Category Archives: கணியம்

பழைய பதிவுக் கோப்புகளை நீக்குதல்

நீங்கள் உபயோகப்படுத்தும் ஒரு மென்பொருள் ஒவ்வொரு முறை அதை உபயோகப்படுத்தும் போதும், வெளியீடுகளை ஒரு பதிவுக் கோப்பில்(log file) எழுதுகிறது என்று வைத்துக் கொள்வோம். சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் கணினியை நீங்கள் சோதிக்கும் போது, அந்த பதிவுக் கோப்புகளே வட்டின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. இப்போது நீங்கள் 30 நாட்களுக்கும் மேலான பழைய பதிவுக் கோப்புகளை நீக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள். இதற்காக நீங்கள் நிரம்ப யோசிக்க வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள… Read More »

ஜேம்ஸ் வாட் : விஞ்ஞானியை காட்டிலும் ஒரு தனியுரிமைவாதி !

1764இன் பிற்பகுதியில், நியூகோமேன் நீராவி எந்திரத்தை சீர் செய்துகொண்டுஇருந்த ஜேம்ஸ் வாட்’இன் மனதில் “நீராவியை விரிவடைய செய்து பின் தனி தனி கொள்கலன்களில் குளிர செய்யலாம்” என்ற எண்ணம் உதித்தது. அடுத்த சில மாதங்களில் இடைவிடாது புதிய எந்திரத்தின் மாதிரியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார். 1768இல் தொடர் முன்னேற்றங்கள் மூலமும் கணிசமான கடன்கள் மூலமும், ஆகஸ்ட் மாதம் லண்டன் செல்ல ஏதுவாகவும், தன்னுடைய சிந்தனைக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அடுத்த ஆறு மாதங்கள் இந்த காப்புரிமையை பெற கடுமையாக… Read More »

இயங்கு தளத்தை நகலெடுக்கலாமா ?

  லினக்ஸின் அருமை, பெருமைகளை விண்டோஸ் பயனரிடம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் தெரிவிக்கும் பொதுவான கருத்து, ”இவ்வளவு சிறப்பு வாய்ந்த இயங்குதளம் ஏன் பலராலும் பயன்படுத்தப்படவில்லை ? ” என்பதுதான். பல புகழ்பெற்ற நிறுவனங்கள் லினக்ஸை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ வேறு வழியில்லாமல் தங்களுடைய மென்பொருள்களில் பயன்படுத்து வருகின்றனர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். லினக்ஸ் ஒரு இயங்குதளமாக மட்டுமல்லாமல் மீள்வட்டு என்றழைக்கப்படும் Recovery Disks, காப்பெடுத்தல் (Backup), கடவு சொல்லை மீட்டல் (Password Recovery), வன்தட்டை… Read More »

PHP கற்கலாம் வாங்க – பாகம் 2

PHP பாகம்-2 PHP என்பது என்ன? PHP என்பது தற்சுதந்திர(Intuitive), வழங்கியினிடத்தே (server-side) எழுதப்பட்டிருக்கிற ஒரு கதைவழி-மொழி(Scripting language) ஆகும். மற்ற கதைவழி மொழியைப்போலவே, இது மாறுநிலை வலைப்பக்க பொருளடக்கத்தின்(Dynamic webpage content) உருவாக்கத்திலும், வலைஉலவியிலிருந்து (Web browser) பெறப்பட்ட தரவுகளை கையாளவும் தேவையான மாறாநியதியை(Logic) உருவாக்க மேம்படுத்துபவரை அனுமதிக்கிறது. இது தரவுத்தளத்துடன்(Database) இணைந்து செயல்படவும், வலைப்பக்கத்தில் திரையிடக்கூடிய தரவுகளை(Data) பிரிப்பதிலும், பயனரால் உள்ளிடப்பட்ட தகவல்களை தரவுத்தளத்தினுள் சேமிக்கவும் தேவையான விரிவாக்கங்களைக்(Extensions) தன்னுள் கொண்டுள்ளது. PHP எப்படி… Read More »

பார்ட்டிசியன் உருவாக்குதலும் கோப்பு முறைமையும் -2

பார்ட்டிசியன் என்றால் என்ன? வன்வட்டிற்கு லினக்ஸ் பெயரிடும் முறை ஆகிய செய்திகளை சென்ற மாதம் வெளிவந்த இதழில் தெளிவாகப் பார்த்தோம். இந்த இதழில் பார்ட்டிசியன் பிரித்தல் தொடர்பான செய்திகளைப் பற்றி பார்ப்போம். பார்ட்டிசியன் பிரித்தல்: ஒரு வன்வட்டினை பார்ட்டிசியன் பிரிப்பதற்கு பல்வேறு வகையான கருவிகள் உள்ளன. உதாரணமாக fdisk, Gparted, போன்றவைகள். விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதள வட்டினைக் கூட வைத்து பிரிக்கலாம் ஆனால் நாம் இங்கு அதைப் பற்றி பார்க்கப் போவதில்லை. fdisk மற்றும் Gparted இரண்டினைப்… Read More »

எளிய செய்முறையில் C – பாகம் – 3

  சென்ற இதழில் உள்ளீடு(input) மற்றும் “விடுபடு தொடர்” (Escape Sequence) என்பதை பார்த்தோம். இப்போது மாறிகள்/மாறிலிகள் மற்றும் அதன் பயன்களை (Variables and uses) பார்ப்போம் மாறிகள்(variables): மாறிகள் எனபது ஒரு பெயர் – அது சேமிப்பு இடத்தை (Storage Location pointed by a name) குறிக்கும். எடுத்துக்காட்டாக வேகம்(Speed) என்பதை “S” என்ற பெயரில் குறிக்கலாம். இது எந்த ஒரு எண்ணாகவும் இருக்கலாம். மாறிலிகள்(Constants) மாறிலிகள் என்பதுவும் ஒரு பெயரே. ஆனால் இதன்… Read More »

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பாகம் -1

  Free For All – by Peter Wayner புத்தகத்தின் மொழிபெயர்ப்பு   விவாதம்   ஜனவரி 1998   பணம் மட்டுமே முதன்மையாக வஞ்சகம் மட்டுமே உயிர் குணமாய் கொண்ட உலகம். வாஷிங்டன் D.C-ன் ஒரு நீதிமன்றத்தில், உலகின் பெரும் பண முதலையான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனக்காக வாதாடுகிறது. “மைக்ரோசாப்ட், ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறது. தனது பலத்தால் போட்டியாளர்களை நசுக்கி வளரவிடாமல் செய்கிறது” என்பதே குற்றச்சாட்டு. ஆனால் இவற்றை மைக்ரோசாப்ட் மறுக்கிறது. இது ஒரு… Read More »

லினக்சில் பூட் லோடார்கள் (Boot Loader) – (1)

  லினக்சில் பொதுவாக இரண்டு boot loader – கள் பயன்படுத்தப்படுகின்றன . அவை   LILO -> LInux LOder   GRUB -> GRand Unified Bootloader   இதில் GRUB பூட்லோடரை கொண்டுதான் பெரும்பான்மையான லினக்ஸ் இயங்குதளங்கள் வெளியிடப்படுகின்றன.ஏனென்றால் LILO லோடருக்கும் , GRUB பூட் லோடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவை LILO லோடரானது 16 வித்தியாசமான booting தேர்வினை மட்டுமே ஆதரிக்கும்.ஆனால் GRUB பூட் லோடரானது அளவில்லாத பூட்டிங் தேர்வினை… Read More »

கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும்

கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும் பகுதி – I (கல்வி மற்றும் அறிவியலுக்கான லினக்ஸ் வழங்கல்கள்) லினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதாலும், நெகிழ்வுத் தன்மை கொண்டதாலும் உலகம் முழுவதும் பல நூறு லினக்ஸ் வழங்கல்கள் பலராலும் உருவாக்கப்பட்டு தங்களுடைய தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்தும், மேம்படுத்தியும் வெளியிடப்பட்டு வருகிறது. சில லினக்ஸ் வழங்கல்கள் சில குறிப்பிட்ட பணிகளுக்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. உதாரணத்திற்கு Free NAS, NetBSD, System Rescue CD, IP Cop போன்றவற்றைக் கூறலாம். இதே… Read More »

பைதான் – 8

மாடியூல் – Module: பைதான் interpreter- ல் சிறிது நேரம் வேலை செய்கிறீர்கள். பல variableமற்றும் functionகளை உருவாக்கி பயன்படுத்துகிறீர்கள். பின் interpreter-ஐ விட்டு வெளியேறுகிறீகள். சிறிது நேரம் கழித்து மீண்டும் python interpreter-ஐ இயக்குகிறீர்கள். இதில் சற்று நேரத்திற்கு முன் உருவாக்கிய variable மற்றும் functions கிடைப்பதில்லை. அவற்றை பயன்படுத்த, மீண்டும் உருவாக்க வேண்டும். இதற்கு ஒரே மாற்று வழி, நாம் எழுதும் program வரிகளை ஒரு text file-ல் சேமித்து, பைதான் மூலம் அந்த… Read More »