Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

தமிழும் ஒருங்குறியும் – இணைய உரையாடல் – ஜீலை 11 மாலை 7.30 – 8.30 IST – இசூம்

வரும் சனிக்கிழமை (11/07/2020) மாலை 7.30 – 8.30 மணிக்கு (இந்திய நேரம்) “தமிழும் ஒருங்குறியும்” என்ற தலைப்பில் ஓர் இணையவழி உரையாடல் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த கால வரலாறும், இற்றைநிலையும், எதிர்காலத்தில் செய்யவேண்டியவைகளும் பற்றி உரையாட எண்ணியுள்ளேன். இப்புலனத்தில் ஆர்வம் உள்ளோர், நேரம் இயன்றால் பங்கு கொள்ளுங்கள். கலந்து கொள்வதற்கான இணைப்பு விவரம் படத்தில் உள்ளது.

கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 – மாதிரி காணொளிகள்

சி.ம.இளந்தமிழ் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு கி.முத்துராமலிங்கம் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு   கலீல் ஜாகீர் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு   நீச்சல்காரன் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு பரதன் தியாகலிங்கம் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு குணசேகரன் கந்தசுவாமி – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு   நித்யா துரைசாமி – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு முத்து அண்ணாமலை – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ்… Read More »

கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 – நிகழ்ச்சி நிரல்

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும். மாநாட்டு பேராளர் கட்டணம் இலவசம். மின்… Read More »

மொழிகளின் எதிர்காலம் – பற்றிய இணைய உரை – ஜூன் 28 ஞாயிறு காலை 11

  மொழிகளின் எதிர்காலம் நாளை நடந்தது என்ன? 5 ஆம் உரை உரை – ஆழி செந்தில்நாதன் 21 ஆம் நூற்றாண்டில் மொழிகளின் எதிர்காலம் என்ன? தானியங்கு மொழிபெயர்ப்பு நுட்பத்தை (Machine Translation) வைத்து ஒரு பார்வை ஜூன் 28 ஞாயிறு காலை 11 மணிக்கு ஜூம் இணைப்பு – ஜூம் கூட்ட எண்- 914 500 51 996 இணைப்பு இதோ Time: Jun 28, 2020 11:00 AM Join Zoom Meeting zoom.us/j/91450051996

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு SOURCE :  upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Spell4Wiki.png Spell4Wiki  விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த Spell4Wiki செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரியில் உள்ள ஏராளமான சொற்களுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கி விக்கிப் பொதுவகத்திற்கு பதிவேற்றி பங்களிக்க முடியும். மேலும் இது ஒரு விக்கி-அகராதிபோலச் செயல்பட்டு, சொற்களுக்கான தகவலை(பொருளை) விக்சனரியிலிருந்து பெற்று தரும் என்பது மேலும் சிறப்பு.… Read More »

ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97

ஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல் – தமிழ் உரையில் உள்ள சொற்களின் மாத்திரை அளவை கணிக்க புதியசார்பு ‘tamil.utf8.total_maaththirai()’ என்று திரு. பரதன் தியாகலிங்கம் அவரால்… Read More »

கட்டற்ற மென்பொருள் , பைதான், நிரலாக்கம் பற்றிய ஒரு உரை

இன்று காலை பயிலகம் மாணவர்களுடன் கட்டற்ற மென்பொருட்கள், வரலாறு, தேவை, பைதான், நிரலாக்கம் செய்தல் ஆகியன பற்றி பேசினேன். 30 நாட்களாக தொடர்ந்து பைதான் மொழியை இணைய வழியில் கற்பித்துள்ளனர். நிகழ்வை ஏற்பாடு செய்த பயிலகம் குழுவினருக்கு நன்றி. அதன் பதிவு இங்கே – த.சீனிவாசன்

கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 2020

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் 4 – 5 ஜூலை 2020 அன்று, தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக… Read More »

தமிழ் திரட்டுகள் – ஒரு தரவு, மற்றும் மென்பொருள் பட்டியல்

வணக்கம், சமிபத்தில் பேரா. தெய்வசுந்தரம் ஐயா, “தமிழ் ஒரு தென்மையும், தொடர்ச்சியும், வளர்ச்சியும் கொண்ட மொழி; இதன் சமகால எழுத்திலக்கணம் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்!” என சிறப்பாக அடுத்த தலைமுறையினருக்கு ஒரு இலக்கு வைத்தார். சமிபத்தில் திற்மூல தமிழ் சொல்திருத்தியை உருவாக்க சீனிவாசன் மற்றும் பலர் முயற்சிகள் முன்னெடுத்துவருகிறார்கள். இதனையொட்டி தமிழில் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய மென்பொருட்கள், தரவுகள், திரட்டுகள் மற்றும் தரவுகளை பற்றிய ஒரு மென்பொருள் பட்டியலை தயரித்தும்/திரட்டியுள்ளேன்; github.com/Ezhil-Language-Foundation/awesome-tamil/blob/master/README.md முன்னப்பின்ன இருந்தால் புது தகவல்களை கிட் வழியாகவோ… Read More »

தமிழ் சான்றோர் சந்திப்பு: 30 May 2020 (சனிக்கிழமை)

தமிழ் சான்றோர் சந்திப்பு: 30 May 2020 (சனிக்கிழமை) ========================================= ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் இந்த வாரம், “மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தை (Project Madurai) 1990-களில் உருவாக்கி, உலகம் முழுவதும் நூலகங்களில் தேங்கிக் கிடந்த சங்ககாலத் தமிழ் நூல்களை மின்நூல்களாகத் தொகுத்து, நாமெல்லாம் கணினியில் படிக்க வழிவகை செய்த மதிப்புமிகு ஐயா திரு.கல்யாணசுந்தரம் அவர்களோடு உரையாடுகிறோம். உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் ஆர்வலர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுங்கள். Date… Read More »