Category Archives: Minutes-of-meetings

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழ்க்கணிமை பற்றிய உரை

பிப் 1 2020 அன்று சென்னையில் Gradient Optimisers Community Meetup நிகழ்வில், ‘தற்கால தமிழ்க்கணிமை’ பற்றி உரையாற்றினேன்.   www.meetup.com/Chennai-Gradient-Optimizers/events/267987204/ பின்வரும் படவில்லைகளைப் பயன்படுத்தினேன். கணித்தமிழும் மென்பொருள்களும் – தேவைகளும் தீர்வுகளும் from Shrinivasan T Open-Tamil Python Library for Tamil Text Processing from Shrinivasan T கலந்து கொண்டோரில் நிரலர்கள் அதிகம். நிரல் மூலம் மொழிக்கு அளிக்க்கூடிய பங்களிப்புகளையும் தேவைகளையும் அறிந்து வியந்தனர். open-tamil python library பற்றியும் விளக்கினேன். உரையின்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் – உடுமலைப்பேட்டை

நிகழ்வு : உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் நாள் : 05.02.2020 நேரம் : மாலை 5 மணி இடம் : தமிழ் இ சா்வீஸ், வக்கீல் நாகராஜன் வீதி. உடுமலைப்பேட்டை. உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியில் பிஸிக்ஸ் துறையில் பயிலும் 6 மாணவர்கள் மற்றும் லினக்ஸ் பயன்படுத்த ஆர்வமுள்ள 5 நபர்கள் என மொத்தம் 11 பேர்களுக்கு உபுண்டு 18.04 நீண்ட கால வெளியீடு அவர்களின் மடிக்கணிணியில் விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்துவாறு பதியப்பட்டது. மேலும்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – தொல்லியல் பயிற்சியில் கட்டற்ற மென்பொருள் அறிமுகம்

  கடந்த 08.01.2020 அன்று சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்ற ‘தொல்லியல் -ஓர் அறிமுகம்‘ பயிலரங்கில், உதயசங்கர், சீனிவாசன் இருவரும் கட்டற்ற மென்பொருட்கள் மூலம் தொல்லியலை பொது மக்களுக்கு எடுத்துச் செல்வது பற்றி உரையாற்றினர். தமிழி(பிராமி) எழுத்துரு உருவாக்கம், அவற்றின் பயன்பாடுகள், ஜீனவாணி எனும் மென்பொருள் மூலம் தமிழி(பிராமி) எழுத்துக்களை உருவாக்கிப் பகிர்தல், அதன் கைபேசி செயலி ஆகியன பற்றி உதயன் விவரித்தார்.   தொல்லியல், தமி்ழ் போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு அரசு, கல்வி நிறுவனங்கள்… Read More »

தமிழ்ப்புலவர் தளத்தின் மூல நிரல் வெளியீட்டு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

  மென்பொருள் அறிஞர் திரு இராமசாமி துரைப்பாண்டி அவர்களின் ‘தமிழ்ப்புலவர்‘  tamilpulavar.org/ எனும் மென்பொருள் தளத்தினை, தமிழ் உலகுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்கும் விழா, இசைப்புலவர்  www.isaipulavar.in/ தளத்தின் மென்பொருள் தொடக்கவிழா , மற்றும் புத்தக வெளியீட்டுவிழா என அனைத்தும் ஒரே தமிழ்விழாவாக 10.01.2020 அன்று மாலை 04 .00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில் நடந்தது. நிகழ்வுக் குறிப்புகள் – திரு இராமசாமி துரைப்பாண்டி அவர்களின் இசைப்புலவர் தளத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும்,… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை 13 10 2019

நாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை இடம்: பயிலகம் 7 விஜய நகர் முதல் தெரு வேளச்சேரி சென்னை 42 (நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்) ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில் 40 பேர் கலந்து கொண்டனர். பின்வரும் தலைப்புகளில் சீனிவாசன் உரையாற்றினார். 1. மின்னூல் – வகைகள் – epub, mobi, PDF, HTML 2. மின்னூல் உருவாக்க உதவும் மென்பொருட்கள் – LibreOffice Writer, MS Office… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019

  நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிரல் திருவிழா-2 கணியம் அறக்கட்டளை சார்பில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. காலை பத்து மணிக்குத் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணியம் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. சீனிவாசன் முதல் ஆளாக வந்து, கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களுடன் உரையாடத் தொடங்கினார். நிரல் திருவிழா எதற்கு? கணினித் துறையில் எப்படி ஊர் கூடித் தேர் இழுக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு விளக்கமாகச் சொன்னார். வந்த இளைஞர்களுக்குக் கணியத்தைப் பற்றிய அறிமுகத்தையும் சீனிவாசனைப்… Read More »

விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – தொடக்க விழா – நிகழ்வுக் குறிப்புகள்

கல்விக்கு மறுபெயர் காசு என்கிற மோசமான நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கோம்! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதே போல கல்வி என்பதும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவத்தை பலர் உணராமல் மக்களுக்கு இன்றும் கல்வியை எட்டா கனியாக மாற்றி வருகின்றனர். கல்வியில் பல மாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப மாறி கொண்டே வருகிறது. இதில் தொழிற்நுட்பத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இன்றைய கால கட்டத்தில்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – 12/05/2019

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி FTE ஆன்ட்ராய்டு செயலியானது freetamilebooks.com. எனும் இணைய தளத்திலிருந்து மின்நூல்கள் வடிவில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து நமது கைபேசி வழியே எளிதாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு செயலாகும். இது அமேசான் கிண்டில் போன்ற கருவிகளில் படிக்கும் ஒரு அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது முற்றிலும் இலவசமான செயலி மற்றும் இலவசமான புத்தகங்கள் அடங்கியது. App Link – play.google.com/store/apps/details?id=com.jskaleel.fte&hl=en_US FreeTamilEbooks – இணையதளம் FTE இணையதளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்

  கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுள் ஒருவரான திரு. அன்வர், எழுத்தாளர்களிடம் கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி பரப்புரை செய்ய, கோவைக்கு பயணம் செய்தார். இதற்கான உரையாடலை இங்கே காணலாம் – github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/16 மார்ச்சு 16, 2019 முதல் மார்ச்சு 23, 2019 வரையிலான கோவை பயணத்தில், பின்வரும் எழுத்தாளர்களை சந்தித்தார். 1. கோவை ஞானி 2. பாமரன் 3. நாஞ்சில் நாடன் 4. சம்சுதீன் ஹீரா கோவை ஞானி அவர்கள் தமது படைப்புகளை பொதுக்கள உரிமையில் வெளியிட்டார்.… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் கணியம்

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவில் உத்தமம் சார்பில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் மற்றும் மின்ஊடகங்களில் போலிச் செய்திகளை கண்டறிதல் எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கணியம் அறக்கட்டளை சார்பாக திரு. செல்வமுரளி அவர்கள் கலந்துகொண்டு, தமிழில் கட்டற்ற மென்பொருள், கட்டற்ற மென்பொருளின் வழியாக தமிழ் கணிமை வளர்ந்தது, பிரபலமான மென்பொருள்களை தமிழுக்கு மொழிமாற்றம் செய்தது, தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகள் மற்றும் தமிழ்க் கணிமைக்காக பல ஆண்டுகளாக… Read More »