எளிய தமிழில் CAD/CAM/CAE 14. வளைந்த மேற்பரப்பு (Curved surface) மாதிரியமைத்தல்
எல்லா விதமான 3D வடிவங்களையுமே திட வடிவம் உருவாக்கும் உத்திகள் மூலம் தயாரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கார் (car body), முடி உலர்த்தி (hair dryer), தலைக்கவசம் (helmet), மிக்சி (mixie) போன்றவற்றின் மேற்பரப்புகள் சீரற்ற (irregular) வடிவம் கொண்டவை. முன்னர் பார்த்தது போல அடிப்படை வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி இவற்றை நாம் உருவாக்க முடியாது. திட வடிவ மாதிரி உருவாக்கும் கருவிகள் (solid modeling tools) ஒரு திட… Read More »