எளிய தமிழில் VR/AR/MR 2. தோற்ற மெய்ம்மை (Virtual Reality – VR)
VR என்பது அனைத்து மூழ்கவைக்கும் மெய்நிகர் அனுபவங்களையும் உள்ளடக்கியது. புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் போன்ற 360 பாகை முற்றிலும் மெய்யுலகக் காணொளியாகவும் (360 video) இருக்கலாம். அல்லது முற்றிலும் செயற்கையாக கணினியில் உருவாக்கிய 3D அசைவூட்டமாகவும் (animation) இருக்கலாம். அல்லது இவை இரண்டும் கலந்ததாகவும் இருக்கலாம். மூழ்கவைக்கும் அனுபவம் (immersive experience) மூழ்கவைக்கும் அனுபவம் என்றால் என்ன? பார்வையாளர்களுக்கு விளக்கக்காட்சியால் சித்தரிக்கப்பட்ட இடத்திலேயே அவர்கள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும். இதுதான் மூழ்கவைக்கும் அனுபவத்தின் சாராம்சம். இதற்கு… Read More »