Tag Archives: tamil

எளிய தமிழில் Python – 02 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. History of Python 2. GEN of Python 3. Python Installation 4. Printing Statement 5. Comments in Python 6. Arithmetics 7. Data Types போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி… அடுத்த காணொளி…

எளிய தமிழில் Python – 01 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. What is Program? 2. What is Programming Language? 3. Why Python? 4. Simple Syntax 5. Usage போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… அடுத்த பாகம்…

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா ஆதரவு கட்டுரைகளுக்கு பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்து காணொளி இந்தச் சுட்டியில் உள்ளது. இந்தக் காணொளியில் மொசில்லா ஆதரவு(Support Mozilla) கட்டுரைகளுக்குப் பங்களிப்பது குறித்து இந்தக் காணொளியில் காணலாம். சுட்டிகள்: 1. support.mozilla.org/ta/ 2. mozillians.org/ 3. groups.google.com/forum/#!forum/mozilla.dev.l10n.ta/join 4. lists.mozilla.org/listinfo/dev-l10n-ta  

எளிய தமிழில் CAD/CAM/CAE 19. சிஎன்சி நிரல் இயற்றல் (Computer Aided Manufacturing – CAM)

கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களைத் தமிழில் அஃகுப்பெயராக கயெக எந்திரங்கள் என்று கூறலாம். இவற்றுக்கு எவ்வாறு நிரல் எழுதுவது என்பது பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம் கயெக நிரலாக்கம் (CNC Programming). கயெக எந்திரங்கள் பற்றிய அடிப்படைகள் தெரிந்துகொள்ள என்னுடைய எளிய தமிழில் CNC மின்னூலை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். நாம் ஒரு பாகத்தை CNC இயந்திரத்தில் வெட்டித் தயாரிக்க வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அதற்கு G… Read More »

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா தமிழ் மொழியாக்கத்தில் பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா என்ற திறந்த மூல மென்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும், உலாவிகளில் ஒன்று. கணினிக்கான உலாவியாக உருவெடுத்த ஒரு தொழில்நுட்பம் இன்று, இணைய உலகில் தனியுரிமையை பாதுகாக்கவும், இணையத்தை கட்டற்ற அமைப்பாக வைக்கவும், தன்னாலான போராட்டத்தைச் சில சமரசங்களோடு நடத்திவருகிறது. ஒரு பயனுருடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துப் பணமாக்கவும், பயனர் வாழ் பகுதியின் அரசியலை தீர்மானிக்கவும் இணையம் பயன்படுத்தப்பட்டுவரும் இதே காலக்கட்டத்தில் தான், ஒரு அமைப்பு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்துடன்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 18. எண்சார்ந்த பகுப்பாய்வு (Numerical Analysis)

உங்கள் முன்னிருக்கும் ஒரு பொறியியல் வடிவமைப்பு பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுக்கு ஒரு நூதனமான எண்ணம் உதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கருத்துரு நடைமுறையில் செயல்படுமா என்பதை எவ்வாறு நிரூபணம் செய்வது? மேட்லாப் (MATLAB) போன்ற கணித ரீதியான “முன்மாதிரி” மற்றும் சிமுலிங்க் (Simulink) போன்ற அமைப்புகள் “கருத்துருக்கான ஆதாரம் (proof of concept)” அமைப்புகளை உருவாக்குவதற்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கின்றன. அதன் பின்னர்தான் அந்த கருத்துருவை மேம்பாடு செய்து செயல்முறைக்குக் கொண்டுவர ஒரு குழுவை அமைக்கவும்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 17. சிறுகூறு பகுப்பாய்வு (Finite Element Analysis – FEA)

ஒரு பளு ஏற்றிய பாகத்தில் தகைவு (stress) மற்றும் அதன் விளைவுகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அல்லது ஒரு பாகத்தை ஓரிடத்தில் சூடாக்கும் போது அதன் வெவ்வேறு பகுதிகளில் வெப்பநிலை (temperature) எவ்வாறு மாறுபடும் என்று பகுப்பாய்வு செய்ய வேண்டுமென்று வைத்துக் கொள்வோம்.  இவற்றை முழுமையான, சிக்கலான வடிவங்களாக இல்லாமல் எளிய சிறு கூறுகளாகப் பிரித்துப் பகுப்பாய்வு செய்வது ஆகக்கூடியது. இந்த பாகத்தை நாம் கருத்தியல்படி சிறு கூறுகளாகப் பிரித்துக் கொள்வோம். இந்த… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 16. பொறியியல் பகுப்பாய்வு (CAE)

உங்கள் தயாரிப்பை வாடிக்கையாளர்கள் வாங்கி அவர்களுடைய வேலைகளுக்குப் பயன்படுத்தும்போது சில சமயங்களில் சில பாகங்கள் வளைந்தோ (bending), முறுக்கியோ (twisting), நுண் வெடிப்பு விட்டோ (hairline cracks) அல்லது முற்றிலும் உடைந்தோ (broken) சேதமாகலாம். உத்தரவாதக் காலத்தில் உங்கள் வாடிக்கையாளர்கள் இவற்றை உங்கள் விற்பனையாளர்களுக்குத் திருப்பிக் கொடுத்து இலவச மாற்றீடு (free replacement) தயாரிப்பு கேட்பார்கள். வணிகத்தில் உங்களுக்கு இழப்பு நேரிடுவது மட்டுமல்லாமல் தரமற்ற பொருளை விற்றதால் உங்கள் தயாரிப்புக்கும், உங்கள் நிறுவனத்துக்கும் சந்தையில் பெயர் கெட்டு… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 15. ஓபன்ஸ்கேட் (OpenSCAD) & பௌலர்ஸ்டுடியோ (BowlerStudio)

ஓபன்ஸ்கேட் நிரல் எழுதி 3D மாதிரி உருவாக்கும் திறந்தமூல CAD மென்பொருள். இதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். ஓபன்ஸ்கேட் மற்ற CAD கருவிகள் போல ஊடாடும் (interactive) மாதிரியாக்கி அல்ல அளவுரு மாதிரியமைத்தல் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டு வரலாம். அதில் அம்சங்கள் அடிப்படை (Feature-based) அல்லது வரலாறு அடிப்படை (History-based) முறையில் எந்த வடிவத்தில் தொடங்கினோம், என்னென்ன செய்து இந்த சிக்கலான வடிவத்துக்கு வந்து சேர்ந்தோம் என்ற வழிமுறைகளைச் சேமித்து வைப்பதைப் பற்றிப்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 14. வளைந்த மேற்பரப்பு (Curved surface) மாதிரியமைத்தல்

எல்லா விதமான 3D வடிவங்களையுமே திட வடிவம் உருவாக்கும் உத்திகள் மூலம் தயாரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கார் (car body), முடி உலர்த்தி (hair dryer), தலைக்கவசம் (helmet), மிக்சி (mixie) போன்றவற்றின் மேற்பரப்புகள் சீரற்ற (irregular) வடிவம் கொண்டவை. முன்னர் பார்த்தது போல அடிப்படை  வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி இவற்றை நாம் உருவாக்க முடியாது. திட வடிவ மாதிரி உருவாக்கும் கருவிகள் (solid modeling tools) ஒரு திட… Read More »