ஒருங்குறியும், UTF-8 குறிமுறையும்
கணினியில் சேமிக்கப்படும் எந்தவொரு தகவலும் பூச்சியம், ஒன்று என்ற இரு எண்களைக்கொண்ட பைனரியாக மட்டுமே சேமிக்கப்படும். எண்கள், எழுத்துகள், பிறகுறியீடுகள் என எதுவாக இருந்தாலும், கணினியைப்பொருத்தவரை அவை பூச்சியம் மற்றும் ஒன்று என்ற இரு எண்களைக்கொண்ட தொடராகவே குறிக்கப்படும். இப்படி எண்களுக்கும், எழுத்துகளுக்கும், குறியீடுகளுக்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு, அது பைனரி வடிவத்தில் சேமித்துவைக்கப்படும். இவ்வாறாக ஒரு குறியீட்டிற்கு ஒரு எண்ணை ஒதுக்கும் முறைக்கு குறிமுறை என்று பெயர். ஒதுக்கப்பட்ட எண்ணுக்கு குறியெண் (codepoint) என்று பெயர்.… Read More »