லினக்ஸ் மின்டில் செலினியம் வெப் டிரைவர்,பயர்பாக்ஸ் டிரைவர் – பைத்தானுக்கு நிறுவுவது எப்படி?

செலினியம் திட்டப்பணி செய்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள், செலினியம் வெப் டிரைவர், பயர்பாக்ஸ் டிரைவர் ஆகியவற்றை லினக்ஸ் மின்டில் நிறுவுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். லினக்சில் மென்பொருள் நிறுவல் என்பது மிக மிக எளிமையான ஒன்று. டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். 1. நீங்கள் ஏற்கெனவே pip3 நிறுவியிருந்தால் நேரடியாக இரண்டாம் படிக்குப் போய் விடுங்கள். இல்லாவிட்டால் sudo apt-get install pip3 என்று கொடுங்கள். pip3 நிறுவப்பட்டு விடும். 2. இப்போது செலினியம்… Read More »

முற்போக்கான இணைய பயன்பாடுகள் (PWA )

தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் இணைய பயன்பாடுகள், சொந்த பயன்பாடுகள் ஆகிய இரண்டுவகைகளாக உள்ளன, அவற்றுடன்மூன்றாவதாக, முற்போக்கான இணைய பயன்பாடுகளும் (progressive Web applications (PWAs)) உள்ளனஎன்ற செய்தியையும் மனதில் கொள்க, பின்கூறியவை முந்தைய இரண்டின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்து கின்றன. பெரும்பாலான மக்கள் அன்றாட தேவைகளுக்கு இணையத்தை பயன்படுத்துவதால் இந்த புதிய முற்போக்கான வலை பயன்பாடுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். இருப்பினும், இந்த சொல் இன்னும் சிலரைக் குழப்பிகொண்டேயிருக்கின்றது. வேறொரு களத்திலிருந்து சமீபத்தில் இணைய மேம்பாட்டிற்கு வருபவர்கள் அல்லது புதிய… Read More »

எளிய தமிழில் Computer Vision 6. எண்களின் அணிகளும் (arrays) செய்முறைகளும்

படங்களைக் கணினியில் எண்களாக சேமித்து வைக்கிறோம் என்று பார்த்தோம். எண்களாக எந்த முறையில் சேமித்து வைக்கிறோம் என்பதை இங்கு மேலும் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம். வரிசைகளும் (rows) பத்திகளும் (columns) தடங்களும் (channels) எடுத்துக்காட்டாக இந்த எளிய படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் நான்கு வரிசைகளும் (rows) ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து பத்திகளில் (columns) படவலகுகளும் (pixels) உள்ளன. ஒவ்வொரு படவலகிலும் உள்ள வண்ணத்தை மூன்று சிபநீ (RGB) அடிப்படை வண்ணங்களாகப் பிரித்து மூன்று தடங்களில் சேமிக்கப்… Read More »

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது ரொம்ப முக்கியமானது – அந்த மென்பொருளைப் பற்றி என்னென்ன தெரியும் என்று எழுதி வைப்பது. ஏன் இப்படி எழுதி வைக்க வேண்டும்? நாம் வேலை செய்யப்போவது கட்டற்ற மென்பொருள் அல்லவா! அதனால் பலரும் பங்களிக்க வருவார்கள். அப்படிப் பங்களிக்க வருபவர்களுக்கு உதவியாக, 1. மென்பொருள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? 2. மென்பொருளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? 3. யார் யாரெல்லாம் பங்களிப்பாளர்கள் ஆகியவற்றை எழுதிப் பதிந்து வைக்க வேண்டும். எழுதிப் பதிந்து… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் – 7 – ஒரு கோப்பில், மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிப்பது எப்படி?

நம்மிடம் ஒரு கோப்பு(File) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோப்பில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தத் தகவல்களில் ஒரு சில மின்னஞ்சல் முகவரிகளும் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகள் மட்டும் நமக்கு வேண்டும். இதைப் பைத்தான் ரிஜெக்ஸ் பயன்படுத்திச் செய்யப் போகிறோம். இந்த வேலையில் இரண்டு படிகள் இருக்கின்றன. 1. கோப்பைத் திறந்து பைத்தான் கையில் கொடுப்பது. இது மிக எளிது. file_content = open(‘test.txt’) மேல் உள்ள வரியில் test.txt என்னும் கோப்பைத் திறந்து… Read More »

663 மின்னூல்கள் – 78 லட்சம் பதிவிறக்கங்களுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

78 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 663 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன் சூலை 26 2020 அன்று FreeTamilEbooks.com திட்டம் 7 ஆண்டுகளை நிறைவு செய்து 8 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. மின்னூல் திட்டமாகத் தொடங்கி, கணியம் அறக்கட்டளையாக வளர்ந்து, மின் தமிழ் உலகில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் வளர்ந்துள்ளது பெருமகிழ்ச்சி. பெருமளவு நேரத்தையும், உழைப்பையும், நன்கொடையையும் அள்ளித்தரும் அனைத்து பங்களிப்பாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள். உங்கள் கருத்துகளை… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் – 6 – வார்த்தை, வாக்கிய எண்ணிக்கை

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, ஒரு பத்தியில் எத்தனை வாக்கியங்கள் இருக்கின்றன ஆகியனவற்றைத் தான்! ரிஜெக்சுக்குப் போவதற்கு முன்பு, சில அடிப்படை கருத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” – இந்த வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன? நான்கு! எப்படிச் சொன்னோம்? ஒரு வார்த்தையையும் இன்னொரு வார்த்தையையும் எப்படிப் பிரித்தோம்? இடைவெளி இருப்பதைப் பார்த்தோம்!… Read More »

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இமெயில் முகவரி ஹேக் செய்யப்பட்டதா?

தலைப்புக்குப் பதில் சொல்வதற்கு முன்னர் – உங்களிடம் ஒரு கேள்வி! “உங்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா? இல்லையா?” என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? “அட! ஆமா! எப்படிக் கண்டுபிடிப்பது?” என்று யோசித்தீர்கள் என்றால் – உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டதை எப்படிக் கண்டுபிடிப்பது? மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிப்பது ரொம்ப ரொம்ப எளிது. 1. monitor.firefox.com/ தளத்திற்குப் போங்கள். (உலக அளவில், இணையத் திருட்டு எனப்படும் ஹேக்கிங் மூலம் மின்னஞ்சல்கள்… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் 5 – கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பது எப்படி?

கடவுச்சொல் எழுதுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளங்களில் கொடுத்திருப்பார்கள். சிலர் எட்டெழுத்துகளாவது குறைந்தது இருக்க வேண்டும் என்பார்கள். சிலர், கட்டாயம் எண்கள் கலந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். சிலர், பெரிய எழுத்தும் சின்ன எழுத்தும் கலந்திருக்க வேண்டும் என்பார்கள். சிலர் மேலே சொன்ன எல்லாமே இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இவற்றிற்குரிய பைத்தான் நிரல் எழுதுவது எப்படி? ரிஜெக்சில் அதை எப்படிச் செய்வது? பார்ப்போமா! முதலில், கடவுச்சொல்லுக்குரிய கட்டுப்பாடுகளை வகைப்படுத்தி விடுவோம். 1. குறைந்தது எட்டு எழுத்துகள். if… Read More »