வேர்ட்பிரஸ் தமிழ் – மொழிபெயர்ப்பாளர்கள் அறிமுக கூட்டம்
வேர்ட்பிரஸ் சென்னை நடத்தும் வேர்ட்பிரஸ் மொழிப்பெயர்ப்பாளர்களுக்கான அறிமுக கூட்டம். இந்த கூட்டத்தின் நோக்கம் வேர்ட்பிரஸ் வரும்கால பதிப்பை முழுக்க தமிழில் மொழிபெயர்த்து முடிப்பதே ஆகும். இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களும், மொழிப்பெயர்ப்பு மேற்பார்வையாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையை விப்ஜி நிகழ்த்த உள்ளார், இவர் மென்பொருள் பொறியாளராக பெல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஏற்கனவே தமிழ் மொழிப்பெயர்ப்பிற்கு பங்களிப்பு செய்துள்ளார். புதிய மொழிபெயர்பாளர்களுக்கு தமிழில் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது என்பது பற்றி விளக்க உள்ளார்.… Read More »