Author Archives: srikaleeswarar

C மொழிக்கு ஒரு சிறிய அறிமுகம் | எளிய தமிழில் சி பகுதி-1

அனைத்து கணினி நிரலாக்க மொழிகளுக்கும் “தாய்” என அறியப்படும் கணினி மொழிதான் C. அடிப்படையில் கணினியும் இன்று பிறந்த குழந்தையும் ஒன்றுதான், கணினிக்கு நாம்தான் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுதான் “அ” , இதுதான் “ஆ”  , இதுதான் அகர எழுத்துக்கள், இதுதான் இலக்கணம், இதுதான் இலக்கியம், இப்படித்தான் நடக்க வேண்டும்! இப்படித்தான் பேச வேண்டும்! இத்தனை மணிக்கு அலாரம் வைக்க வேண்டும் !என்றெல்லாம் ஒவ்வொன்றையும், நாம் தான் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும்… Read More »

லாஜிக் கதவுகளும் அதன் பொதுவான வகைகளும் | லாஜிக் கதவுகள் பகுதி 2 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 29

கடந்த வாரம், லாஜிக் என்றால் என்னவென்று பார்த்திருந்தோம். லாஜிக் கதவுகள் எலக்ட்ரானிக்ஸ் துறையின் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கும் பிரிவு மட்டுமல்ல! மாறாக அன்றாட வாழ்வில் அனைத்து துறைகளிலும் “லாஜிக்” என்பது மிக மிக முக்கியமானது என்று தெளிவாக பார்த்திருந்தோம். இதுபோல என்னுடைய இன்னபிற, எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளைப் படிக்க கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். சரி! நம்முடைய எலக்ட்ரானிக்ஸ் துறையில், லாஜிக் கதவுகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன என்று பார்க்கின்ற பொழுது! பொதுவாக சுமார்… Read More »

எளிய தமிழில் C | புதிய தொடர் அறிமுகம்

நமது கணியம் இணையதளத்தில், பெரும்பாலான பிரபலமான நிரலாக்க மொழிகள்(programming languages) குறித்து தொடர்கள் வெளிவந்து, பின்பு புத்தகங்களாக கூட பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றன. Html,css, javascript,ruby எனப்  பல்வேறுபட்ட மொழிகள் குறித்தும், தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், கணினி நிரலாக்கம் என்று படிக்க செல்லும் ஒவ்வொரு மாணவருக்கு,ம் தொடக்கப்படியாக அமைவது “சி” எனப்படும் தொடக்க கணினி மொழிதான். உண்மையில், அனைத்து மொழிகளுக்கும் தலைமகனாகவும் இன்றும் “சி” விளங்குகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான சி பிளஸ் பிளஸ்(C++) குறித்தும் படித்திருப்பீர்கள்,… Read More »

எலக்ட்ரானிக்ஸ் துறையும் சில வதந்திகளும்| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 28

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது எலக்ட்ரானிக்ஸ் துறையோடு பின்னிப் பிணைந்து இருக்கும் சில வதந்திகளை பற்றி தான். அதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை என்றால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ பொதுவாகவே, அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் தான் தரமானதாக இருக்கும்! எனும் நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது. உண்மையிலேயே,… Read More »

ஒரு சிறந்த கட்டற்ற துவக்கி (launcher) | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9

நம்மில் பலரும் அதிகப்படியான நேரம் மொபைல் போன்களில் செலவழிப்பதற்கு, மிக முக்கியமான காரணம் மொபைல் போனை திறந்தாலே நாம் எதை தேட நினைத்தோமோ! அதை தவிர வேறு அனைத்தையும் பார்த்து முடித்து விடுகிறோம். நமது துவக்க திரையிலேயே வரக்கூடிய, விளம்பரங்கள்,காணொளிகள் ஆகியவை நமக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய, கவன சிதறல்களை தடுப்பதற்கு, ஏதேனும் செயலி இருக்கிறதா? என தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது! இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் துவக்கி செயலி( launcher app).… Read More »

லாஜிக் கதவுகள் : குறுங்தொடர் – அறிமுகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் – 27

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு தலைப்புகள் குறித்து 26 கட்டுரைகள் மூலம் நாம் விவாதித்திருக்கிறோம். இனிமேல் வரக்கூடிய சுமார் பத்து கட்டுரைகள் வரை, லாஜிக் கதவுகள் தொடர்பாக விரிவாக பார்க்கவிருக்கிறோம். இந்த 10 கட்டுரைகளையும் எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியோடு, குறுந்தொடராக வெளியிட நான் முடிவு செய்து இருக்கிறேன். என்னுடைய, இன்ன பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ அடிப்படையில், நம்மில் பலரும் பள்ளி மற்றும்… Read More »

Multi pin socket( பல இணைப்புச் சொருகி) | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 26

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அடுத்த கட்டுரையிலிருந்து லாஜிக் கதவுகள் தொடர்பாக ஒரு குறுந்தொடர் கட்டுரையை எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன். அந்த கட்டுரையை தொடங்குவதற்காக, சிறிது காலம் தகவல்களை முறையாக திரட்டி வருகிறேன். இருந்த போதிலும், வாரந்தோறும் எழுதும் கட்டுரையை தொடர வேண்டும் எனும் நோக்கில் இன்றைக்கு எதைப்பற்றி எழுதலாமென நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான், பயன்படுத்தாமல் தூக்கிப்போட்டிருந்த ஒரு பழைய multi pin plug கிடைத்தது. பொதுவாக, நம் அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு… Read More »

லினக்ஸ் கடலுக்குள் நுழைந்து இருக்கிறேன்

கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக, கணியம் இணையதளத்தில் கட்டற்ற தரவுகள் தொடர்பாக கட்டுரைகள் எழுதி வருகிறேன். லினக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் கணியம் இணையதளத்திற்குள் நுழைந்தவன் தான் நான். கொஞ்சம்,கொஞ்சமாக லினக்ஸ் தொடர்பாக கற்றுக் கொள்ள தொடங்கினேன். இன்றும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், ஆரம்பத்திலேயே மொழிபெயர்ப்பு கட்டுரைகளை கணியத்தில் வெளியிட தொடங்கி விட்டேன். லினக்ஸ் பயன்படுத்தி பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் இருந்தது. ஆனால், அதே நேரம் என்னிடத்தில் கணினி இருந்திருக்கவில்லை. அதன்… Read More »

உங்கள் மொபைல் போனை இயற்பியல் ஆய்வுக்கூடமாக மாற்றுங்கள் | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்: 8

பல்வேறு விதமான, கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக நம்முடைய கட்டுரைகளில் பார்த்து வருகிறோம். ஆனால், நம் வழக்கமாக பார்க்கக்கூடிய ஆண்ட்ராய்டு செயலிகள் அனைத்துமே, ஏற்கனவே இருக்கக்கூடிய செயலிகளின் மாற்று வடிவமாகவே இருக்கும். அதாவது, ஏற்கனவே விளம்பரத்துடன் கிடைக்க கூடிய செயலிகளை, விளம்பரம் இன்றி பயன்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கும். புதியதாக, நவீனத்துவமாக செயலிகளை காண்பது கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. மொபைல் போன்களின் ஆதிக்கம் தொடங்கிய காலத்தில், symbian போன்ற இயங்குதளங்களில் வெளியான மொபைல் போன்களில், நகைச்சுவைக்காகவே பல… Read More »

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல்

நமது கணியம் இணையதளத்தில், விக்கிமூல பங்களிப்பாளர்கள் பலர் குறித்தும், கட்டுரைகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். சமீபத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு.தாஹா புகாரி அவர்களிடம், எழுத்து வடிவில் ஒரு நேர்காணலையும் மேற்கொண்டு இருந்தோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் நேர்காணல் செய்யவிருக்கக் கூடிய விக்கி மூல பங்களிப்பாளர்; வெறும் விக்கி மூலதோடு தன்னுடைய பணியை நிறைவு செய்துவிடவில்லை. விக்கி மூலத்திற்கு முன்பாகவே சுமார் 25 ஆண்டுகளாக, அறிவியல் எழுத்தாளராக அறியப்படக்கூடியவர் ஏற்காடு இளங்கோ அவர்கள். 1992… Read More »