OpenRAN என்றால் என்ன

தற்போது உலகெங்கிலும் உள்ள தன்னிச்சையான(arbitrary ) கணினிகளுடன் இணைக்கும் திறன்கொண்ட திறன்பேசியை( smartphone) சொந்தமாக வைத்திருப்பவர்களும் பயன்படுத்து பவர்களும் கண்டிப்பாக இந்த வானொலிமூலம் அணுகுதலிற்கான வலைபின்னல்களின் (RAN) பயனாளராவார்கள். நம்முடைய கைபேசி தொடர்பு வழங்குநரால் இந்த RAN வழங்கப்படுகிறது, மேலும் இது நம்முடைய திறன் பேசிக்கும் தகவல் தொடர்பு வழங்குநருக்கும் இடையிலான கம்பியில்லா இணைப்புகளைக் கையாளுகிறது. நம்முடைய திறன்பேசியில் திறமூல இயக்க முறைமை (ஆண்ட்ராய்டு) இயங்குகின்றது ஒரு திறன்பேசியானது மற்றொரு திறன்பேசியுடன் தொடர்பு கொள்வதற்காக இணைப்பை ஏற்படுத்து… Read More »

கொள்கலன்கணினி(Container), மெய்நிகர்கணினி(Virtual Machine(VM)) ஆகியவை குறித்த தொடக்கநிலையாளர்களுக்கான நட்புடன்கூடிய அறிமுகம்

நாம் ஒரு நிரலாளர் அல்லது தொழில்நுட்ப வல்லுநர் எனில் இணைப்பாளரைப் (Docker) பற்றி கண்டிப்பாக கேள்விப்பட்டிருக்கலாம்:அதாவது இணைப்பாளர் என்பது “கொள்கலன் கணிகளில்” கட்டுதல், பதிவேற்றுதல் என்றவாறு பயன் பாடுகளை இயக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதொரு பயனுள்ள கருவியாகும். தற்போதைய நவீனகாலச்சூழலில் மேம்படுத்துநர்கள் கணினியின் அமைவுநிருவாகிகள் போன்றவர்களின் கவனத்தை இது ஈர்க்கும் வகையில், இல்லாமல் இருப்பது மிகக்கடினம். கூகுள், VMware , அமேசான் போன்ற பெரிய சேவையாளர்கள் கூட இதனை ஆதரிக்கின்ற வகையிலான சேவைகளை உருவாக்குகின்றனர். இணைப்பாளரின்… Read More »

இரண்டாவது தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு – செப் 24,25 – இலயோலா கல்லூரி

விடுதலை – இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! கட்டற்ற மென்பொருளை மகளிர் முன்னணியிலும் ஆடவர் பின்னணியிலும் நின்று களம் காணும் கணித்தமிழ் மாநாடு! “எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!” என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்!… Read More »

வணிகநிறுவனங்கள்AIOPs எனும் புதியசகாப்தத்தை தழுவ தயாராகிடுக

வணிகநிறுவனங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், தற்போதைய நவீனதொழில்நுட்பத்திற்குஏற்ப எண்ணிம(digital ) நிறுவனங்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தங்களை மாற்றிகொள்வதற்கு ‘choosing’ என்பது ஒரு பெரிய கேள்வி குறி அன்று; மாறாக,அவ்வாறான மாற்றத்துடன் தங்களுடைய நிறுவனம் எவ்வாறுமுன்னேறுவது என்பது பற்றியதே முக்கிய கேள்விக்குறியாகும். இவ்வாறான சூழலில்தான் AIOps என்பது வணிக நிறுவனங்களின உதவிக்கு வருகிறது. பொதுவாக ஒரு வணிக நிறுவனத்தை எண்ணிம(digital ) நிறுவனமாக மாற்றுவதில் ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.… Read More »

ஜூலியா , பைதான் ஆகிய இரண்டில் எந்த கணினிமொழி விரைவாக செயல்படக்கூடியது?

ஜூலியா என்பது மிகஅதிகசுருக்கமான ஒரு இயக்கநேர நிரலாக்க மொழியாகும். இது எந்தவொரு நிரலையும் உருவாக்க ஒரு பொது-நோக்க கணினிமொழியாக இருந்தாலும், இது எண்ணியல் பகுப்பாய்வு , கணக்கீட்டு ஆய்விற்கு மிகவும் பொருத்தமான பல பண்புகளைக் கொண்டுள்ளது. பைதான்ஆனது 1990 களின் முற்பகுதியில் ஒரு எளிய பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாக வடிவமைக்கப்பட்டது, ஆனால் அதன் பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துவருகின்றது. இந்த கட்டுரையில் நரம்பியல் பிணையவமைப்புகள், இயந்திர கற்றல் ஆகியவற்றில் இவ்விரண்டு கணினிமொழிகளின் செயல்திறனை ஆழமாகப் ஆய்வு… Read More »

சென்னையில் விக்கி மாரத்தான் பயிலரங்கு

வணக்கம், தமிழின் முக்கிய இணையக் களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கி மாரத்தான் நிகழ்வு செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகிறது. விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாளில், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் பங்களித்து விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். மேம்படுத்த வேண்டிய பணிகளின் பட்டியலும் திட்டப்பக்கத்தில் உள்ளன. அதன் பொருட்டும், பெருந்தொற்றுக்குப் பிறகான நேரடிச் சந்திப்பாகவும் செப்டம்பர் 17 ஆம் நாள் சென்னையில் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த… Read More »

சென்னையில் லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் – ஞாயிறு(8, செப்)

லிப்ரெஓபிஸ் என்பது சமூகத்தால் உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது இலாப நோக்கமற்ற தெ டோகுமெண்ட் ஃபெளண்டேஷன் அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டம். இந்தக் கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் பங்களிப்பதன் மூலம், நாமும் சமூகமும் இணைந்து வளர முடியும். வரும் ஞாயிறு காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை சென்னை பயிலகத்தில் லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் நிகழ்வு நடக்க இருக்கிறது. நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்கள் மடிக்கணினியுடன் நிகழ்விடத்திற்கு வந்து பங்கேற்கலாம். காலம்: 08.09.2022… Read More »

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல் நான்காம் சந்திப்பு – குறிப்புகள்

  கலந்து கொண்டோர் தனசேகர் பரமேஸ்வர் முத்து மோகன் சீனிவாசன் விக்னேஷ் கார்த்திக் இடம் இலயோலா உறுதியானது. நாளை மதியம் 2 மணிக்கு கல்லூரி சென்று, இடம், அரங்கு, உணவு வசதிகளை பார்க்கப் போகிறோம். நாள் 24,25 உறுதியானது பயிற்சிப் பட்டறைகள் தனசேகர் – devops – அக்டோபர் 1 – இடம் பயிலகம் தமிழரசன், நித்யா – Machine Learning – செப்டம்பர் 25 – இடம் – இலயோலா லினக்ஸ் அறிமுகம் – மோகன்… Read More »

குனு/லினக்ஸிற்கானNuTyX எனும் புதிய இயக்கமுறைமை

தற்போது NuTyX எனும் அதிக நெகிழ்வுத்தன்மையுடனான ஒரு முழுமையான குனு/லினக்ஸிற்கான இயக்கமுறைமை வெளியிடப்பெற்றுள்ளது , , . இதனை பயன்படுத்தவிரும்பும் பயனாளர்கள் முதலில் குனு/லினக்ஸ் இயக்கமுறைமையின் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனெனில் இதனுடைய ‘install-nutyx’ எனும் உரைநிரல் , சுதந்திரமான GRUB நிறுவுகையின் செயல்முறை, cards’ எனும்தொகுப்பு மேலாளர், collections, என்பன போன்ற அசல் கருத்துமைவுகள் குனு/லினக்ஸ்பற்றி குறைந்த அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக தொந்தரவு கொடுக்கக்கூடும். தங்கள் திறமைகளை… Read More »