C மொழிக்கு ஒரு சிறிய அறிமுகம் | எளிய தமிழில் சி பகுதி-1

அனைத்து கணினி நிரலாக்க மொழிகளுக்கும் “தாய்” என அறியப்படும் கணினி மொழிதான் C. அடிப்படையில் கணினியும் இன்று பிறந்த குழந்தையும் ஒன்றுதான், கணினிக்கு நாம்தான் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுதான் “அ” , இதுதான் “ஆ”  , இதுதான் அகர எழுத்துக்கள், இதுதான் இலக்கணம், இதுதான் இலக்கியம், இப்படித்தான் நடக்க வேண்டும்! இப்படித்தான் பேச வேண்டும்! இத்தனை மணிக்கு அலாரம் வைக்க வேண்டும் !என்றெல்லாம் ஒவ்வொன்றையும், நாம் தான் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும்… Read More »

லாஜிக் கதவுகளும் அதன் பொதுவான வகைகளும் | லாஜிக் கதவுகள் பகுதி 2 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 29

கடந்த வாரம், லாஜிக் என்றால் என்னவென்று பார்த்திருந்தோம். லாஜிக் கதவுகள் எலக்ட்ரானிக்ஸ் துறையின் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கும் பிரிவு மட்டுமல்ல! மாறாக அன்றாட வாழ்வில் அனைத்து துறைகளிலும் “லாஜிக்” என்பது மிக மிக முக்கியமானது என்று தெளிவாக பார்த்திருந்தோம். இதுபோல என்னுடைய இன்னபிற, எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளைப் படிக்க கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். சரி! நம்முடைய எலக்ட்ரானிக்ஸ் துறையில், லாஜிக் கதவுகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன என்று பார்க்கின்ற பொழுது! பொதுவாக சுமார்… Read More »

எளிய தமிழில் C | புதிய தொடர் அறிமுகம்

நமது கணியம் இணையதளத்தில், பெரும்பாலான பிரபலமான நிரலாக்க மொழிகள்(programming languages) குறித்து தொடர்கள் வெளிவந்து, பின்பு புத்தகங்களாக கூட பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றன. Html,css, javascript,ruby எனப்  பல்வேறுபட்ட மொழிகள் குறித்தும், தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், கணினி நிரலாக்கம் என்று படிக்க செல்லும் ஒவ்வொரு மாணவருக்கு,ம் தொடக்கப்படியாக அமைவது “சி” எனப்படும் தொடக்க கணினி மொழிதான். உண்மையில், அனைத்து மொழிகளுக்கும் தலைமகனாகவும் இன்றும் “சி” விளங்குகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான சி பிளஸ் பிளஸ்(C++) குறித்தும் படித்திருப்பீர்கள்,… Read More »

செய்யறிவை(AI) அதிக முயற்சிஇல்லாமல்எளிதாக கற்றுக்கொள்வதுஎவ்வாறு

புதிதாக செய்யறிவை(AI) கற்றுக்கொள்வது என்பது அதிகநேரத்தை எடுத்துக்கொள்வதுமட்டுமல்லாமல் சவாலானதாகவும் உள்ளது. அதற்கான மாதிரியை மேம்படுத்த புள்ளிவிவரங்கள், நிரலாக்கம், தருக்கங்கள், இயந்திர கற்றல், தரவைக் கையாளும் பல்வேறு வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், இதோ ஒரு நல்ல செய்தி: இதற்காக கணினியின் பயன்பாட்டில் நாம் ஒரு மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லது செய்யறி(AI)வின் அடிப்படைகளில் தேர்ச்சி பெற சிக்கலான கோட்பாடுகளைப் படிக்க எண்ணற்ற மணிநேரம் செலவிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, அதிகமுயற்சி… Read More »

சில்லுவின் கதை 3. ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் மட்டும் போதாது

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஃபோட்டோலித்தோகிராபி (photolithography) செயல்முறையில் ஒளி மறைப்பியைக் கையால் வரைந்து வெட்டுதல் 0:00 ஃபோட்டோலித்தோகிராபிக்கான ஒளி மறைப்பியை சிவப்பு வண்ண ரூபிலித் (Rubylith) தாளில் வரைந்து வெட்டுவோம் என்றும், பின்னர் அதை குறும்படிவாக்கி (miniaturized) அச்சிடுவோம் என்றும் பார்த்தோம். ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பதுடன் அதை நம்பகத்தன்மையுடன் உற்பத்தி செய்வதும் மிக முக்கியம்… Read More »

எலக்ட்ரானிக்ஸ் துறையும் சில வதந்திகளும்| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 28

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது எலக்ட்ரானிக்ஸ் துறையோடு பின்னிப் பிணைந்து இருக்கும் சில வதந்திகளை பற்றி தான். அதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை என்றால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ பொதுவாகவே, அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் தான் தரமானதாக இருக்கும்! எனும் நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது. உண்மையிலேயே,… Read More »

ஒரு சிறந்த கட்டற்ற துவக்கி (launcher) | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9

நம்மில் பலரும் அதிகப்படியான நேரம் மொபைல் போன்களில் செலவழிப்பதற்கு, மிக முக்கியமான காரணம் மொபைல் போனை திறந்தாலே நாம் எதை தேட நினைத்தோமோ! அதை தவிர வேறு அனைத்தையும் பார்த்து முடித்து விடுகிறோம். நமது துவக்க திரையிலேயே வரக்கூடிய, விளம்பரங்கள்,காணொளிகள் ஆகியவை நமக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய, கவன சிதறல்களை தடுப்பதற்கு, ஏதேனும் செயலி இருக்கிறதா? என தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது! இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் துவக்கி செயலி( launcher app).… Read More »

Future works from kanchilug

Topic : Future works from kanchilug Description : Kanchi LUG has been spreading awareness on Free/Open Source Software (F/OSS) in Kanchipuram since November 2006. As a part of progression in this week discussion (22-12-2024) Sunday, 17:00 PM to 18:00PM, Name : Hari haran

மீட்டெடுப்பின் வளர்ந்திடுகின்ற தலைமுறை (RAG) என்றால் என்ன?

RAGஎன சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மீட்டெடுப்பின் வளர்ந்திடுகின்ற தலைமுறை (Retrieval-Augmented Generation) என்பதுசெநு(AI)வின் ஒருவகை தொழில் நுட்பமாகும், இது தொடர்புடைய தகவல்களைத் தேடுவதையும் பதில்களை உருவாக்குவதையும் இணைக்கிறது. முதலில் வெளிப்புற மூலங்களிலிருந்து (ஆவணங்கள் அல்லது தரவுத்தளங்கள் போன்றவைகளிலிருந்து) தரவை மீட்டெடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது, மேலும் இதுதுல்லியமான சூழல்-விழிப்புணர்வுடனான பதில்களை உருவாக்கிட இந்தத் தகவலைபொருத்தமாகப் பயன்படுத்தி கொள்கிறது. இது செநு(AI) க்கு பயிற்சியளிக்கப்பட்டதை மட்டும் நம்பாமல்,அடிப்படையில் உண்மையான சிறந்த, பதில்களை வழங்க உதவுகிறது. மீட்டெடுப்பின் வளர்ந்திடுகின்ற தலைமுறையானது((Retrieval-Augmented Generation)… Read More »

லாஜிக் கதவுகள் : குறுங்தொடர் – அறிமுகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் – 27

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு தலைப்புகள் குறித்து 26 கட்டுரைகள் மூலம் நாம் விவாதித்திருக்கிறோம். இனிமேல் வரக்கூடிய சுமார் பத்து கட்டுரைகள் வரை, லாஜிக் கதவுகள் தொடர்பாக விரிவாக பார்க்கவிருக்கிறோம். இந்த 10 கட்டுரைகளையும் எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியோடு, குறுந்தொடராக வெளியிட நான் முடிவு செய்து இருக்கிறேன். என்னுடைய, இன்ன பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ அடிப்படையில், நம்மில் பலரும் பள்ளி மற்றும்… Read More »