உபுன்டுவில் லிபர்கேட் நிறுவி, முதல் பயிற்சியாக ஒரு விளிம்புத் தட்டு (flange) வரைபடம் வரைவது எப்படி என்ற என்னுடைய முந்தைய கட்டுரையை இங்கே படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட, நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட லிபர்கேட் 2.2 பயனர் கையேடு இங்கே காணலாம். வரித்தோற்றம் (orthogonal view) மற்றும் சம அளவுத்தோற்றம் (isometric view) இந்த மென்பொருளில் படத்தில் இடது பக்கம் உள்ள செங்குத்து வீழல் என்ற வரித்தோற்றம் தவிர படத்தில் வலது பக்கம் உள்ள சம… Read More »
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1
files.fsftn.org/s/dT2awkCCP2977Hq
எங்களது முதலாம் ஒலியோடைத் தொடரில், ட்ரு காலர் (True Caller) செயலியில் உள்ள பிழையை பற்றியும், நமது அரசின் டி.என்.ஏ தொடர்பான சட்டத்தைப் பற்றியும், டக்ஸ் கார்ட் (Tux Kart) என்கிற காணொலி விளையாட்டைப் பற்றியும், ப்ளெண்டர் என்னும் முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருளைப் பற்றியும், வேறு சிலவற்றை பற்றியும் பேசியுள்ளோம். இந்த ஒலியோடையில் ராதா கிருஷ்ணன், பாரதி மற்றும் சர்வேஷ் பங்கேற்றுள்ளார்கள்.
இந்த ஒலியோடையை கேட்டப்பின் உங்களது கருத்துக்களை எங்களுடன் பருகுங்கள், அது நாங்கள் முன்னேற உதவியாய் இருக்கும்.
இந்த ஒலியோடையைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள் : ask@fsftn.org
FSFTN பற்றி மேலும் அறிந்துகொள்ள : fsftn.org/
எந்திரவியல் பொறியியலே நம் குவியம் தொழில்முறை கட்டடக்கலை (architecture), பொறியியல் (engineering), அசைவூட்டம் (animation) மற்றும் வரைபட வடிவமைப்பு (graphic design) ஆகியவற்றிற்கு கணினி வழி வடிவமைப்பு மென்பொருள் ஒரு முக்கியமான கருவியாகும். எனினும் இக்கட்டுரைத் தொடரில் நம் குவியம் எந்திரவியல் பொறியியலில் தானிருக்கும் என்பதை நீங்கள் ஒருவாறாக யூகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் நம்முடைய எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் கயெக கடைசல் எந்திரம் (CNC Lathe) அல்லது செங்குத்து துருவல் மையம் (VMC – Vertical Machining… Read More »
நீங்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு புது மாதிரியான மின்சார ஆட்டுக்கல் என்ற தோசை மாவு அரைக்கும் இயந்திரம் தயாரிக்கும் யோசனை வருகிறது. அதை நன்கு பகுப்பாய்வு செய்து உங்கள் நிறுவனத்தின் தலைவர்களுக்கு காட்சிப் படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் உங்கள் யோசனை பிடித்து விட்டது. இந்தத் தயாரிப்பை சந்தையில் நன்றாக விற்பனை செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். உங்கள் திட்டத்தில் முதலீடு செய்ய முன்வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்படி உற்பத்திப் பொருள்… Read More »
இது வரை நாம் பார்த்த எந்திரன் தொகுதிகள் கீழ்க்கண்ட வகையில் மிகவும் பயனுள்ளவை: ஆறு வயது முதல் பல்வேறு வயது வரம்புக்கு உட்பட்ட சிறுவர்கள் கற்றுக்கொள்ள எளிதாக நிரல் எழுதும் வகைகள் பல உண்டு. கைமுறையாக செயல்படுத்திப் பார்க்க பல வழிமுறைகள் இருப்பதால் எந்திரனியல் அடிப்படைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். சிறுவர்கள் விளையாட்டாக தொழில் நுட்பத்தையும், நிரல் எழுதுவதையும் மட்டுமல்லாமல் அறிவியலையும், கணிதத்தையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வழிவகுக்கின்றன. நாம் இதுவரை பார்த்த பாவனையாக்கியில் செய்யக்கூடிய பயிற்சிகளை… Read More »
எந்திரன் தொகுப்புகளை வாங்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை நீங்கள் யாருக்காக எந்திரன் தொகுப்பை வாங்கப் போகிறீர்களோ அந்த வயது வரம்புக்குத் தோதான நிரல் எழுதும் வகை அதில் உண்டா என்று முக்கியமாக உறுதிப்படுத்தவும். கற்றுக்கொள்ள மட்டும்தான் என்றால் நீங்கள் பாவனையாக்கிகளிலேயே கற்றுக்கொள்ள முடியும். உங்கள் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது ஊரிலோ ஒரு எந்திரன் போட்டியில் பங்கு பெறுவது போன்ற பெரிய குறிக்கோளை வைத்து அதற்குத் தகுந்த எந்திரன் தொகுப்பை வாங்குவது பயனுள்ள செயல். எந்திரன் தொகுப்புகளுடன்… Read More »
ஆர்க்பாட்டிக்ஸ் (ArcBotics) ஸ்பார்க்கி ஒரு சாதாரண பொம்மையல்ல. எந்திரனியல் பற்றியும் அதன் அடிப்படைகளான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள உதவும் ஒரு கல்விக்கான அடிப்படைத் தளமாகும். ஸ்பார்க்கி நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டது. ஸ்பார்க்கிக்கு 4 AA மின்கலங்கள் தேவை. நீங்கள் வழக்கமான கார (alkaline) மின்கலங்கள் அல்லது மீண்டும் மின்னேற்றவல்ல (rechargeable) மின்கலங்களைப் பயன்படுத்தலாம். குறைந்த விலை எந்திரன்களில் வரும் மலிவான மின்விசைகள் போலல்லாமல் இதில்… Read More »
லெகோ மைண்ட்ஸ்டார்ம்ஸ் (Mindstorms) என்பது பல புதிய அம்சங்கள் உள்ள மாதிரி. இருப்பினும் இதன் பாதி செலவில், பாதி மெனக்கெடுதலில் முக்கால்வாசிக்கு மேல் கற்றுக் கொள்ளக் கூடியது அவர்களின் வயதில் இளையவர்களுக்கான மாதிரி லெகோ பூஸ்ட்தான். இதில் பயிற்சி செய்ய உங்களிடம் ஒரு ஐபாட் அல்லது ஆண்ட்ராய்டு கைக்கணினி இருக்க வேண்டும். திறன்பேசிகளையும் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவற்றின் சிறிய திரைகளில் வரைபடங்களின் விவரங்களைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம். நிரல் எழுதக் கற்றுக்கொள்வது இன்றைய தலைமுறைச்… Read More »
எந்திரனின் மூளை என்று சொல்லக்கூடிய கட்டுப்பாட்டு மையமாக செயல் புரிய நமக்கு ஒரு நுண்கட்டுப்படுத்தி அல்லது கணினி தேவை. நகரும் எந்திரன் என்றால் இது கையடக்கமாக இருப்பது அவசியம். மேலும் முக்கியமாக துணைக்கருவிகள், திறந்த மூல நிரல் முன்மாதிரிகள், கேள்வி பதில் மன்றங்கள் இருந்தால் நாம் செய்ய முயலும் வேலைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அர்டுயினோ (Arduino) போன்ற நுண்கட்டுப்படுத்திகளும் மற்றும் ராஸ்பெரி பை (Raspberry Pi) போன்ற கையடக்கக் கணினிகளும் இத்தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்யக் கூடியவை.… Read More »
இந்த இணைப்பில் ஒருவர் ஆன்ட்ராய்டு திறன்பேசியின் புகைப்படக் கருவியை வைத்து ஒரு பொருளை அடையாளம் கண்டு அதைப் பின்தொடர்தல் திட்டத்தை செயல்படுத்தி விவரங்கள் கொடுத்துள்ளார். இதை இயக்கும் நுண்கட்டுப்படுத்தி அர்டுயினோ. அர்டுயினோ மற்றும் திறன் பேசியைத் தவிர மற்ற பாகங்கள் வாங்க செலவு சுமார் ரூபாய் 5000 என்கின்றார். இந்த செயலி ப்ளுடூத் ஊடலை வழியாகக் காணொளியைக் கணினிக்கு அனுப்புகிறது. இந்தக் காணொளியிலிருந்து நமக்குத் தேவையான உருவத்தை நாம் அடையாளம் காண வேண்டும். இதற்கு ஓப்பன் சிவி… Read More »