எளிய தமிழில் Computer Vision 8. கட்டற்ற திறந்தமூல ஓபன்சிவி (OpenCV) மென்பொருள்
ஓபன்சிவி (OpenCV) C மற்றும் C++ நிரல் மொழிகளில் எழுதப்பட்டது. சுமார் 2500 கணினிப் பார்வை வினைச்சரங்கள் (algorithms) மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் வழிமுறைகளைக் (convenience methods) கொண்டுள்ளது. இது லினக்ஸ், யூனிக்ஸ், மேக், விண்டோஸ் ஆக எல்லாக் கணினி இயங்குதளங்களிலும் மற்றும் ஆன்டிராய்டு, ஆப்பிள் போன்ற திறன்பேசிகளிலும் ஓடும். இது பயிற்சிகளுக்கும் ஆய்வுகளுக்கும் மட்டுமே என்றில்லாமல் தொழில்துறையில் உற்பத்திக்கும் (production) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஓபன்சிவி பைதான் (OpenCV Python) இது ஓபன்சிவியை பைதான் நிரலிலிருந்து பயன்படுத்தத்… Read More »