Category Archives: கணியம்

துருவங்கள் – அத்தியாயம் 12 – அதையும் தாண்டி புனிதமானது

அதையும் தாண்டி புனிதமானது காரின் முன்னால் பார்த்துக் கொண்டு வந்த மதனுக்கு திடீரென்று ரியர் வியூவ் மிரரை பார்க்க தோன்றியது, யாரும் பார்க்காதவாறு மிரரை பார்க்க கார்த்திகா மதனை பார்த்தவாரே இருந்ததை கண்டான். மதனை பார்த்ததும் கார்த்திகா வேறு இடத்தை பார்க்க தொடங்கினாள். மதன் சிறிய புன்முருவலுடன் மிரரை பார்த்தவாரே இருந்தான். சில நொடிகள் கழித்து கார்த்திகா யாரும் பார்க்காதவாறு மீண்டும் மிரரை பார்க்க, அங்கே மதன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தாள். இருவரும் ஒருவரை… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 11 – பதினாறும் பெற்று

பதினாறும் பெற்று அன்று திங்கட்கிழமை, மதியம் உணவு இடைவேளையில் சுரேஷ், தீப்தி, மதன், கார்த்திகா நல்வரும் ஒன்று கூடினர். ‘நேத்தி கயலும் குருவும் வீட்டுக்கு வந்திருந்தாங்க, அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்தாங்க’ சுரேஷ் ஆரம்பிக்க ‘உங்க வீட்டுக்குமா, எங்க வீட்டுக்கும் போய் அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்திருக்காங்க, அம்மா போன் பண்ணி சொன்னாங்க’ தீப்தி கூற ‘வர சண்டே மேரேஜ், நீ போறியா இல்ல நாங்க போகட்டுமான்னு எங்க வீட்லயும் கேட்டாங்க’ மதன் கூற ‘போன்ல சொன்ன… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 10 – குலசாமி

குலசாமி ‘எங்கடா இருக்க ரூம்லயா?’ தீப்தி சுரேஷை போனில் கேட்க ‘இல்லடி வீட்டுக்கு வந்திருக்கேன்’ சுரேஷ் கூற ‘கோயிங் டு பி பிக் ப்ராப்ளம் இன் மை ரூம், கயல் அக்காவோட அம்மாகிட்ட கயல் அக்காவோட மாமா பையன் மறுபடியும் போய் பொண்ணு கேட்டிருக்கார், கொடுக்கலைன்னா மெட்ராஸ்ல இருக்கிற உங்க பொண்ண கூட்டிட்டு போய் தாலி கட்டி அப்படியே ஸ்ரீநகர் கூட்டிட்டு போயிடுவேன்னு சொல்லி இருக்கார். அவங்க அம்மா உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு சொல்லி இருக்காங்க, இந்த… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 9 – மழலை காதல்

மழலை காதல் அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, கயல் வழக்கம் போல தன் துணிகளை வாஷிங் மெஷினில் துவைத்து ஆற வைத்துக் கொண்டிருந்தாள், கார்த்திகா தன் லேப்டாப்பில் ஏதோ நோண்டி கொண்டிருந்தாள், தீப்தி படுத்துக்கொண்டு வாட்சாப்பில் சுரேஷுடன் சேட் செய்துகொண்டிருந்தாள். ‘தீப்தி, எப்பப்பாரு அந்த வாட்சப்ல இருக்கியே அப்படி என்னதான்டி பேசுவ’ காயல் கேட்க ‘நீங்க உங்க ஆள் கூட என்ன பேசுரீங்களோ, அதத்தான் நானும் பேசுரேன், என்ன நீங்க மேக்சிமம் ஒரு மணி நேரத்துக்குள்ள எல்லாத்தையும் பேசி… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 8 – ஒன் ஆப் அஸ்

ஒன் ஆப் அஸ் வழக்கம் போல் கார்த்திகா அன்று காலையிலேயே மதன் கியூபிக்கலுக்கு வந்திருந்தாள். ‘நேத்து நீங்க ப்ராசஸ் பத்தி விலக்கி சொன்னீங்கல்ல, போய் படிச்சேன். சிஸ்டத்துல என்னென்ன ப்ராசஸ் ரன் ஆகுது, அந்த ப்ராசஸ்கல எப்படி பார்க்கிறது, என்ன கமாண்ட் யூஸ் பண்ணனும், எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வந்திருக்கேன். சொல்லட்டுமா’ கார்த்திகா கேட்க ‘ஓக்கே’ என்று மதன் கூறினான். ‘முதல்ல ps கமாண்ட், இந்த கமாண்ட் மூலம் நம்ம சிஸ்டத்தில் ரண் ஆகிக்கொண்டிருக்கும் அத்தனை ப்ராசஸ்களையும் பார்க்க… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 7 – நெஞ்சில் உள்ளாடும் ராகம்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் கார்த்திகா காலையிலேயே மதனின் க்யூப்பிக்கல் வந்திருந்தாள். ‘லினக்ஸ் கமாண்ஸ் படிக்க படிக்க வந்துக்கிட்டே இருக்கு எப்படி நியாபகம் வெச்சிருக்கீங்க?’ கார்த்திகா கேட்க ‘எல்லாத்தையும் நியாபகம் வச்சிருக்க முடியாது, நாம ரெகுலரா யூஸ் பண்றது மட்டும் தான் நம்ம நியாபகத்துல இருக்கும், நாம ரெகுலரா லினக்ஸ யூஸ் பண்ண கத்துக்க வேண்டியது ரெண்டு விஷயம், ஒன்னு பைல் சிஸ்டம் ஸ்ட்ரக்சர், ரெண்டாவது ப்ராசஸ். நேத்திக்கு நீங்க சொன்ன கமாண்ஸ் எல்லாம் பைல் சிஸ்டம் சம்பந்தப்பட்ட… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 6 – யூனிவர்சின் நிறம்

யூனிவர்சின் நிறம் ‘டேய் நாயே, எழுந்திரிடா, சாப்பிட போகலாம், பசிக்குது’ மதன் சுரேஷை எழுப்ப ‘சண்டேடா, மதியம் வரைக்கும் தூங்கலன்னா சண்டேக்கு மரியாதையே இல்லடா’ சுரேஷ் புலம்ப ‘நைட்டெல்லாம் வாட்சப்ல மொக்க போடுறது, டே டைம்ல தூங்குறது’ மதன் கூற ‘லவ் பண்றவங்க இது கூட பண்ணலன்னா அப்றம் அந்த லவ்வுக்கு அர்த்தம் இல்லடா, அதெல்லாம் உன்ன மாதிரி சாமியாருக்கு புரியாது’ சுரேஷ் கூற ‘நான் சாமியாரவே இருந்துட்டு போறேன், சாப்டவா போலாம், இப்பவே மதியம் ரெண்டு… Read More »

க.க.க.வா – கற்கும் கருவியியல் கற்போம் வா – 2

கற்கும் கருவியியலின் (Machine Learning) முக்கிய பகுதி நரவலை (Neural Networks). இவை மனித மூளையை அடிப்படையாகக் கொண்டது.  மூளையில் ஏறக்குறைய நூறுகோடி நரம்பணுக்கள் உள்ளன, ஒவ்வொரு அணுவும் மற்ற ஆயிரக்கணக்கான அணுக்களோடு பின்னப்பட்டிருக்கும். கணினியில் எப்படி எளிமையான செயலாக்கம் கொண்ட டிரான்சிசுட்டர்கள் பல்லாயிர எண்ணிக்கையில் சேர்ந்து இயங்கும்போது கணினி வியத்தகு செயல்களைச் செய்கிறதோ,  அப்படியே எளிமையான நரம்பணுக்கள் கூட்டாக இயங்கும்போது மூளை வியத்தகு வேலைகளைச் செய்கிறது. இயற்கையாக அமைந்த மூளையின் செயலையும் அமைப்பையும் உந்துதலாகக்கொண்டு செய்யறிவறிஞர்கள் படைத்தது… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 5 – முதல் ஐலக்சி மீட்டப்

முதல் ஐலக்சி மீட்டப் ‘பா, நானா கட்டிக்க மாட்டேன்னு சொல்றேன், என் ஜாதகத்துல அப்படி இருந்தா அதுக்கு நான் என்ன பண்றது. போன் பண்றப்பல்லாம் இந்த டாபிக் எடுக்காம இருக்க மாட்டீங்களா? வைப்பா போன, நான் அப்புறம் பேசுறேன்’ கார்த்திகா தன் தந்தையிடம் கடுப்பாக பேசிவிட்டு தன் மொபைலை வைத்தாள், ‘என்னடி வழக்கம்போல கல்யாண புலம்பலா?’ இது கார்த்திகாவின் தோழி கயல்விழி, ‘கடுப்பேத்றாங்க, பேசாம எவனாச்சும் கூட்டிட்டு ஓடிடலாமான்னு இருக்கு’ இது கார்த்திகா ‘எத்தனை பேர் உனக்கு… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 19: வியன், பாரி வயதைக் கண்டுபிடித்த அன்வர்

யாழினி, குழலி, நிறைமதி மூவரும் தோசை சாப்பிட்ட கதையைப் பார்த்தோம் அல்லவா? அதில் யார் யார் எத்தனைத் தோசை தின்றார்கள் என்று பார்த்து விடுவோமா? கடைசியில் மீதம் இருந்த தோசை 8. இது நிறைமதி தின்றது போக மீதி வைத்த எண்ணிக்கை. நிறைமதி தின்றது மூன்றில் ஒரு பங்கு. அப்படியானால் இப்போது இருக்கும் எட்டுத் தோசை என்பது மூன்றில் இரண்டு பங்கு. மூன்றில் இரண்டு பங்கு என்பது எட்டு என்றால், மூன்றில் ஒரு பங்கு நான்கு. அப்படியானால்… Read More »