Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019

  நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிரல் திருவிழா-2 கணியம் அறக்கட்டளை சார்பில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. காலை பத்து மணிக்குத் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணியம் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. சீனிவாசன் முதல் ஆளாக வந்து, கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களுடன் உரையாடத் தொடங்கினார். நிரல் திருவிழா எதற்கு? கணினித் துறையில் எப்படி ஊர் கூடித் தேர் இழுக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு விளக்கமாகச் சொன்னார். வந்த இளைஞர்களுக்குக் கணியத்தைப் பற்றிய அறிமுகத்தையும் சீனிவாசனைப்… Read More »

தேடுபொறி அறிமுகம் – சுதந்திரமாக தேடுங்கள்

மூலம் – fsftn.org/blog/thedupori-arimugam/ இணைய, வலை பயனர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் தேடுபொறியாக கூகுள் இருந்து வருகிறது. கூகுள் அல்லாத பிற தேடுபொறி தளங்களையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு bing, duckduckgo, quant போன்ற தளங்கள். ஆயினும் கூகுள் போன்ற பல தேடுபொறி தளங்களை நாம் பயன்படுத்தும் போது நம் தனியுரிமையை (Privacy) இழக்க நேரிடுகிறது. கூகுளில் sign-in செய்து தேடுகையில் நாமே நாம் தான் என்று நம்மை அடையாளப்படுத்தி விடுகிறோம். அப்படி sign-in செய்யாமல்… Read More »

பங்களிப்பதற்காக அழைப்பு இணைய மொழி ஆதிக்கச் சூழலை மாற்றியதில் உங்கள்அனுபவம்!

மூலம் – cis-india.org/raw/dtil-2019-call “மொழி அழிவால் சொற்கள் மட்டும் அழிவதில்லை. நம் பண்பாட்டின் சாரமே மொழி தான். மொழியே நம் எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இவ்வுலகத்தை நாம் காண்பதும் மொழிவழியே தான். ஆங்கிலத்தால் அதை ஒருக்காலும் வெளிப்படுத்த முடியாது.” – போட்டோவாடோமி எல்டர் (ராபின் வால் கிம்மெரார் எழுதிய ‘பிரெயிடிங் சுவீட்கிராஸ்’ என்ற நூலில் இருந்து) சிக்கல்: மனித குலத்தின் பரந்துவிரிந்த பண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்தும் அளவுக்கு இன்றைய இணையம் பன்மொழிச் சூழல் கொண்டதாய் இல்லை. தகவல்களை அறிந்துகொள்வதற்கு… Read More »

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 – சென்னை

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 – சென்னை நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா? தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா? பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா நாள் – ஆகஸ்டு 24, 2019, சனி நேரம் – காலை 10.00 – மாலை… Read More »

ஊடாடும் வலைப்பக்க உருவாக்கப் பயிற்சி – ஆகஸ்டு 4 2019 – சென்னை – FSFTN

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஊடாடும் வலைப்பக்க உருவாக்கம் பற்றிய பயிற்சி அமர்வுக்கு அனைவரும் வந்து பயன் பெற அழைக்கிறது. இடம் : கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை அலுவலகம், 2வது தெரு, லட்சுமி காலனி,தியாகராய நகர், சென்னை .600017 (ஏஜிஸ் திரையரங்கம் அருகில்) நேரம் : ஆகஸ்டு 4 மாலை 3 – 5 மணி வரை  

விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – தொடக்க விழா – நிகழ்வுக் குறிப்புகள்

கல்விக்கு மறுபெயர் காசு என்கிற மோசமான நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கோம்! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதே போல கல்வி என்பதும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவத்தை பலர் உணராமல் மக்களுக்கு இன்றும் கல்வியை எட்டா கனியாக மாற்றி வருகின்றனர். கல்வியில் பல மாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப மாறி கொண்டே வருகிறது. இதில் தொழிற்நுட்பத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இன்றைய கால கட்டத்தில்… Read More »

சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம் – sangaelakkiyam.org

சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம்   சுருக்கமாக –   1812 முதல் 1950 வரை வெளியான பல்வேறு சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்து sangaelakkiyam.org/ என்ற இணைய தளத்தில் வெளியிடுவதில், கணியம் அறக்கட்டளை குழுவினர் அனைவரும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். சில மாதங்களுக்கு முன், இதற்கான ஒரு ஆன்டிராய்டு செயலியை வெளியிட்டோம். play.google.com/store/apps/details?id=com.jskaleel.sangaelakkiyangal இப்போது, கணினியில் பதிவிறக்கம் செய்து வாசிக்கும் வகையில் புது வலைத்தளத்தை வெளியிட்டுள்ளோம். சங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் தொகுக்கும் இம்முயற்சியில்… Read More »