Category Archives: கணியம்

கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown

கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown “Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது. இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்யவும் இந்த மென்பொருள் விருப்பத்தை வழங்குகிறது. தானியக்கமுறையில் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்ய விரும்பும் பயனர்களுக்கு… Read More »

ஹெச்.டி.எம்.எல்-5: ஊடகங்கள்-காணொளி

ஹெச்.டி.எம்.எல்-5: ஊடகங்கள்-காணொளி   இணையப் பக்கங்கள் முதன் முதலில் உரைகளை மட்டுமே காட்டி வந்தன. ஆனால் தற்போது உள்ள இணைய உலாவிகள் பலதரப்பட்ட ஊடகங்களைக் காட்டுகின்றன. இணையத்தில் ஊடகங்கள் என்று சொல்லும் போது படங்கள், காணோளிகள் ஒலி, அசைவூட்டங்கள் (animations) என பலவிதங்கள் உள்ளே அடங்கி விடும். ஊடகங்களின் வடிவூட்டங்கள் பலதிறப்பட்டவை. (format) அவை எல்லாவற்றையும் இணையப் பக்கத்தில் காட்ட முடியாது. ஒரு ஊடகம் இணையத்தில் சரியாக வேலை செய்யுமா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள அவற்றின்… Read More »

கணியம் இதழ் 23 அறிமுகம்

இதழ் 23 நவம்பர் 2013 வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மாத இதழ் சற்றே கால தாமதமாக வெளிவருகிறது. மன்னிக்கவும். சென்ற வாரம், சான்பிரான்சிஸ்கோ நகரில், எழில் [ ezhillang.org ] எனும் தமிழ் நிரல் மொழியை உருவாக்கிய, முத்து அவர்களை சந்தித்தேன். தமிழுக்காய் பல செயல்களை ஆர்வமுடன் செய்யும் இளைஞர். கல்லூரிக் கல்வி கணிணித்துறையாய் இல்லாத போதிலும், தானே பல்வேறு நுட்பங்களைக் கற்று, தமிழிலேயே நிரல் எழுதும் வகையில்,… Read More »

கணியம் – இதழ் 23

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மாத இதழ் சற்றே கால தாமதமாக வெளிவருகிறது. மன்னிக்கவும்.   சென்ற வாரம், சான்பிரான்சிஸ்கோ நகரில், எழில் [ ezhillang.org]எனும் தமிழ் நிரல் மொழியை உருவாக்கிய, முத்து அவர்களை சந்தித்தேன். தமிழுக்காய் பல செயல்களை ஆர்வமுடன் செய்யும் இளைஞர். கல்லூரிக் கல்வி கணிணித்துறையாய் இல்லாத போதிலும், தானே பல்வேறு நுட்பங்களைக் கற்று, தமிழிலேயே நிரல் எழுதும் வகையில், எழில் என்ற புதிய நிரல் மொழியை… Read More »

கணியம் – இதழ் 22

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற விக்கிபீடியாவின் பத்தாண்டு நிகழ்வுகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் விக்கி அறிமுகப்பயிற்சிப் பட்டறைகள் நடந்து வருகின்றன. 100க்கும் மேற்பட்ட புது விக்கிபீடியர்கள் உருவாகி உள்ளனர். உங்கள் ஊரிலும் விக்கி பயிற்சிப் பட்டறை நடத்த எங்களை தொடர்பு கொள்ளவும்.   தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக மயூரநாதன், சுந்தர், இரவி, செல்வா ஆகிய நால்வரும், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர்… Read More »

GIMP மற்றும் INKSCAPE பயிற்சி

  அன்புடையீர், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு(FSFTN), வரும் ஞாயிறு(அக்டோபர் 6) அன்று  வரைகலை மென்பொருட்கள் GIMP மற்றும் INKSCAPE பயிற்சி வகுப்பினை நடத்தவுள்ளது.   இடம்: கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு அலுவலகம், பழைய எண்:36, புது எண்:24, பிலாட் எண்:2, முதல் மாடி பி பிலாக், சில்வர் பார்க் அபார்ட்மென்ட்ஸ், தனிகாச்சலம் சாலை, டி.நகர், சென்னை – 17   No: 36 (Old No: 24), Flat No: 2, First Floor,… Read More »

கணியம் – இதழ் 21

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். செப்டம்பர் 30, 2013 அன்று சென்னையில் தமிழ் விக்கிபீடியாவின் பத்தாண்டுகள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2” வெளியிடப்பட்டது.   kaniyam.com/gnu-linux-book-in-tamil-part2 என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம்.   தமிழில் நுட்பங்களை எழுதி, கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் கட்டற்ற உரிமத்தில் வெளியிடுவதை பாராட்டி, செல்வா-குமரி அறக்கட்டளையின் பரிசாக, பேராசிரியர் திரு. சி.இரா.செல்வகுமார், பேராசிரியர், வாட்டர்லூ பல்கலைக்கழகம்,… Read More »

எளிய தமிழில் GNU/Linux – பாகம்-2

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. “எளிய தமிழில் MySQL“, “எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1”  ஆகிய மின்புத்தகங்களுக்கு நீங்கள் அளித்த பெரும் வரவேற்பே இந்த நூலுக்கு வித்திட்டது. உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். kaniyam.com/gnu-linux-book-in-tamil-part2 என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம். (முதல் புத்தகம் www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1/) படித்து பயன்… Read More »

சுதந்திர மென்பொருள் தின கொண்டாட்டம் – சென்னை

அன்புடையீர் , வணக்கம் . கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு [ fsftn.org ], இந்திய குனூ-லினக்ஸ் பயனர் குழு [ilugc.in] சென்னை மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி குனூ-லினக்ஸ் பயனர் குழு ஆகியவை இணைந்து, வருகின்ற 22 செப்டம்பர், 2013 சுதந்திர மென்பொருள் தினத்தை சென்னை, அண்ணா பொறியில் பல்கலைகழகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் (விவேகானந்தா அரங்கம்) கொண்டாட இருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் கட்டற்ற மென்பொருள் (Free Software), காப்புரிமைகள் (Copyrights), திறந்தவன்பொருள் (Open… Read More »