வழக்கமாக நாம் 2D வரித்தோற்றம் (orthogonal view) உருவரைவுகள் செய்யும்போது வரைபலகையில் கையால் வரைவது போலவே வரைவோம். அதாவது கோடுகளைத் தேவையான துல்லியமான அளவில் தேவையான திசையிலேயே வரைவோம். ஏனெனில் நம்முடைய நோக்கம் அந்தப் படத்தை வரைந்து, அளவுகள் காட்டி, அச்சிட்டுப் பணிமனையில் உற்பத்தி செய்யக் கொடுக்க வேண்டும். தோராயமாக வரைந்து கட்டுப்பாடு அமைத்தல் (Constraint Sketching) திட வடிவங்களை உருவாக்குவதற்கு நாம் பெரும்பாலும் 2D வடிவங்களிலேயே தொடங்க வேண்டும். ஏனெனில் இயந்திரவியல் பாகங்களை பெரும்பாலும் 2D… Read More »
சால்வ்ஸ்பேஸ் செய்யும் எல்லா வேலைகளையும் ஃப்ரீகேட் செய்ய முடியும். இது தவிர மேலும் பல வேலைகளையும் செய்ய முடியும். ஃப்ரீகேட் பணிமேடைகள் (workbenches) உங்கள் பட்டறையில் மர வேலையும் உலோக வேலையும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மர வேலைக்கு வாள் (saw), இழைப்புளி (planer), உளி (chisel) போன்ற கருவிகள் கொண்ட ஒரு பணிமேடை தனியாக வைத்திருப்பீர்கள். மற்றொரு பணி மேடையில் பணை (anvil), நிலையிடுக்கி (vice), அரம் (file) போன்ற கருவிகள் உலோக வேலைக்கு வைத்திருப்பீர்கள்… Read More »
எளிதாக நிறுவி இயக்க முடியும் சால்வ்ஸ்பேஸ் 3D என்பது அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) கட்டற்ற திறந்தமூல மென்பொருள். இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயங்குகிறது. விண்டோஸ் கணினிகளில் நிறுவ வேண்டிய அவசியம் கூட இல்லை. EXE கோப்பு அப்படியே ஓடும். இது சிறிய கோப்பு ஆகையால் உங்கள் கணினியில் அதிக இடத்தையும் எடுத்துக் கொள்ளாது. தொடக்கப்பயிற்சியாக ஒரு கோணத்தாங்கி (angle bracket) வரையும் படிமுறைகள் இங்கே உள்ளன. சால்வ்ஸ்பேஸ் குறிப்புதவிக் கையேடு இங்கு உள்ளது.… Read More »
நேரடி மாதிரியமைத்தல் (Direct modelling) நாம் ஒரு சிக்கலான வடிவத்தைப் பல படிகளில் உரு மாற்றங்கள் செய்து தயாரித்து முடித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதை சேமித்து வைப்பதன் முக்கிய நோக்கம் இந்தக் கோப்பைத் திறந்து திரும்பவும் இந்த வடிவத்தை உருவாக்க இயல வேண்டும். இதை சேமித்து வைக்க நாம் இரண்டு விதமான உத்திகளைக் கையாளலாம். முதல் வழி நமக்குக் கடைசியாக கிடைத்த வடிவத்தை மட்டும் அப்படியே சேமித்து வைப்பது. இதை நேரடி மாதிரியமைத்தல் (Direct modeling)… Read More »
திட வடிவ ஆக்கம் (Constructive solid geometry – CSG) நம்மிடம் கோளம், கூம்பு, உருளை, கனச்செவ்வகம், வடை வடிவம் (torus) போன்ற அடிப்படை வடிவங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்த அடிப்படை வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைதான் திட வடிவ ஆக்கம். இந்த திட வடிவ ஆக்கத்தில் மூன்று வழிமுறைகள் உள்ளன. முதல் வழி இரு வடிவங்களைச் சேர்த்தல் (union). இவை மெய்நிகர் வடிவங்கள் தானே. ஆகவே ஒன்றுக்குள் ஒன்று நுழையும்.… Read More »
உபுன்டுவில் லிபர்கேட் நிறுவி, முதல் பயிற்சியாக ஒரு விளிம்புத் தட்டு (flange) வரைபடம் வரைவது எப்படி என்ற என்னுடைய முந்தைய கட்டுரையை இங்கே படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட, நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட லிபர்கேட் 2.2 பயனர் கையேடு இங்கே காணலாம். வரித்தோற்றம் (orthogonal view) மற்றும் சம அளவுத்தோற்றம் (isometric view) இந்த மென்பொருளில் படத்தில் இடது பக்கம் உள்ள செங்குத்து வீழல் என்ற வரித்தோற்றம் தவிர படத்தில் வலது பக்கம் உள்ள சம… Read More »
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1
files.fsftn.org/s/dT2awkCCP2977Hq
எங்களது முதலாம் ஒலியோடைத் தொடரில், ட்ரு காலர் (True Caller) செயலியில் உள்ள பிழையை பற்றியும், நமது அரசின் டி.என்.ஏ தொடர்பான சட்டத்தைப் பற்றியும், டக்ஸ் கார்ட் (Tux Kart) என்கிற காணொலி விளையாட்டைப் பற்றியும், ப்ளெண்டர் என்னும் முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருளைப் பற்றியும், வேறு சிலவற்றை பற்றியும் பேசியுள்ளோம். இந்த ஒலியோடையில் ராதா கிருஷ்ணன், பாரதி மற்றும் சர்வேஷ் பங்கேற்றுள்ளார்கள்.
இந்த ஒலியோடையை கேட்டப்பின் உங்களது கருத்துக்களை எங்களுடன் பருகுங்கள், அது நாங்கள் முன்னேற உதவியாய் இருக்கும்.
இந்த ஒலியோடையைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள் : ask@fsftn.org
FSFTN பற்றி மேலும் அறிந்துகொள்ள : fsftn.org/
எந்திரவியல் பொறியியலே நம் குவியம் தொழில்முறை கட்டடக்கலை (architecture), பொறியியல் (engineering), அசைவூட்டம் (animation) மற்றும் வரைபட வடிவமைப்பு (graphic design) ஆகியவற்றிற்கு கணினி வழி வடிவமைப்பு மென்பொருள் ஒரு முக்கியமான கருவியாகும். எனினும் இக்கட்டுரைத் தொடரில் நம் குவியம் எந்திரவியல் பொறியியலில் தானிருக்கும் என்பதை நீங்கள் ஒருவாறாக யூகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் நம்முடைய எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் கயெக கடைசல் எந்திரம் (CNC Lathe) அல்லது செங்குத்து துருவல் மையம் (VMC – Vertical Machining… Read More »
நீங்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு புது மாதிரியான மின்சார ஆட்டுக்கல் என்ற தோசை மாவு அரைக்கும் இயந்திரம் தயாரிக்கும் யோசனை வருகிறது. அதை நன்கு பகுப்பாய்வு செய்து உங்கள் நிறுவனத்தின் தலைவர்களுக்கு காட்சிப் படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் உங்கள் யோசனை பிடித்து விட்டது. இந்தத் தயாரிப்பை சந்தையில் நன்றாக விற்பனை செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். உங்கள் திட்டத்தில் முதலீடு செய்ய முன்வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்படி உற்பத்திப் பொருள்… Read More »
இது வரை நாம் பார்த்த எந்திரன் தொகுதிகள் கீழ்க்கண்ட வகையில் மிகவும் பயனுள்ளவை: ஆறு வயது முதல் பல்வேறு வயது வரம்புக்கு உட்பட்ட சிறுவர்கள் கற்றுக்கொள்ள எளிதாக நிரல் எழுதும் வகைகள் பல உண்டு. கைமுறையாக செயல்படுத்திப் பார்க்க பல வழிமுறைகள் இருப்பதால் எந்திரனியல் அடிப்படைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். சிறுவர்கள் விளையாட்டாக தொழில் நுட்பத்தையும், நிரல் எழுதுவதையும் மட்டுமல்லாமல் அறிவியலையும், கணிதத்தையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வழிவகுக்கின்றன. நாம் இதுவரை பார்த்த பாவனையாக்கியில் செய்யக்கூடிய பயிற்சிகளை… Read More »