Category Archives: எளிய தமிழில் Car Electronics

எளிய தமிழில் Car Electronics 18. CAN உட்பிணையம்

இது நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) CAN உட்பிணையம் (bus) என்பது ஒரு நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) தகவல் பரப்பு அமைப்பாகும். அதாவது இதில் இணைந்திருக்கும் எந்தவொரு கட்டுப்பாட்டகமும் (ECU) தகவலை அனுப்பவும் பெறவும் முடியும். பிணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு ECU வையும் பொதுவாகப் பிணையத்திலுள்ள ஒரு கணு (node) என்று கருதலாம். இது 125 kbps இலிருந்து அதிகபட்சம் 1 Mbps வரை தகவலை அனுப்ப முடியும். இதில் அதிகபட்சமாக 2048 தனிப்பட்ட அடையாளம்… Read More »

எளிய தமிழில் Car Electronics 17. ஊர்திப் பிணைய நெறிமுறைகள்

ஒரு உணரி பல ECU க்களுக்குத் தகவல் அனுப்பவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ECU க்கும் நேரடியாகத் தனித்தனி கம்பி போட்டால் காரில் கம்பிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் பராமரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கப் பிணையத்தைப் பயன்படுத்துகிறோம்.  பிணையமும் (network) உட்பிணையமும் (bus) பிணையம் (network) என்பது மிகவும் பரவலாக இருப்பது. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலகத்தில் உள்ளத் தனிநபர்க் கணினிகள், வழங்கிகள் (இணையம், தரவு, கோப்பு), அச்சு எந்திரங்கள் ஆகியவற்றை இணைப்பது பிணையம். உட்பிணையம் (bus) என்பது… Read More »

எளிய தமிழில் Car Electronics 16. மின்னணு இயக்கத் தடுப்பி

கம்பிகளை நேரடியாக இணைத்துப் பழைய கார்கள் திருட்டு எரியூட்ட சுவிட்சின் (Ignition switch) பின்னால் மின்கலத்திலிருந்து ஒரு கம்பி வரும், மற்றொரு கம்பி  ஓட்டத்துவக்கும் மோட்டாருக்குச் (Starter motor) செல்லும். அந்தக் காரின் சாவியை வைத்துக் காரின் பொறியை (Engine) ஓட்டத்துவக்கினால் இந்தக் கம்பிகள் இரண்டையும் மின் சுற்று (circuit) உள்ளுக்குள் இணைக்கும். உடன் பொறி ஓடத் துவங்கும். சாவியில்லாமல் காரைத் திருட முயல்பவர்கள் இந்த இரண்டு கம்பிகளையும் மானிப்பலகையின் (dashboard) பின்புறமாகக் கழற்றி நேரடியாக இணைக்க… Read More »

எளிய தமிழில் Car Electronics 15. ஊர்திக் கம்பிதைத்தல்

இன்று கார்களில் பல மின்னணு பாகங்கள் பொருத்தப்படுகின்றன என்று நாம் பார்த்தோம். இவை நகர்தல், திருப்புதல், நிறுத்துதல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகள் தவிர, பல்வேறு தகவல், பொழுதுபோக்கு செயல்பாடுகளையும் செய்கின்றன. இந்த மின்னணு பாகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், ஊர்தியின் ஒவ்வொரு பகுதிக்கும் சக்தியையும் சமிக்ஞைகளையும் கடத்துவதற்கும் மின்கம்பிகள் இன்றியமையாதவை. கம்பிதைத்தல் (Wiring Harness) என்பது இம்மாதிரியுள்ள பல நூற்றுக்கணக்கான மின்கம்பிகளை உறைகளுக்குள் கட்டித் தொகுத்து, அடையாளமிட்டு, ஒழுங்கமைத்து வைப்பதற்கான ஒரு பயனுள்ள அமைப்பு ஆகும். இது மின் கம்பிகளை… Read More »

எளிய தமிழில் Car Electronics 14. அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்புகள்

ஓட்டுநரின் கண்களுக்கு எளிதில் புலப்படாத பிரச்சினைகளை உணரிகள் மூலம் கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கும் அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம் கார்களில் வரத் தொடங்கியிருக்கிறது. எச்சரிப்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடும். இதுதவிர ஓட்டுநர் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய சோர்வு தரும் வேலைகளைத் தானியங்கியாகச் செய்யும் அம்சங்களும் வந்துள்ளன. இவற்றைப் பொதுவாக அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்புகள் (Advanced Driver Assistance Systems – ADAS) என்று சொல்கிறார்கள். இவற்றைப் பற்றி விரிவாகக் கீழே… Read More »

எளிய தமிழில் Car Electronics 13. தகவல் பொழுதுபோக்கு அமைப்பு

இந்த எண்ணிம யுகத்தில், ஊர்திகள் அடிப்படை போக்குவரத்து சாதனங்கள் என்பதைத் தாண்டி நடமாடும் பொழுதுபோக்கு மையங்களாக மாறியுள்ளன. காரில் இருக்கும் தகவல் பொழுதுபோக்கு அமைப்பு (Infotainment system), பயணத்தின் போது தொடர்பில் இருக்கவும், மகிழ்விக்கவும், தகவல் தெரிவிக்கவும் வழி செய்கிறது. இது எண்ணிம வானொலிகளில் தொடங்கி வண்டியைப் பின்னோக்கிச் செலுத்த உதவும் நிழல்படக் கருவிகள் வரை பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் காரில் உள்ள கணினி அமைப்புகளைக் குறிக்கிறது. இது பொதுவாகக் காரின் மையத்தில் உள்ள மானிப்பலகையில் (dashboard)… Read More »

எளிய தமிழில் Car Electronics 12. உடற்பகுதிக் கட்டுப்பாட்டகம்

உடற்பகுதிக் கட்டுப்பாட்டகம் (Body Control Module – BCM) பொதுவாக ஊர்தியில் பயணிப்பவர்களின் வசதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. துணை வேலைகளை எளிதாக்குவதன் மூலம் ஊர்தியைப் பாதுகாப்பாக ஓட்டும் முக்கிய வேலையில் ஓட்டுநர் கவனம் செலுத்த வழி செய்கிறது. இது கதவுகள், கண்ணாடிகள், இருக்கைகள், விளக்குகள் ஆகிய பல சாதனங்களைக் கட்டுப்படுத்துகிறது. இவற்றில் மையப் பூட்டுதல் அமைப்பு, தொலைவில் சாவியற்ற திறத்தல் (Remote Keyless Entry – RKE), முன் கண்ணாடித் துடைப்பான், முன் கண்ணாடிக் கழுவும் அமைப்பு,… Read More »

எளிய தமிழில் Car Electronics 11. உமிழ்வுக் கட்டுப்பாடு

ஊர்திகளின் எண்ணிக்கை உயர உயர அவற்றின் உமிழ்வால் பெரிய நகரங்களில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக ஆகி வருகிறது. ஆகவே அரசாங்கங்கள் உமிழ்வுக் கட்டுப்பாட்டைத் (Emission control) தீவிரமாக அமல்படுத்துகின்றன. இவற்றில் எரிபொருள் முழுமையாக எரியாததால் வெளிவரும் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide), நீர்க்கரிமம் (Hydrocarbon) மற்றும் அதிக வெப்ப நிலையில் உருவாகும் நைட்ரஜன் ஆக்சைடுகள் (Nitrogen Oxides) மற்றும் புகைக்கரி (soot or particulate matter) ஆகியவை முக்கியமானவை.  நைட்ரஜன் ஆக்சைடுகள் உணரி (NOx Sensor)… Read More »

எளிய தமிழில் Car Electronics 10. இயங்கும் பாதுகாப்பு அமைப்புகள்

ஊர்தியின் வடிவமைப்பில் புவியீர்ப்பு மையம் (center of gravity) தாழ்வாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது எளிதில் குடைசாயாமல் இருக்கும். எதிர்பாராதவிதமாக ஊர்தி விபத்துக்குள்ளாகி மோதினாலும்கூட உள்ளே இருக்கும் பயணிகளைப் பாதுகாக்க அடிச்சட்டமும் (Chassis) உடற்பகுதியும் வலுவாக இருக்கவேண்டும். எரிபொருள் கலன் எளிதில் தீப்பற்றிக் கொள்ளாமல்  வடிவமைக்கப்படவேண்டும். மானிப்பலகையில் (dashboard) இருக்கும் நெகிழி, இருக்கையிலுள்ள துணிகள், நுரை ரப்பர் (foam rubber) ஆகியவை ஒருக்கால் தீப்பிடித்தாலும் பரவாமல் இருக்க வேண்டும். இவை யாவும் பாதுகாப்பு அமைப்புகள்தான்.  இவற்றை இயங்காப்… Read More »

எளிய தமிழில் Car Electronics 9. சீர்வேகக் கட்டுப்பாடு

சீர்வேகக் கட்டுப்பாடு (Cruise control) என்பது நீங்கள் நெடுஞ்சாலையில் நிலையான வேகத்தில் ஓட்டும்போது உதவும் ஒரு  அம்சமாகும். இது உங்கள் காரை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நிலையாக அமைக்க அனுமதிக்கிறது. இவ்வாறு அமைத்தபின் உங்கள் கால்களை முடுக்கி மிதியிலிருந்து (accelerator pedal) எடுத்துவிடலாம். எனவே, இது நீண்ட பயணத்தில் கால் சோர்வையும் வலியையும் குறைக்கும். நிலையான வேகத்தில் ஊர்தி ஓடும்போது, எரிபொருளை சீராகப் பயன்படுத்துவதால்  எரிபொருளைச் சேமிக்கும். சீர்வேகக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, முடுக்கியை மிதித்து காரை இன்னும்… Read More »