Category Archives: கணியம்

துருவங்கள் – அத்தியாயம் 4 – ஹோம் ஸ்வீட் ஹோம்

ஹோம் ஸ்வீட் ஹோம் ‘மாப்ள அப்படியே எனக்கு ஒரு மசால் தோசை’, சுரேஷின் கதறல் ஆபீஸ் கேண்டீன் க்யூவில் இருந்த மதன் காதுகளில் ஒலித்தது. வாங்கிக்கொண்டு மதன் சுரேஷின் அருகில் அமர்ந்தான். ‘feminist misogynist அப்படி எல்லாம் டயலாக் போகுதாம்? உன் நல்லதுக்கு சொல்றேன் அட்மின் கல்யாணம் ஆனவங்க’, சுரேஷ் அறிவுறுத்த, ‘யாற்றா அந்த உளவாளி?’, மதன் கேட்க,’அதான் இருக்காளே கஞ்சா குடுக்கி, அவ கிட்ட சொல்லி உன் கேபின் கிட்ட காது வைக்க சொல்லியிருக்கேன், அப்பீஸ்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 3 – மேன் கமாண்டால் வந்த சிக்கல்

மேன் கமாண்டால் வந்த சிக்கல் வழக்கம் போல் வேலையில் மூழ்கியிருந்த மதனுக்கு அவன் அம்மா சொன்னது நினைவு வந்தது, ‘ஏன்டா மதன் உன் ஆபீஸ்ல எந்த பொண்ணையும் பார்க்க மாட்டியா? உன் அப்பா எவ்வளவு கஷ்டப்படுறாரு?’, என்று கேட்ட அம்மாவிடம், ‘மா! நீ கூட கலாய்க்கிற பாத்தியா?’ என்று கூறியிருந்தான். ஆனால் அவன் அம்மா கேட்டதோ உண்மையான ஆதங்கத்தில் என்று இவனுக்கு நன்றாக தெரியும். சிந்தனையில் இருந்தவன் ‘என்ன பிரதர் ரொம்ப தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க போல?’… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 2 – யுனிக்ஸ் பிறந்த கதை

யுனிக்ஸ் பிறந்த கதை மீண்டும் ஒரு மாலைப்பொழுது, கதை கேட்கும் ஆர்வத்தில் கார்த்திகா மதனின் இடத்திற்கு சிறிது சீக்கிரமாக வந்துவிட்டாள், ‘என்ன பிரதர், டாஸ்க் எதுவும் இல்லையா, நியூஸ் படிச்சிட்டு இருக்கீங்க.’ கேட்டவாரே அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள். ‘வேலை எல்லாம் முடிச்சாச்சா?’, விசாரித்தான் மதன். ‘லினக்ஸ் கதையை கேட்க சீக்கிரம் வந்துட்டேன். ஆரம்பிங்க.’, அவசரப்படுத்தினாள், மதன் ஸ்கிரீன் ஓப்பன் பண்ணா, ஒரு பெரிய ரூம், அங்கு ஒரு பெரிய மெஷின், அதுக்கு பேரு விர்ல்வின்ட் ஒன்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 1 – கல்யாணம் ஆகி நாலு பசங்க

கல்யாணம் ஆகி நாலு பசங்க காலை 8:30 மணி, ‘என் லைவ்ப்ல ஒரு பொண்ணா?’, மதன் பல் துலக்கும் போது கண்ணாடி முன்னின்று அவன் பிம்பத்தை பார்த்து கேட்டான். ‘ரொம்ப கற்பனை பண்ணாதடா, அவ பேர பார்த்தல்ல, karthik.a.lakshman, இதுல lakshman அவ அப்பாவா இல்லாம ஹஸ்பண்ட்டா இருந்தா? அப்படியே அது அவ அப்பாவா இருந்தாலும் அவ உன்ன விட பெரியவளா இருந்தா?’, இது அவன் மனசாட்சி, ‘உன் வாயில நல்ல வார்த்தையே வராதா? சனியனே’, மதன்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 0 – மின்னஞ்சல் முகவரியில்

முன்னுரை சுவாரஸ்யமாக சொல்வதற்கு அற்புதக் காதல் அல்ல, இருந்தாலும் சொல்லக்கூடிய ஒன்று. IT துறையில் இரு துருவங்களாக கருதப்படும் ஓப்பன் சோர்ஸ் விரும்பிகளுக்கும், ஓப்பன்சோர்ஸ்சை பற்றி தெரியாமல் பணிபுரிபவர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களே இக்கதை. ஓப்பன் சோர்ஸ் (Open Source) விரும்பிகள் ஆங்கிலத்தில் அவுட் லாஸ் (OutLaws) என்றழைக்கப்படுபவர்கள் போன்றவர்கள். எளிதில் கட்டுப்படுத்த முடியாது, இவர்களையும், இவர்கள் கற்பனை மற்றும் செயல்திறனையும். உலகம் போகும் போக்கில் செல்லாதவர்கள், அதேசமயம், அதன் போக்கை மாற்றி அமைக்க கூடியவர்கள். அறிவையும்… Read More »

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – Receptionist to Machine Learning Engineer – Nithya’s Story

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – Receptionist to Machine Learning Engineer – Nithya’s Story குறிப்பு: இந்தப்பதிவில் எதையும் நான் டெக்னிக்கலாக எழுதவில்லை. இந்தத் தலைப்பில் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக எண்ணியிருந்தேன். ஆனால் அதை எழுதுவதற்கு முன்னால் ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். சமீப காலமாக ஒரு விஷயத்தின் மீது தீராத ஆசை கொண்டு அதற்காக கடுமையாக உழைத்தேன். அதில் வெற்றி… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 27.02.2022 ஞாயிறு – காலை 9… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 14 – while

இது வரை if elif else பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் while பார்க்கப் போகிறோம். while என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன? எப்போது என்பது! இதை எதற்கு நிரல் மொழிகளில் பயன்படுத்துகிறார்கள்? ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்களேன். 1 என்று ஐந்து முறை அச்சிட வேண்டும் எப்படி நிரல் எழுதுவது? இந்த நிரல் சரியா என்று கேட்டால் மிகச் சரி என்று சொல்ல வேண்டும். இந்த நிரல் தவறா என்று கேட்டால் அப்போதும் ஆமாம் என்று… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 11 – வாங்க பழகலாம்!

இது வரை பார்த்த பதிவுகளில் பைத்தான் நிரலை எப்படி எழுதுவது? உள்ளீடு எப்படிக் கொடுப்பது? அச்சிடுவது எப்படி? என்று பார்த்திருக்கிறோம். ஆனாலும் பைத்தானின் எளிமையை, இனிமையை இன்னும் முழுமையாக நாம் சுவைக்கவில்லை. அதைத் தான் இந்தப் பதிவில் சுவைக்கப் போகிறோம். இரண்டு எண்களில் பெரிய எண் எது? இரண்டு எண்களில் பெரிய எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது? 1. முதல் எண்ணை வாங்குங்கள். 2. இரண்டாவது எண்ணை வாங்குங்கள். 3. முதல் எண், இரண்டாவது எண்ணை விடப் பெரியது… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 6 – முதல் முதலாய் நிரல்!

பைத்தானை நிறுவி விட்டோம். சரி! இப்போது நிரல் எழுதத் தொடங்குவோமா! நிரல் எழுதுவது என்றால் 1) முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும்? 2) என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? 3) உண்மையிலேயே பைத்தான் எளிதான மொழி தானா? இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கலாம். இந்தக் கேள்விகள், குழப்பங்கள் எல்லாமே துளியும் தேவையில்லாதவை. ஆமாம்! பைத்தானைப் படிப்பது என்பது தமிழ் படிப்பது போன்றது. செந்தமிழும் நாப்பழக்கம்! பைத்தானும் அதே பழக்கம் தான்! விண்டோசில் பைத்தான்: விண்டோசில்… Read More »