம். ஒரு இணையப்பக்கம் என்று சொல்லும் போது அதன் உள்ளடக்கங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் அவை உரைகள்,(texts) ஊடகங்கள்(media) ஊடாடும் முறைகள்(Interactive).என்று பிரிக்கப்படுகிறது. உரைகள் என்று பிரிக்கும் போது தலைப்புகள், பத்திகள், இணையச் சுட்டிகள், பட்டியல்கள் மேற்கோள்கள், முகவரிகள்,தனித்தன்மை (entities) கருத்துகள் ,இணைகூற்றுகள்(caption) தேதிகள், ஆகியவற்றை முக்கியமாகப் பார்க்கலாம… Read More »

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி II

லினக்ஸில் கட்ட வரைபடங்கள் (Graph Plotting Tools in Linux) Graph என்று சொல்லப்படும் வரைபடங்களை பள்ளி வகுப்புகளிலிருந்து அனைவரும் அறிந்திருப்பர். பெறப்பட்ட தரவுகளை (Data) வரைபடத்திற்கு மாற்றுவதன் மூலம் எளிதாக தரவுகளை ஆராயவும் மேலும் பல தகவல்களையும் பெறவும் முடியும். இது புள்ளியியல் (Statistics) துறையிலிருந்து அறிவியல் சார்ந்த பல துறைகள் வரை பயன்படுகிறது. மிக அதிகப்படியான தரவுகளை (Very large data analysis) வரைபடத்திற்கு மாற்றவும், ஒப்பு செயலாக்கத்திற்கும் (Simulation) மீகணினிகள் (Super Computer)… Read More »

HTML- 5 பட விளக்கம்

சுகந்தி வெங்கடேஷ் <vknsvn@gmail.com> இணையச் சுட்டிகள் இணையச் சுட்டிகள் இணையத்தின் முதுகெலும்பாகச் செயல் படுகின்றன என்று சொல்ல வேண்டும். ஒவ்வோர் இணையப் பக்கத்தையும் இணைத்து ஒரு பெரிய வலையத்தையே இணையச் சுட்டிகள் உருவாக்கியுள்ளன. இணையச் சுட்டிகள் படங்கள், ஊடகங்கள், இரு இணையப் பக்கத்தின் இன்னொரு பகுதி மற்ற இணையத் தளங்களின் சுட்டிகள் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து வைக்கும் பாலமாக செயல்படுகின்றன.சுட்டிகள் ஓர் இணையதளத்திற்கு மிகவும் முக்கியம் என்பதால் அவற்றை இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்க வேண்டும். பொதுவாக… Read More »

எளிய GNU/Linux commands

இந்தப் பாகத்தில் நாம் ஒருசில எளிய GNU/Linux commands-ஐப் பற்றியும், அதன் பயன்பாட்டினைப் பற்றியும் காணலாம். ஒரு சில commands, arguments-ஐ எடுத்துக்கொள்கின்றன. உதாரணத்துக்கு man, echo போன்றவை arguments-ஐ கொடுத்தால் மட்டுமே செயல்படக் கூடியவை. ஒரு சில commands-க்கு arguments தேவையில்லை. date, who, ifconfig போன்றவை arguments இல்லாமலேயே செயல்படுகின்றன. Arguments என்பது ஒரு command-ன் செயல்பாட்டிற்காக நாம் வழங்கும் மதிப்புகள் ஆகும். இதனை parameters என்றும் கூறலாம். மேலும் GNU/Linux commands அனைத்தும்… Read More »

க்னு / லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)

சென்னையை மையமாய்க் கொண்ட இந்திய க்னு / லினக்ஸ் (ILUGC) குழுவின் முனைப்பால், கணிணி பயனாளர்களுக்கு க்னு / லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்துப் பார்க்க சிறப்பானதொரு வாய்ப்பினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந் நிகழ்வு 2013 ஆகஸ்டு மாதம் முழுதும் நடைபெற உள்ளது. (August 1 – 31 , 2013). க்னு / லினக்ஸ் இயங்குதளங்களை உங்கள் வீட்டுக் கணிணிகளில் முயற்சிக்க இந்த நிறுவல் விழாவினை நடத்துகிறோம். எங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள GNU/Linux Users… Read More »

எளிய GNU/Linux commands

நித்யா <nithyadurai87@gmail.com> Users-ஐ கையாளுதல் இந்தப் பகுதியில் நாம் user management-க்கு உதவும் ஒருசில commands-ஐப் பற்றி விரிவாகக் காண்போம். sudo command sudo-ஆனது நம்மை root user-ஐப் போன்று செயல்பட வைக்கும் ஒரு command ஆகும். இதற்கு முதலில் root-ஆனது நமக்கு sudo-வை பயன்படுத்துவதற்கான அனுமதிகளை வழங்கியிருக்க வேண்டும். அதன் பின்னர் தான் நாம் sudo-வை வைத்து, root user செய்யும் வேலைகளை செய்ய முடியும். உதாரணத்துக்கு root-க்குத் தான் நமது கணினியில் ஒரு புதிய… Read More »

உபுண்டுவின் 4 பொழுது போக்கு விளையாட்டுகள்

ஜோபின் பிராஞ்சல் <jophinep@gmail.com> பின் வரும் ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் இருப்பதாக எண்ணுங்கள்: ஒரு டோரண்டு முடிவதற்கு வெகு நேரம் ஆகிறது. உறுதிபடுத்தும் அஞ்சல் வர நேரம் ஆகிறது. தரமற்ற சேவை மையம், தரமற்ற சேவையை வழங்குகிறது. உங்கள் கணினியுடன் மேற்கண்ட சூழல்களில் நீங்கள் இருக்க நேரிடலாம். இந்த சூழ்நிலைகளில், எளிதாக நேரத்தை செலவிட, கவனத்தை வேறு எதிலாவது செலுத்துவது சிறந்தது. எடுத்துக் காட்டாக, குறிப்பேட்டில் எதாவது கிறுக்கல்கள் செய்யலாம், பாடல் பாடலாம் அல்லது வேறு… Read More »

Digits – என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க!!

ப. அருண் <aalunga@gmail.com> மிகவும் துல்லியமாக ஊகிப்பதில் வல்லவரா? அப்ப இது (4digits) உங்களுக்கான விளையாட்டு தான். இதை விளையாடுவது மிகவும் எளிது. 4 வெவ்வேறு இலக்கங்கள் கொண்ட ஓர் எண்ணை உங்கள் கணிணி தனது மனதிற்குள் (அதாவது, நினைவகத்தில்) நினைத்துக் கொள்ளும். அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு தான்!! ” இதில் என்ன இருக்கு? நாங்கல்லாம் வரிசையா எண்ணை அடித்து கண்டுபிடிப்போம்ல!!” அங்க தான் இருக்கு விளையாட்டே!! ஒரு எண்ணைக் கண்டுபிடிக்க உங்களுக்கு 8 வாய்ப்புகள் தான்.… Read More »

லுபன்டு – ஒரு பார்வை (lubuntu)

‘லுபன்டு‘ (Lubuntu) இயக்குதளத்தை (OS) ஏன் பயன்படுத்த வேண்டும்? நாம் வாழும் பூமியை சீர்கெடுக்கும், மின் குப்பைகளின் அளவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தகுந்த அளவு வளருவது, கணிணி குப்பைகளாகும். இம்மின்குப்பைகள் அதிகரிப்பதற்கு, பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, குறைந்த அளவு திறன் கொண்ட, பழங்கணிணிகளை பயன்படுத்த இயலாது என்ற எண்ணம். அப்பழங்கணிணிகளையும் திறம்பட இயக்கவல்ல, இயக்குதளங்களில் ‘லுபன்டு’ மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ‘லுபன்டு‘வில் என்ன இருக்கிறது? பெரும்பான்மையோர் கணிணியில் செய்யும்… Read More »