கட்டளைவரி வாயிலாக கோப்புகளை பார்வையிடஉதவிடும் கருவிகள்

லினக்ஸ் இயக்கமுறைமையின் கட்டளைவரித்திரையில் கருவிகளின் கட்டளைவரிகளை செயல்படுத்தி கோப்புகளை பார்வையிடலாம் உதாராணமாக README எனும் கட்டளைவரியை கொண்டு ஒரு HTML வகை கோப்பினை ஒரு LaTeX வகைகோப்பினை அல்லது ஏதேனுமொரு உரைக்கோப்பினை பார்வையிடுவதை போன்று lessஎனும் கட்டளைவரி கருவியை பயன்படுத்தி less கோப்பின்_பெயர்.doc என்றவாறு கட்டளைவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் வாயிலாக நாம் பார்வையிட விரும்பும் கோப்பினை திறந்து கொள்க அதனை தொடர்ந்து விசைப்பலகையிலுள்ள spacebar அல்லதுPgDn அல்லது PgUp ஆகிய விசைகளை அழுத்துவதன் வாயிலாக… Read More »

சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு

சென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும். ”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும். இந்தக் குறுஞ்செயலியின் மூலம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய செவ்விலக்கியங்களுக்கான பதிப்புகளை… Read More »

தமிழில் பைதான் நிரல் மொழி – செய்முறைப் பயிற்சி – மார்ச்சு 24 2019 – தாம்பரம், சென்னை

பைதான் நிரல் மொழி, கற்க எளிதானது. எல்லாத் துறைகளுக்குமான நிரல்கள் எழுதும் திறன்கள் கொண்டது. கணியம் அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு தொடர் பயிற்சி வகுப்புகளை நிகழ்த்த உள்ளோம். முதல் பயிற்சியாக பைதான் மொழி. இப்பயிற்சிக்கு பைதான் மொழி கற்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம். நாள் – மார்ச்சு 24, 2019 ஞாயிறு நேரம் – காலை 9.00 முதல் 4.00 வரை இடம் – தரைதளம் 4, சுபிக்‌ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம்,… Read More »

நடைமுறைக்கேற்ற நிரலரின் பத்து அடிப்படை பண்புகள்

1. துறைசார்ந்த மொழியைப் பேசவேண்டும். ஒவ்வொரு மென்பொருளும் ஏதோவொரு துறையின் தேவைக்காகவே உருவாக்கப்படுகிறது. எந்தத் துறையின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக மென்பொருளை உருவாக்குகிறோமோ, அதற்கான நிரலில், அந்தத் துறை சார்ந்த கலைச்சொற்கள் நிறைந்திருக்கவேண்டும். அப்போதுதான், துறைசார் வல்லுநர்களும் (SME), நிரலர்களும் மென்பொருள் குறித்த விவாதங்களில் சிரமமின்றி பேசிக்கொள்ளமுடியும். அதேபோல, நிரலின் கூறுகள் (module), இனக்குழுக்கள் (class), மாறிகள் (variables) ஆகியவற்றுக்கு பெயரிடும்போதும், துறைசார்ந்த பெயர்களையே வைப்பது நல்லது. Image by OpenClipart-Vectors on Pixabay முன்னாள் ஜெர்மன் அதிபர்… Read More »

எளிய தமிழில் Robotics 4. சேவை எந்திரன்கள்

மூன்று மைல் தீவு (Three Mile Island) 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலையத்தில் விபத்து ஆகி கதிரியக்க பொருட்கள் கசிந்து விட்டன. மேல் தளத்தைப் பார்வையிட முடிந்தது. பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்துகொண்டு சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்க முடிந்தது. ஆனால் கீழ்த்தளத்திலிருந்த நிலவறையைப் பார்க்க இயலவில்லை. ஆகவே பிரச்சினையின் பரிமாணத்தை அளவிடக்கூட இயலவில்லை. பிட்ஸ்பர்கில் உள்ள கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் எந்திரனியல் பேராசிரியர் வில்லியம் விட்டேக்கர் தலைமையிலான மாணவர்கள்… Read More »