12 ஆம் வகுப்பு புதிய தமிழ் பாடத்தில் மின்னூல் உருவாக்கம் – ஆசிரியர்களுக்கான பயிற்சி – நிகழ்வுக் குறிப்புகள்
தமிழ்நாட்டின் புதிய பாடத்திட்டங்களின் படி, 11 ஆம் வகுப்பில் தமிழ் தட்டச்சு தொடங்கி வலைப்பதிவு உருவாக்கம் வரை கற்கின்றனர். 12ஆம் வகுப்பு, தமிழுக்கான புதுப் பாடத்திட்டத்தில், மின்னூல்கள் உருவாக்கம் பற்றிய அறிமுகம், செய்முறைப் பயிற்சிகளை சேர்க்கலாம் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாடநூல் ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதற்காக, நவம்பர் 29, 2018 அன்று சென்னை DPI வளாகத்தில், த.சீனிவாசன், பாடநூல் எழுதும் ஆசிரியர்களுக்கென ஒரு மின்னூல் உருவாக்கம் பயிற்சி அளித்தார். மின்னூலின் கட்டமைப்பு, முன்விவரம், பின்விவரம், மேலடி,… Read More »