எளிய தமிழில் 3D Printing 21. உதிரி மற்றும் பதிலி பாகங்கள்

பல சந்தர்ப்பங்களில் பதிலி பாகம் (Replacement Part) மட்டும் தனியாகக் கிடைப்பதில்லை தயாரிப்புகள் அல்லது சாதனங்களின் பாகங்களை இழந்தாலோ அல்லது உடைந்தாலோ அதன் விளைவுகள் சிரமமானவை முதல் நாசம் விளைக்கும் வரை இருக்கலாம். எடுத்துக்காட்டாக காரின் பின் விளக்கை மூடியுள்ள நெகிழி பாகம் உடைந்துவிட்டால் அதை மட்டும் மாற்ற இயலாது. முழு பின் விளக்குத் தொகுப்பையே மாற்ற வேண்டுமென்று சொல்லி செலவு மிக அதிகமாகிவிடும். ஏனெனில் தயாரிப்பு நிறுவனம் அந்தப் பதிலி பாகத்தை மட்டும் தனியாக விற்பதில்லை,… Read More »

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – ஜூன் 25 , 2023 – மாலை 4-5

  அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 25 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள்… Read More »

சிங்கப்பூர் விக்கிமேனியா ஒளிப்படப் போட்டி

வணக்கம், நடைபெறவுள்ள சிங்கப்பூர் விக்கிமேனியாவினையொட்டி ஒரு ஒளிப்படப் போட்டி 15 ஜுன் முதல் 15 ஜூலை வரை நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூரில் வசிப்பவர்கள் பங்கெடுக்கலாம். சிங்கப்பூரின் பாரம்பரியத்தைப் படைப்பாக்கப் பொதுமத்தில்(Creative Commons) ஆவணப்படுத்த சிறந்த களம். வாய்ப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Living_Heritage_in_Singapore — நீச்சல்காரன் neechalkaran.com

எளிய தமிழில் 3D Printing 20. கட்டுமானத் துறைப் பயன்பாடுகள்

3D அச்சிடல் கட்டடக்கலையில் சிறிய அளவு மாதிரிகளை உருவாக்கப் பயன்படுகிறது கட்டட உரிமையாளர்களுக்கு கட்டடக்கலை நிபுணர்கள் சிக்கலான வடிவமைப்புகளைக் காட்டி ஒப்புதல் பெறுவதற்கு சிறிய அளவு மாதிரிகள் மிகவும் பயனுள்ளவை. இது காணொளியைப் பார்ப்பதைவிட தத்ரூபமாக யாவருக்கும் புரியும். இத்தகைய சிறிய அளவு மாதிரிகளைக் குறைந்த செலவிலும் துரிதமாகவும் 3D அச்சிடல் மூலம் உருவாக்க இயலும். கட்டுமானத் துறையில் கற்காரை (concrete) பிதுக்கல்   இது கட்டடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கான வேகமான மற்றும் குறைந்த… Read More »

கருப்பு டெர்மினலை கலக்கலான டெர்மினலாக மாற்றும் edex-ui

உங்கள் ஆணைகளை செயல்படுத்தக் காத்திருக்கும் டெர்மினலுக்கு, அட்டகாசமான பல அலங்காரங்கள் செய்ய விருப்பமா? சாதாரணமான கருப்புத்திரை உங்களுக்கு சலிப்பு தருகிறதா? வாருங்கள். உங்கள் கருப்புத் திரையை ஆங்கிலத் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் உருமாற்றலாம். github.com/GitSquared/edex-ui இங்கு சென்று பாருங்கள். github.com/GitSquared/edex-ui/releases இங்கு சென்று Assets பகுதியில் உள்ள eDEX-UI-Linux-x86_64.AppImage என்ற கோப்பை இறக்கிக் கொள்ளுங்கள். பின் ஒரு டெர்மினல் சென்று chmod a+x eDEX-UI-Linux-x86_64.AppImage என்ற கட்டளை தருக. இது உங்கள் கோப்பை execute செய்வதற்கு ஏற்றதாக… Read More »

மீப்பெரும்செயலாக்கம் (metaverse) தற்போதைய நிலை என்ன இனி என்னவாக ஆகப்போகிறது

மீப்பெரும்செயலாக்கம் (metaverse) என்பது ஒரு மெய்நிகர் உலகமாகும், இது முன் எப்போதும் இல்லாத இணைய அனுபவத்தை நமக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது. மீப்பெரும்செயலாக்கத்தை (metaverse) முதலில் ஏற்றுக்கொண்ட தொழில்களில் தற்போது எந்தெந்த தொழில்கள் நிலைத்து உள்ளன, அதற்கான எதிர்காலம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம். மீப்பெரும்செயலாக்கம் (metaverse) ஆனது இன்று நன்கு அறியப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. இருப்பினும், இது குறித்து பல தவறான கருத்துக்களும் உள்ளன. இதில் பின்வருவன அடங்கும்: இது விளையாட்டிற்கு மட்டுமே பயன்படு… Read More »

எளிய தமிழில் 3D Printing 19. மருத்துவத் துறைப் பயன்பாடுகள்

கடந்த பல ஆண்டுகளில் மருத்துவ உலகில், செயற்கை உறுப்புகள் போன்ற மருத்துவ சாதனங்கள் முதல் உயிரி அச்சிடுதல் (bioprinting) வரை, பல 3D அச்சு பயன்பாடுகள் வந்துள்ளன. எலும்பு மூட்டு சாதனங்களும் (orthosis) செயற்கை உறுப்புகளும் (prosthesis) எலும்பு மூட்டு சிம்புகள் (splints) மற்றும் பல் இறுக்கிகள் (braces) போன்ற செயற்கை சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்குத் தகுந்தாற்போலத் தனிப்பயனாக்க வேண்டும். இது போலவே விபத்து அல்லது நோய் காரணமாக வெட்டப்பட்ட  கை கால்கள் அல்லது வளர்ச்சியின்மை காரணமாக இல்லாத… Read More »

AI கட்டமைப்பை உருவாக்கிடுவதற்கான கணினி மொழிகளும் அதன்கட்டமைப்புகளும்

தற்போது நம்முடைய நடைமுறை பயன்பட்டில பல்வேறு திறமூல நிரலாக்க மொழிகள் உள்ளன, அவைகளை சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கிடுவதற்காககூட பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற செய்தி நம்மில் ஒருசிலருக்கும் மட்டுமே தெரிந்த செய்தியாகும். அதாவது நமக்கு நிரலாக்கத் பணியில் அதிகஆர்வமாக இருந்தால், இந்த திறமூலகணினி மொழிகளை AI அமைப்பிற்காக அவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என அறிந்தகொள்ளமுடியும். இந்தக் கட்டுரை AI ,MLஆகியவற்றிற்கான முக்கிய நிரலாக்க மொழிகளைபற்றியும் , திறமூல கட்டமைப்புகளை பற்றியும் பகுப்பாய்வு செய்கிறது, மேலும்… Read More »

எளிய தமிழில் 3D Printing 18. வாகனத் தொழில்துறைப் பயன்பாடுகள்

வாகனத் துறை முப்பரிமாண அச்சிடலின் திறனைப் பல பத்தாண்டுகளாகப் பயன்படுத்துகிறது. முப்பரிமாண அச்சிடல் விரைவான முன்மாதிரிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மற்றும் புதிய வாகன மாதிரிகளில் வடிவமைப்பு நேரத்தையும் முன்னீடு நேரத்தையும் (lead time) கணிசமாகக் குறைக்கும் திறனை நிரூபித்துள்ளது. வாகன பாகங்களுக்குப் பல தனிப்பயன் வழியுறுதிகள் (jigs) மற்றும் நிலைப்பொருத்திகள் (fixtures) தேவை தொழில்துறையில் உற்பத்திப் பணிப்பாய்வுகளை (workflow) 3D அச்சிடல்  திறன்படுத்தியுள்ளது. முன் காலத்தில் வாகன பாகங்கள் தயாரிக்க தனிப்பயன் வழியுறுதிகள், நிலைப்பொருத்திகள் மற்றும்… Read More »

மீப்பெரும் செயலாக்கத்திற்கு (Metaverse) பயன்படுத்தக்கூடிய பிரபலமான திறமூலக் கருவிகள்

பகிர்ந்துகொள்ளப்பட்ட , பரவலாக்கப்பட்ட மெய்நிகர் தளத்தை வழங்குவதன் மூலம், புதுமை, படைப்பாற்றல் , சமூக இணைப்பு ஆகியவற்றிற்கான பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்ற திறனை இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையில் அவ்வாறான மீப்பெரும் செயலாக்கத்தின் (Metaverse) உள்கட்டமைப்பை உருவாக்கு வதற்கும் அதைப் பாதுகாக்க உதவுவதற்கும்ஆன பிரபலமான திற மூலக் கருவிகளை பற்றி காண்போம். இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) எனும் தொழில்நுட்பமானது இன்னும் அதன் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது, ஆனால்… Read More »