software testing

சாப்ட்வேர் டெஸ்டிங் – நேரலை வகுப்புகள்

இன்று முதல், பயிலகம் யூடியூப் பக்கத்தில் இந்திய நேரம் ஏழு மணி முதல் எட்டு மணி வரை, சாப்ட்வேர் டெஸ்டிங் (Manual Testing) வகுப்புகள் நேரலையாக ஒளிபரப்பப்படவிருக்கின்றன.  விருப்பமுடைய நண்பர்கள் கலந்து கொள்ளலாம். இணைந்து கொள்ள: www.youtube.com/channel/UCdw_PocG9G8-y4f6wYkz8og பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம்.

சாப்ட்வேர் டெஸ்டிங் – 23 – தகவெளிமை முறை(Agile Methodology)

அண்மைக்காலங்களில் பல மென்பொருள் நிறுவனங்கள் தகவெளிமை முறைக்கு மாறியிருக்கின்றன. ஏன் இந்த மாற்றம்? அப்படி என்ன இருக்கிறது இந்த முறையில்? இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமே என்று நினைப்பவர்கள் கணியத்தில் திரு. அசோகன் அவர்கள் எழுதியுள்ள “எளிய தமிழில் Agile/Scrum” மின் நூலில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். விரிவாகத் தெரிவதற்கு முன்னர், தகவெளிமை(Agile)…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 22 – மென்பொருள் வாழ்க்கை வட்டமும் நடைமுறைகளும்

குறிப்பு: இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன்பு, 1)சாப்ட்வேர் டெஸ்டிங் – 5 – எங்கு தொடங்குவது? 2) சாப்ட்வேர் டெஸ்டிங் 6 – சாப்ட்வேர் எங்கு தொடங்குகிறது? 3) சாப்ட்வேர் டெஸ்டிங் – 10 மென்பொருள் உருவாக்கமும் சோதனையும் ஆகிய பதிவுகளைப் படிக்க வேண்டியது இன்றியமையாத் தேவை. மென்பொருள் வாழ்க்கை வட்டம்(Software Development Life Cycle)…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 21 – இயங்கு சோதனையும் திறன் சோதனையும் – 2

இந்தப் பதிவில் முந்தைய பதிவில் சொன்னது போல, திறன் சோதனைகளைப் பார்ப்போமா? திறன் என்றால் என்ன என்று முந்தைய பதிவிலேயே பேசிவிட்டோம் அல்லவா? எனவே நேரடியாக, அதன் வகைகள் என்னென்ன என்று பார்க்கத் தொடங்குவோமா? 1) பயன்பாட்டுச் சோதனை (Usability Testing) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் – ஒரு மென்பொருளின் வெற்றி என்பது அந்த மென்பொருள்…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 21 – இயங்கு சோதனையும் திறன் சோதனையும்

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது – ஒரு மென்பொருளின் இயங்குதன்மை(Functionality)யை எப்படி எல்லாம் சோதிப்பார்கள் என்பதைப் பார்ப்போம். அடுத்த பதிவில் அந்த மென்பொருளின் திறனை(Performance) எப்படிச் சோதிப்பார்கள் என்பதைப் பார்ப்போம்! முதலில் இயங்கு தன்மை என்றால் என்ன? திறன் என்றால் என்ன? அதை முதலில் சொல்லுங்கள் என்கிறீர்களா? சரி தான்! அதை முதலில் பேசி…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 20 – மென்பொருள் சோதனை நெறிமுறைகள் – 2

நெறிமுறை #5: பூச்சிவிரட்டலில் புதிய முறைகள் (Pesticide Paradox) மென்பொருள் உருவாக்கம் என்பது காலத்திற்கேற்ப மாறுகின்ற ஒன்று. ஒரு காலத்தில் இணையத்தளம் வடிவமைப்பே பெரிய விடயமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ பிஹெச்பி(PHP) முதலிய கட்டற்ற மென்பொருட்கள், வேர்டுபிரஸ், ஜூம்லா போன்ற இணையத்தள வடிவமைப்புக் கட்டுமானங்கள் ஆகியன வந்து விட்டன. இதனால் ஒரு நாள், இரண்டு நாட்களிலேயே…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 20 – மென்பொருள் சோதனை நெறிமுறைகள்

மென்பொருள் சோதனைக்கு அடிப்படையான வழிமுறைகளை ஏழு நெறிமுறைகளாக(Software Testing Principles)த் தொகுத்திருக்கிறார்கள். அவற்றைத் தாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். நெறிமுறை #1: பிழைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று காட்டுவது தான் சோதனை. (Testing shows presence of defects.) பிழைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று காட்டுவது தான் சோதிப்பது ஆகும். எனவே இந்த நெறிமுறையை…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 19 – மென்பொருள் சோதனை வகைகள்

பொதுவாக மென்பொருள் சோதனைகளை(Software Testing – Types) இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நிலைத்த வகை சோதனை (Static Testing) இயக்க வகை சோதனை(Dynamic Testing) நிலைத்த வகை சோதனை (Static Testing): நிலைத்த வகை சோதனை என்பது உண்மையில் மென்பொருளைச் சோதிப்பது அன்று! மென்பொருளின் நிரல்(Code), தேவை ஆவணங்கள்(Requirement Documents), வடிவமைப்பு ஆவணங்கள்(Design Documents) ஆகியவற்றைச்…
Read more

பிழை வாழ்க்கை வட்டம்(Bug Life Cycle)

வாழ்க்கை ஒரு வட்டம்‘ என்று தெரியும் – அதென்ன பிழை வாழ்க்கை வட்டம்? பிழையான வாழ்க்கை வட்டமா? என்று கேட்கிறீர்களா? இல்லை! நம்முடைய வாழ்க்கை எப்படி ஒரு வட்டமோ, அதே போல, சாப்ட்வேர் டெஸ்டிங் மூலமாக நாம் மென்பொருளில் கண்டுபிடிக்கும் பிழைகளுக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் இருக்கிறது! எனவே, இது பிழையின் வாழ்க்கை வட்டம்! அதைப்…
Read more

‘பிழை’ப்பைத் தொடர்வோம்!

போன பதிவு பல கேள்விகளுடன் முடிந்திருந்தது. அந்தக் கேள்விகளுக்கும் எல்லாவற்றிற்கும் பதில் பார்த்து விடுவோமா? பிழை எண் (Bug ID): ஒவ்வொரு பிழைக்கும் ஒதுக்கப்படும் தானியங்கி எண். இந்த எண்ணைக் கொண்டு தான் பிழையை அடையாளம் கண்டுபிடிப்பார்கள். நாள், நேரம்: பிழை பதியப்படும் நாள், நேரம் – ஆகியன இங்கு குறிக்கப்படும். கண்டுபிடித்தவர் (Opened By):…
Read more