எளிய தமிழில் CAD/CAM/CAE 4. திட வடிவம் உருவாக்கும் உத்திகள்
திட வடிவ ஆக்கம் (Constructive solid geometry – CSG) நம்மிடம் கோளம், கூம்பு, உருளை, கனச்செவ்வகம், வடை வடிவம் (torus) போன்ற அடிப்படை வடிவங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்த அடிப்படை வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைதான் திட வடிவ ஆக்கம். இந்த திட வடிவ ஆக்கத்தில் மூன்று வழிமுறைகள் உள்ளன. முதல் வழி இரு வடிவங்களைச் சேர்த்தல் (union). இவை மெய்நிகர் வடிவங்கள் தானே. ஆகவே ஒன்றுக்குள் ஒன்று நுழையும்.… Read More »