காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 21-02-2021 – மாலை 4 மணி

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Python நிரலாக்கத்தில் lists ஓர் அறிமுகம் – முருகன் 3. Ansible மூலம் பல்வேறு கணினிகளை எளிதில் நிர்வகித்தல் – ஓர் அறிமுகம் – ஜெய் வரதராஜன், கனடா Ansible பற்றி தமிழில் இங்கே படிக்கலாம் –… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 8. VR தலையணி (headset) வகைகள்

கணினி அல்லது விளையாட்டு முனையம் (gaming console) VR தலையணி கணினி அல்லது விளையாட்டு முனையத்தில் (game console) ஓடும் விளையாட்டு அல்லது செயலிக்கு காட்சி சாதனமாக செயல்படும் கம்பியால் இணைக்கப்பட்ட தோற்ற மெய்ம்மை (VR) தலையணிகள். எல்லா வேலைகளையும் கணினி அல்லது விளையாட்டு முனையம் செய்து விடும். ஆகையால் தலையணி எடை குறைவாக இருக்கும். ஆனால் கம்பியால் இணைத்திருப்பது தொந்தரவாக இருக்கலாம். திறன்பேசி (smartphone) VR தலையணி திறன்பேசியைப்  பொருத்தக்கூடிய வில்லை (lens) வைத்த அட்டைப்பெட்டி… Read More »

எளிய தமிழில் DevOps-8

Kafka   நிகழ் நேரத்தில் அதிக அளவு உற்பத்தியாகும் (throughput) தரவு ஊட்டங்களை (data feed) குறைந்த காலதாமதத்தில் (low latency) பெற்று ப்ராசஸ் செய்வதற்கான ஒரு கட்டமைப்பே kafka ஆகும். இது scala மொழியில் எழுதப்பட்ட திறந்த மூல மென்பொருள் கருவி ஆகும். ப்ரொடியூசர் கன்ஸ்யூமர் என்னும் இருவேறு அப்ளிகேஷன்களுக்கு இடையே செய்திகளைத் தாங்கிச் செல்லும் இடைத்தரகர் போன்று இக்கருவி செயல்படும். IOT சென்சார் தரவுகள், சேவை மையங்களில் தினசரி மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகள், ஒரு… Read More »

எளிய தமிழில் DevOps-7

Jenkins   ஒரு மென்பொருள் உருவாக்கத்தின் பல்வேறு நிலைகளான அப்ளிகேஷனின் உருவாக்கம், சோதனை, பல்வேறு சர்வர்களில் நிறுவுதல் போன்ற வெவ்வேறு தனித்தனி செயல்களை தானியக்க முறையில் தொடர்ச்சியாக நிகழ்த்த உதவும் கருவியே ஜென்கின்ஸ் என்று அழைக்கப்படுகிறது. எனவேதான் இது தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு(CI) மற்றும் தொடர்ச்சியான வழங்குதலுக்கான(CD) கருவி என்று அழைக்கப்படுகிறது. டெவலப்பர் ஒவ்வொருமுறை மூல நிரலில் மாற்றம் செய்து கமிட் செய்யும்போதும், அதற்கான அப்ளிகேஷனை சுலபமாக சர்வரில் நிறுவி சோதித்துப் பார்க்க உதவும் ஒரு கருவியாக ஜென்கின்ஸ்… Read More »

இந்திய விக்கிமீடியா கூடல் 2021

வணக்கம், ஒவ்வொரு ஆண்டு இந்திய அளவில் ஏதேனும் ஒரு நகரில் விக்கிமீடியா கூடல்  நடைபெறும். இந்த ஆண்டு முழுமையாக இணையவழியாக பிப்ரவரி 19,20,21 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2021 இந்தச் சந்திப்புகள் பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் நடைபெறும். விக்கிச் சமூகத்தின் கொள்கைகள், வாய்ப்புகள், அனுபவங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிரும் களமாக இது நடைபெறுகிறது. மாணவர்கள், மொழி ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தொழில்நுட்பப் பிரியர்கள் என அனைவருக்கும் ஏற்ப அமர்வுகள் நடைபெறுகிறது. முழு அமர்வுகளை இங்கே காணலாம். meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2021/Program இந்தாண்டு குறிப்பாக GLAM திட்டங்கள் மூலம் காப்பகங்களில் உள்ள முக்கிய வளங்களை ஆவணமாக்கல்,… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 7. VR அசைவூட்ட வளங்கள் பதிவிறக்கம்

VR அசைவூட்டங்கள் தயாரிக்க உங்களுக்கு முப்பரிமாண மாதிரிகள் (models), இழையமைப்புகள் (textures) மற்றும் நிழலமைப்புகள் (shaders) போன்ற வளங்கள் தேவை. உங்கள் திட்டத்தையொத்த அசைவூட்டங்களே glTF கோப்பாகக் கிடைத்தாலும் பயனுள்ளதே. இவற்றைத் தங்கள் வேலைகளுக்காகத் தயாரித்த பலர் உரிமக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். தோற்ற மெய்ம்மை (VR) அசைவூட்ட glTF கோப்புகள் நம்முடைய திட்டத்துக்கு அருகாமை அசைவூட்டக் கோப்புகளே திறந்த உரிமங்களில் கிடைத்தால் நம் வேலை எளிதாகக்கூடும்.  glTF கோப்பு வகையை அசைவூட்டத் தொகுப்பிகளில்… Read More »

விக்கி பொதுவகத்தில் தொகுப்புப்பணிகள் – பிப் 14 2021 மாலை 4 மணி

தமிழ்ஊடகவளங்களை_மேம்படுத்துவோம்! இன்று 14.02.2021 இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ‘கட்டற்ற கணித்தமிழ்: விக்கி பொதுவகத்தில் தொகுப்புப்பணிகள்’ என்னும் இணையவழி பயிற்சியின் முதலாம் அமர்வை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். அன்புடன்,முனைவர் தமிழ்ப்பரிதி மாரி+91-7299397766 பயிற்சியில் பங்கேற்க:Join Zoom Meetingmoe-singapore.zoom.us/j/87863712875Meeting ID: 878 6371 2875Passcode: 999459 பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-02-2021 – மாலை 4 மணி

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Python நிரலாக்கத்தில் lists ஓர் அறிமுகம் – முருகன் 3. Ansible மூலம் பல்வேறு கணினிகளை எளிதில் நிர்வகித்தல் – ஓர் அறிமுகம் – ஜெய் வரதராஜன், கனடா Ansible பற்றி தமிழில் இங்கே படிக்கலாம் –… Read More »

பைந்தமிழ் – பைதான் நிரலாக்கம் ஒரு அறிமுகம்

பைந்தமிழ் (PyTamil) என்பது ஒரு பைதான் நிரலாக்கப் பொதி. இதன் மூலம் தமிழ் எழுத்துகளை பைதான் மொழியில் எளிதில் கையாளலாம்.  Open-Tamil தொகுப்பு போல இதுவும் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் வார்த்தைகளை சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல், மாத்திரை அளவிடல், குறள், வெண்பா – யாப்பு ஆராய்தல் ஆகியவற்றை செய்யலாம். காண்க – srix.github.io/pytamil/ மூலநிரல் – github.com/srix/pytamil அதன் உருவாக்குனர் திரு. ஶ்ரீராம் neosrix@gmail.com (பெங்களூர்)  இன்று பைந்தமிழ் பற்றிய நேரடி… Read More »

எளிய தமிழில் DevOps-6

Docker Volume   கீழ்க்கண்ட உதாரணத்தில் என்னென்ன தரவுகள் மங்கோவிற்குள் செலுத்தப்பட்டன என்பதை ஒரு log ஃபைல் போன்று சேமிப்பதற்கான நிரல் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோப்பு கன்டெய்னருக்குள்ளேயே சேமிக்கப்படும். கண்டெய்னர் தனது இயக்கத்தை நிறுத்தும் போது இதுவும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகவே கன்டெய்னருக்குள்ளேயே சேமிக்கப்படும் இதுபோன்ற தரவுகளை வெளியே எடுத்து லோக்கலில் அணுகுவதற்கு volume என்ற ஒன்று பயன்படுகிறது. இதனைக் கையாள்வது பற்றி கம்போஸ் ஃபைலில் பார்க்கலாம். This file contains hidden or bidirectional… Read More »