FreeTamilEbooks – புதிய ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – மே 12 – 2019, விழுப்புரம்

FreeTamilEbooks.com ல் வெளியாகும் மின்னூல்களைப் படிப்பதற்கென ஒரு ஆன்டிராய்டு செயலி, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. நாள் – மே 12, 2019 நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம்   நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை – த.சீனிவாசன், உ. கார்க்கி, கணியம் அறக்கட்டளை FreeTamilEbooks செயலி வெளியீடு – து.இரவிக்குமார் (எழுத்தாளர்), இரா.… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்

  கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுள் ஒருவரான திரு. அன்வர், எழுத்தாளர்களிடம் கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி பரப்புரை செய்ய, கோவைக்கு பயணம் செய்தார். இதற்கான உரையாடலை இங்கே காணலாம் – github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/16 மார்ச்சு 16, 2019 முதல் மார்ச்சு 23, 2019 வரையிலான கோவை பயணத்தில், பின்வரும் எழுத்தாளர்களை சந்தித்தார். 1. கோவை ஞானி 2. பாமரன் 3. நாஞ்சில் நாடன் 4. சம்சுதீன் ஹீரா கோவை ஞானி அவர்கள் தமது படைப்புகளை பொதுக்கள உரிமையில் வெளியிட்டார்.… Read More »

நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை OSSN எனும்கட்டற்ற சமுதாயவலைபின்னலின் உதவியுடன் உருவாக்கி பயன்படுத்தி கொள்க.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்பன போன்ற சமுதாய வலைபின்னல்கள் நமக்கு போதுமானவையாக இல்லை. இன்னும் மேலும் சாதிக்கவேண்டும் என விரும்பினால் OSSN என சுருக்கமாக அழைக்கப்படும் கட்டற்ற சமுதாயவலை பின்னல்(Open Source Social Network) எனும் கருவியைகொண்டு நாம் விரும்பியவாறான, மிகச்சிறந்த, நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை, நாமே வடிவமைத்து உருவாக்கி கொள்ளமுடியும். இவ்வாறான நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை, உருவாக்குவதற்கென தனியாக குறிமுறைவரிகள் எதுவும் எழுதவேண்டிய அவசியமில்லை. இதை கட்டமைவு செய்வது, பராமரிப்பு செய்வது, பிற்காப்பு… Read More »

எளிய தமிழில் Robotics 11. புதிர்பாதைக்குத் தீர்வு காணுதல் (Maze solving)

ஒரு எந்திரன் தன்னியக்கமாக புதிர் பாதையில் இருந்து வெளியேறும் வழியைக் கண்டுபிடிப்பதைத்தான் புதிர்பாதைக்குத் தீர்வு காண்பது என்கிறோம். சீரற்ற சுட்டி (random mouse), சுவர் பின்பற்றல் (wall follower), பிளெட்ஜ் (Pledge), மற்றும் ட்ரெமாக்ஸ்(Trémaux’s) ஆகியவை ஒரு எந்திரனோ அல்லது ஆளோ முன்பின் தெரியாத புதிர் பாதையில் உள்ளே மாட்டிக் கொண்டால் வெளியேறும் வழியைக் கண்டு பிடிப்பதற்கான வினைச்சரங்கள். முட்டு சந்துகளை நிரப்புதல் (dead-end filling) ஆனால் நீங்கள் முழு புதிர் பாதையையும் மேலிருந்து பார்க்க முடியும்… Read More »