Category Archives: கணியம்

எளிய தமிழில் 3D Printing 8. சீரொளி சிட்டங்கட்டல் (laser sintering)

சிட்டங்கட்டல் என்பது துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் வெப்பம் மற்றும் அழுத்தம் கொடுத்து இறுக்குதல் அல்லது கெட்டித்தல் மூலம் ஒரு திடமான பொருளை உருவாக்கும் செயல்முறை. இது துகள்களை ஒன்றாக இணைத்து ஒரு திடமான பாகத்தை உருவாக்குகிறது. சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS) மற்றும் நேரடி உலோக சீரொளி சிட்டங்கட்டல் (Direct metal laser sintering – DMLS) இதில் அடங்கும். அடிப்படையில் இவை ஒரே மாதிரியானவை. நெகிழி, கண்ணாடி, பீங்கான்… Read More »

எளிய தமிழில் 3D Printing 7. ஒளித் திண்மமாக்கல் (photo-solidification)

பொருள்சேர் உற்பத்திக்கு பலவிதமான செயல்முறைகள் உள்ளன. பாகங்களை உருவாக்க அடுக்குகள் கட்டும் விதத்திலும், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலும்தான் இவை முக்கியமாக வேறுபடுகின்றன. ஒரு இயந்திரத்தை நாம் தேர்ந்தெடுப்பதில் முக்கிய காரணங்கள் அதன் வேகம், அதன் விலை, பாகத்தை  அச்சிட ஆகும் செலவு, எம்மாதிரிப் பொருட்களில் அச்சிட இயலும் ஆகியவையே. இழையை உருக்கிப் புனைதல் தவிர மற்ற சில செயல்முறைகளைப் பற்றிப் பார்ப்போம். ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள் ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள்… Read More »

எளிய தமிழில் 3D Printing 6. திறந்தமூல சீவுதல் மென்பொருட்கள்

நாம் பாகத்தின் வடிவத்தை ஒரு கணினி வழி வடிவமைப்பு (CAD) மென்பொருளை வைத்து உருவாக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நம் மூலப்பொருள் மற்றும் எந்திரத்தின் திறனைப் பொருத்து தடிமன் வைத்து அந்த பாகத்தை படிவம் படிவமாக சீவிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு படிவத்திற்கும் நம் அச்சு எந்திரத்தின் தலை முன்னும் பின்னும் செல்ல வேண்டும். ஒரு படிவம் முடிந்தபின் அந்தப் படிவத்தின் தடிமன் அளவு மேல் நோக்கி நகர வேண்டும். இம்மாதிரி அச்சு எந்திரத்தின் தலை… Read More »

எளிய தமிழில் 3D Printing 5. கோப்பு வடிவங்கள்

முப்பரிமாணப் பொருளை அச்சிட, ஒரு 3D அச்சுப்பொறிக்கு பொருளின் எண்ணிம வரைபடம் தேவை. இது வடிவியல், நிறம், அமைப்பு மற்றும் மூலப்பொருட்கள் போன்ற நம் பாகத்தைப் பற்றிய அனைத்து தொடர்புடைய தரவுகளையும் சேமிக்கும் ஒரு கோப்பு. அத்தகைய தரவை வைத்திருக்கக்கூடிய பல கோப்பு வடிவங்கள் உள்ளன.  உங்களிடமுள்ள வடிவமைப்பு மென்பொருட்கள் எந்தவிதமான கோப்பு வகையில் சேமிக்க முடியும் அல்லது ஏற்றுமதி செய்ய முடியும் என்று பாருங்கள். மேலும் நீங்கள் பயன்படுத்தப்போகும் சீவுதல் மென்பொருள் மற்றும் முப்பரிமாண அச்சு… Read More »

எளிய தமிழில் 3D Printing 4. வடிவமைப்புக்குத் திறந்தமூல மென்பொருட்கள்

பாகத்தை வடிவமைப்பதுதான் முக்கிய வேலை  நாம் பொருள்சேர் உற்பத்தி முறையில் ஒரு பாகத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு முக்கிய வேலை அதை வடிவமைப்பது தான். ஆகவே இந்த வேலைக்கு என்னென்ன திறந்த மூல மென்பொருட்கள் உள்ளன அவற்றின் அம்சங்கள் யாவை என்று முதலில் பார்ப்போம். அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) நாம் ஒரு சிக்கலான வடிவத்தை பல படிகளில் உரு மாற்றங்கள் செய்து தயாரித்து முடித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதை சேமித்து வைக்க நாம் இரண்டு… Read More »

எளிய தமிழில் 3D Printing 3. செயல்முறைப் படிகள் (process steps)

வடிவமைப்பு உருவாக்குதல் நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்க முதலில் ஒரு கணினி வழி வடிவமைப்பு (Computer Aided Design – CAD) மென்பொருள் தேவை. இதற்கு சில திறந்த மூல மென்பொருட்கள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான வடிவமைப்பை முதல்படியாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். பொருள்சேர் உற்பத்திக்குத் தோதான கோப்பு வகையில் சேமித்தல் இம்மாதிரி மென்பொருட்களில் பலவிதமான கோப்பு வகைகளில் சேமிக்க முடியும். நாம் பொருள்சேர் உற்பத்திக்குத்… Read More »

எளிய தமிழில் 3D Printing 2. இழையை உருக்கிப் புனைதல்

உலோகம் உட்பட பலவிதமான பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய பலவிதமான தொழில்நுட்பங்கள் பொருள்சேர் உற்பத்திக்குப் புழக்கத்தில் வந்துவிட்டன. இருப்பினும் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வேலைகளுக்கு இழையை உருக்கிப் புனைதல் (Fused Filament Fabrication – FFF) தொழில்நுட்பமே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதையே உருகிய படிதல் மாதிரியமைத்தல் (fused deposition modeling – FDM) என்றும் சொல்கிறார்கள். இந்த செயல்முறை மூலம் நெகிழி (plastic) பாகங்களை உருவாக்கலாம். இதற்கான எந்திரங்கள் யாவரும் அணுகக்கூடிய வகையில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அருங்காட்சியகங்களிலும் வந்துவிட்டதால் இவை… Read More »

எளிய தமிழில் 3D Printing 1. பொருள்சேர் உற்பத்தி

முப்பரிமாண அச்சுருவாக்கம் அல்லது அச்சிடல் (3D Printing) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் சொற்றொடர். எனினும் பொருள்சேர் உற்பத்தி (Additive Manufacturing) என்பதே இதற்கு தொழில்நுட்ப ரீதியாக சரியான பெயர். இதையே மேசைப்புனைவு (desktop fabrication) என்றும் சொல்கிறார்கள். இதை ஏன் பொருள்சேர் உற்பத்தி என்று சொல்கிறோம் என்று முதலில் பார்ப்போம். பொருள்நீக்கு உற்பத்தி (Subtractive manufacturing) ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் அளவிலும் ஒரு பாகம் தயாரிக்க வேண்டுமென்றால் அதைவிடப் பெரிய மூலப் பொருளை எடுத்து அதைக் கடைசல்… Read More »

731 மின்னூல்கள் – 80 லட்சம் பதிவிறக்கங்களுடன், 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

80 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 731 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன் சூலை 26 2021 அன்று FreeTamilEbooks.com திட்டம் 8 ஆண்டுகளை நிறைவு செய்து 9 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. மின்னூல் திட்டமாகத் தொடங்கி, கணியம் அறக்கட்டளையாக வளர்ந்து, மின் தமிழ் உலகில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் வளர்ந்துள்ளது பெருமகிழ்ச்சி. பெருமளவு நேரத்தையும், உழைப்பையும், நன்கொடையையும் அள்ளித்தரும் அனைத்து பங்களிப்பாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள். உங்கள் கருத்துகளை… Read More »

எளிய தமிழில் Pandas-13_Final

Real-time Example ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் உள்ள அனைத்து புரோகிராம்களின் id, அவை எந்த வகையின் கீழ் அமைந்திருக்கின்றன, அவை ஒளிபரப்பப்பட்ட தேதி, அவற்றிருக்கு வழங்கப்பட்ட ரேடிங், ஸ்கோர் போன்ற தரவுகளை கற்பனையாக உருவாக்கி அவற்றின் அடிப்படையில் நாம் இந்த எடுத்துக்காட்டை செய்து பார்க்கப் போகிறோம். இந்த கற்பனைத் தரவு பின்வருமாறு.           category       rating   telecasted_date  program_id  score 0                  news … Read More »