“ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது (A picture is worth a thousand words)” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது பக்கம் பக்கமாக எழுதிப் புரிய வைக்கக் கடினமான ஒரு சிக்கலான கருத்தை ஒற்றைப் படத்தில் தெரிவிக்க முடியும் என்பதே இதன் பொருள். ஆனால் கணினிகளைப் பொறுத்தவரை, அவை ஒரு படத்தில் உள்ளது என்ன என்று புரிந்து கொள்வது மிகக் கடினம். ஏனெனில் அவை பார்ப்பது படத்தையல்ல, ஒரு பெரும் எண்களின் அணியை.… Read More »
MinGWஎனும் சுருக்கமான பெயரில் அழைக்கப்பெறும் விண்டோஇயக்கமுறைமைகளில் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான மைக்ரோசாப்ட்டின்சொந்த குறைந்தபட்ச குனு விண்டோ(Minimalist GNU for Windows) மேம்பாட்டு சூழலானது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த.MinGW என்பது பொது நலன் மென் பொருளாக பதிவு செய்யப்பட்ட ( பதிவு எண் 86017856) ஒரு வர்த்தக முத்திரையாகும்; இது MinGW.org எனும் இணையதளத்தின் சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இதை வேறு எந்த செயல்திட்டத்திற்கும் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்கப்படமாட்டாது. மிகமுக்கியமாக MinGW என்பது ஒரு முழுமையான திறமூல நிரலாக்க கருவி… Read More »
spaCy என்பது ஒரு திறமூல பைதான் நூலகமாகும், இது உரைகளிலான தரவை இயந்திர நட்பு வில்லைகளாக பிரித்திட உதவுகிறது. உரையை சுத்தம் செய்வதற்கும் செயலாக்குவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் பயன்படுத்தக்கூடிய பலவிதமான கருவிகள் இதில் உள்ளன, மேலும்இது இயற்கையான மொழி செயலாக்கத்திற்கு உதவுகிறது. இயற்கையான மொழி செயலாக்கம் (Natural language processing (NLP)) என்பது உரைவடிவிலான தரவுகளை பயன்படுத்திகொள்ளும்போதான இயந்திர கற்றலுக்கு (machine learning (ML)) ஒரு முக்கியமான முன்னோடியாகும். உரைகளிலான தரவானது பெரும்பாலும் கட்டமைக்கப்படாதது மேலும் இயந்திர கற்றல்… Read More »
ஹ்யூ உருமாற்றம் (Hough transform) முதன்முதலில் ஹ்யூ உருமாற்றம் படத்தில் உள்ள கோடுகளை அடையாளம் காண்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஆனால் பின்னர் இது வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்ற வடிவங்களையும் அடையாளம் காண விரிவாக்கப்பட்டது. மேலும் சமதளங்களையும் மற்றும் உருளைகள் (Planes and cylinders) போன்ற முப்பரிமாணப் (3D) பொருட்களையும் கூடக் கண்டறிய முடியும். ஆக கோடுகள், வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்ற, அளவுரு சமன்பாடு (Parametric equation) மூலம் குறித்துக் காட்ட இயலும் எல்லாவித வடிவங்களையும், ஹ்யூ உருமாற்றம்… Read More »
இன்று முதல், பயிலகம் யூடியூப் பக்கத்தில் இந்திய நேரம் ஏழு மணி முதல் எட்டு மணி வரை, சாப்ட்வேர் டெஸ்டிங் (Manual Testing) வகுப்புகள் நேரலையாக ஒளிபரப்பப்படவிருக்கின்றன. விருப்பமுடைய நண்பர்கள் கலந்து கொள்ளலாம். இணைந்து கொள்ள: www.youtube.com/channel/UCdw_PocG9G8-y4f6wYkz8og பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம்.
செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டமாக இருக்கும் செயற்கை பொது நுண்ணறிவானது(AGI), மனித அறிவைவிட கணினியின் நுண்ணறிவை மீறச்செய்கின்றது, இது நிச்சயமாக திறமூலமாக இருக்கும். புத்திசாலித்தனமான மனிதர்களால் தீர்வுசெய்யக்கக்கூடிய பரந்த அளவிலான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க இது முயல்கிறது. இது குறுகிய AIஎனும் செயற்கை நுன்னறிவுடன் (இன்றைய AI இன் பெரும்பகுதியை உள்ளடக்கியது) நேர்மாறாக உள்ளது, இது ஒரு குறிப்பிட்ட சிக்கலில் மனித திறன்களை மீற முயற்சிக்கிறது. எளிமையாகச் சொல்வதானால், AI இன் அனைத்து எதிர்பார்ப்புகளையும் AGIஆனது நிறைவேற்றும்.… Read More »
படங்களிலிருந்து நமக்குப் பயனுள்ள அம்சங்களைப் பிரித்தெடுக்க பட அலசல் செயலாக்கம் (image processing) செய்கிறோம். அடுத்து வரும் ஒவ்வொரு வேலைக்கும் ஒன்றுக்கு மேல்பட்ட செயல்முறைகள் நாம் பார்த்த மென்பொருட்களில் உள்ளன. நம் வேலைக்கு ஏற்றவாறு நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விளிம்பு கண்டறிதல் (Edge detection) ஒரு படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது இடைநிறுத்தங்கள் (discontinuities) வரும் இடங்களை விளிம்புகள் என்று நாம் கூறலாம். வண்ண மாறல் விகிதம் (color gradient) என்ற நுட்பம் வெவ்வேறு பொருட்களின்… Read More »
1. ஆங்கிலம் தெரியவில்லை, அதனால் என்னுடைய முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. 2. சிறு வயதில் எனக்கு இங்கிலீஷ் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கவில்லை, அதன் பாதிப்பை இன்று வரை நான் உணர்கிறேன். 3. ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் இருப்பதால், இங்கிலீஷ் என்றாலே பயமாக இருக்கிறது. 4. ஆங்கிலம் தெரியாமல் இருப்பதால் நேர்காணல்(இன்டர்வியூ)களில் வெற்றி பெற முடியவில்லை. இப்படி, ஆங்கிலம் தெரியாமல் அவதிப்படுபவரா நீங்கள்? உங்களுக்கான ஆங்கில அடிப்படை இலக்கண வகுப்புகளைப் பயிலகம் திட்டமிடுகிறது. இவ்வகுப்புகள் இணையம் வழியே இரண்டு… Read More »
இது ஒரு சக்திவாய்ந்த, சிறிய, புதிய, திற மூல FreeBSD இன்அடிப்படையிலான இயக்கமுறைமையாகும். இது அதனுடைய வரைகலை இடைமுகத்துடன் PC-BSD , TrueOS ஆகியவை போன்ற கடந்த கால மேஜைக்க்கணினி BSD செயல்திட்டங்களுக்கு மரியாதை செலுத்துகின்றது மேலும் நிறுவுகைசெய்திடாமல் நேரடியாகசெயல்படும், கலவையான USB / DVD image போன்ற கூடுதல் கருவிகளை சேர்க்கின்றது. இது பயன்படுத்த முற்றிலும் இலவசமாகவும் BSD உரிமத்தின் கீழும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்படுகிறது. இது முற்றிலும் FreeBSD மேஜைக்கணினியின் புகழ்பெற்ற நிலைத்தன்மையை அடிப்படையாகக்… Read More »
தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்ற ஆண்டு, தமிழ் ஆய்வுகளுக்கான சொல்திருத்தி உள்ளிட்ட 10 மென்பொருட்களை வெளியிட்டது. இவை மூலநிரல்களுடன் வெளிவர பலரும் ஆவலாகக் காத்திருந்தோம். இன்று அவற்றுகான மூல நிரல்களை வெளியிட்டுள்ளதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அரசின் (மக்களின்) பொருட்செலவில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் யாவும் மூலநிரலுடன், கட்டற்ற மென்பொருட்களாக வெளிவரும் போது தான், பலரும் அவற்றை பல்வேறு வகைகளில் வளர்த்தெடுக்கவும் கற்று பல புத்தாக்கங்கள் உருவாக்கவும் இயலும். அந்த வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம்… Read More »