எளிய தமிழில் VR/AR/MR 19. கல்வி மற்றும் பயிற்சியில் AR
வகுப்பறையில் ஈர்க்கும் அனுபவத்துக்கு மிகை மெய்ம்மை (AR) தோற்ற மெய்ம்மையின் (VR) மூழ்க வைக்கும் அனுபவங்கள் (immersive experiences) மூலம் கற்றல் ஆழமாகப் பதிகிறது என்றும் பயில்வோர் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துகின்றனர் என்றும் முன்னர் பார்த்தோம். VR காட்சிகளில் நாம் மெய்நிகர் உலகத்திலேயேதான் இருக்கமுடியும். ஆனால் AR தொழில்நுட்பம் காட்சிகளை நம்முடைய வகுப்பறைக்கே கொண்டுவருகிறது. இதன் விளைவாக, வகுப்புகள் மிகவும் ஊடாடும் அனுபவமாக ஆகின்றன. மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட தகவல்களை சிறப்பாக நினைவில் வைக்க AR உதவுகிறது.… Read More »