மேககணினி(cloud) சேவை என்பதன் கட்டமைப்புகள்

தற்போது மேககணினி என்றால் என்ன, அது எப்படி 445 பில்லியன் டாலர் தொழில்துறையாக உருவெடுத்தது என்பது பற்றிய விவாதம் இருப்பதால், நாம்தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் இந்த மேககணினியைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிப் பது நல்லது அல்லவா. ஒரு மேககணினியின் பொதுவான கட்டமைப்பானது முன்-பக்கம்,பின்-இறுதி. ஆகிய இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாக கருதலாம் – முன்-பகுதியில் வாடிக்கையாளர் உள்கட்டமைப்பு உள்ளது, அதாவது, மேகக்கணியுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தப்படும் பயன்பாட்டின் சாதனமும் பயனர் இடைமுகமும். தற்போதையச் சூழலில் திறன்பேசி ,கூகுள் டிரைவ், பயன்பாடு… Read More »

லினக்சும் தமிழும் – மயூரன் – இணைய உரை – இன்று இரவு 7.30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:110கட்டற்ற மென்பொருள் தினம் – 2022கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வுகாலம்: 05.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30தலைப்பு:லினக்சும் தமிழும் உரையாளர்: மு. மயூரன்தமிழ்க் கணிமை ஆர்வலர் ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,செயலாளர்,தமிழறிதம் லினக்சும் தமிழும் பற்றி …கட்டற்ற இயங்குதளமான (OS) GNU/Linux இற்கும் தமிழுக்குமான தொடர்பு நெடியது. முதன் முதலில் தமிழ் இடைமுகப்போடு வெளிவந்த இயங்குதளமே லினக்ஸ் இயங்குதளம் தான். இன்றும் லினக்சில் தமிழ் பயன்பாடு சீர்பெற்றும் வளர்ச்சிபெற்றும் வருகிறது. சாதனைகள்… Read More »

முடிவெடுத்தலுக்கான Digraph3எனும்பைதான்3 தகவமைவுகளின் தொகுப்பு

சுருக்கமாக கூறுவதெனில் இது ஒரு தருக்கபடிமுறையின் அடிப்படையில் முடிவெடுத்தலுக்கான பைதான்3 தகவமைவுகளின் தொகுப்பாகும் இந்த Python3 தகவமைவுக்கூறுகளின் தொகுப்பானது, பல அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்ட பல அளவுகோலின்படி முடிவெடுத்திடம் உதவிடும் (MCDA) கருவியாகும், குறிப்பாக சிறந்த தேர்வு, நேரியல் தரவரிசை , முழுமையான அல்லது தொடர்புடைய மதிப்பீட்டு தருக்கபடிமுறைகளை பல ஒப்பிடமுடியாத அளவுகோல்களுடன் விஞ்சும் துறையில் பயனுள்ளதாக இருக்கும் ஒரு பெரிய அளவிலான செயல்படுத்தப்பட்ட முடிவெடுத்தலுக்கான உதவி வழிமுறைகளை இது வழங்குகிறது. . இந்த பயிற்சிdigraphs, outranking… Read More »

களை கட்டிய கட்டற்ற மென்பொருள் திருவிழா – நிகழ்வுக் குறிப்புகள்

எப்படித் தொடங்கினோம்? முதன்முதலில் கட்டற்ற மென்பொருளுக்கு என நிகழ்வு ஒருங்கிணைக்கலாமா என தமிழறிதத்தின் செயலாளர் சரவண பவானந்தன் ஐயா தமிழ் இணையம் 100 நிகழ்ச்சியில் கேட்டார். கணியம் சீனிவாசன், இங்கே இருக்கிறார், அவரிடம் கேளுங்கள் என்று சொன்னேன். அன்று விழுந்தது தான் இவ்விதை! அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக, சரவண பவானந்தன் ஐயா, சீனிவாசனிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். அந்தத் தொடர் கேள்விகளின் விளைவாக எழுந்ததே இம்மாநாடு. யார் யாரெல்லாம் இணைந்தோம்? கணியம் சீனிவாசன், தமிழறிதம் சரவணபவானந்தம், தமிழ்… Read More »

கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 – அக்டோபர் 2022 அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 – அக்டோபர் 2022 அறிக்கை தொலை நோக்கு தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப… Read More »

Rexxஎனும் கணினிமொழிகுறித்த ஒரு விரைவான கண்ணோட்டம்

Rexx என்பது ஒரு எளிய “திறன்மிக்க” கணினிமொழியாகும்.இந்த கட்டுரையின் நிபந்தனைகளின்படி இந்த கூற்றுஒரு முரண்பாடு அல்லவா? நிற்க. Rexxஎனும் கணினிமொழிகுறித்த ஒரு விரைவான கண்ணோட்டம் எனும் இந்த கட்டுரையானது நமக்கு Rexxஉரைநிரலை அறிமுகப்படுத்துகிறது. Rexx என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மறுகட்டமைக்கப்பட்ட விரிவாக்கப் பட்ட செயல்படுத்துபவர் (Restructured Extended Executor) என்பது ஒரு உரைநிரல் மொழியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உரைநிரலை முடிந்தவரை எளிதாகவும், விரைவாகவும், நம்பகமானதாகவும், பிழையற்றதாகவும் மாற்றுவதே இதன் குறிக்கோள். பொதுவாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்ற பல்வேறு… Read More »

இன்று உபுண்டு லினக்சு 22.10 kinetic kudu வெளியானது

இன்று உபுண்டு 22.10 kinetic kudu வெளியானது. மேலும் அறிய. Ubuntu Canonical releases Ubuntu 22.10 Kinetic Kudu | Ubuntu   குறிப்பு – 6 மாதங்களுக்கு ஒரு முறை உபுண்டு லினக்சின் புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது. ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் வெளியாகிறது. ஆண்டு.மாதம் என பதிப்பு எண்ணும் ஒரு செல்லப் பெயரும் வழங்கப்படுகிறது. புதிதாக லினக்சு நிறுவுவோர் புதிய பதிப்பையே பதிவிறக்கம் செய்து நிறுவுக. பழைய பதிப்பு ஏற்கெனவே நிறுவியோரும், இணைய வழியில்… Read More »

ஊடாடும் இணைய பயன்பாட்டை உருவாக்க R எனும் கணினிமொழியைப் பயன்படுத்திகொள்க

தற்போது தரவு பகுப்பாய்வு எனும் பணி நிறுவனங்களுக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது, மேலும் பயனர் நட்புடனான இடைமுகங்களைக் கொண்ட தரவினை இயக்கிடும் பயன்பாடு களுக்கு பெரும் தேவையும் உள்ளது. தரவுஅறிவியலுக்கான பிரபலமான நிரலாக்க மொழியான R இல் உள்ள Shiny எனும் தொகுப்பைப் பயன்படுத்தி ஊடாடும் இணைய பயன்பாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.இன்று உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு வணிகநிறுவனமும் ஏதோ ஒரு வகையில் தரவுகளை நம்பியுள்ளது. உண்மையில், நிதி, வங்கி, சில்லறை விற்பனை, தளவாடங்கள்,… Read More »

OSI மாதிரியை ஐந்தே நிமிடங்களில் கற்றுக் கொள்க

கட்டற்ற அமைவின் உள்ளகஇணைப்பு (Open Systems Interconnection (OSI)) எனும்வரைச்சட்ட மானது கணினிகளும் சேவையகங்களும் பொதுமக்களும் ஒரு கணினி அமைவிற்குள் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதற்கான தரநிலையாகும். இது வலைபின்னலின் தகவல் தொடர்புக்கான முதல் நிலையான மாதிரியாகும் இது 1980 களின் முற்பகுதியில் அனைத்து பெரிய கணினியாலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. OSI மாதிரியானது வலைபின்னல்களை விவரிப்பதற்கும், தனித்தனி துகள்கள் அல்லது அடுக்குகளில் அவற்றைப் பற்றி சிந்திக்கவும் ஒரு உலகளாவிய மொழியை வழங்குகிறது. OSI மாதிரியானது கணினி… Read More »

Viluppuram-GLUG – Free Code Camp For Kids

வணக்கம், கணினி, தொழில்நுட்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரையிலும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை VGLUG அமைப்பு 100 கிராமங்களில் 100 GLUGs என்கிற முன்னெடுப்பின் மூலம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக VGLUG அமைப்பு ‘Free Code Camp For Kids’ என்கிற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பானாம்பட்டு GLUG-ல் அடுத்த இரண்டு (அக்டோபர் 8 மற்றும் 9) நாட்களுக்கு கணினி பற்றிய… Read More »