எளிய தமிழில் Big Data – மின்னூல் – து.நித்யா

  நூல் : எளிய தமிழில் Big Data ஆசிரியர் : து.நித்யா மின்னஞ்சல் : nithyadurai87@gmail.com அட்டைப்படம், மின்னூலாக்கம் : த.சீனிவாசன் tshrinivasan@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   முன்னுரை ‘Data is the new Oil’ என்பது புதுமொழி. இணைய தளங்கள், கைபேசி செயலிகள் யாவும் தம் பயனரின் அனைத்து செயல்களையும் தகவல்களையும் சேமித்து… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 13. நிரல் எழுதத் தெரியாதவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் தற்குறிகளா?

ஓலைச்சுவடி காலத்திலும் காகிதம் வந்தவுடனும் தொழில் நெறிஞர்களே எழுத்தாளர்களாக பெரிய மனிதர்களின் ஆதரவில் பணியாற்றினர். இதன் விளைவாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பிள்ளைகளைப் படிக்க வைப்பது வாழ்க்கை முறையாயிற்று. பின்னர் எழுதப்படிக்க இயலாதவர்கள் தற்குறி எனப்பட்டனர். நிரலாக்கம்தான் புதிய எழுத்தறிவா? ஏற்கனவே நிரலாக்கம் என்பது தொழில் ரீதியாக நிரல் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் எந்த உயர் கல்விக்கும் அத்தியாவசியம் என்றாகி விட்டது. நிரலாளர் அல்லாத ஆற்றல் மிக்க பயனர்கள் ஒரு வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை – பொறுப்புகள்

பொறுப்புகள்: அமேசானின் இணையச்சேவைகள் ஒன்றோடொன்று பேசிக்கொள்வதற்கென நிரல்வழி இடைமுகங்கள் (AWS API) உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு மேகக்கணினியிலிருந்து S3யில் ஒரு கோப்பினைச் சேமிப்பதற்கும், எளிய அறிவுப்புச்சேவையின் (Simple Notification Service – SNS) மூலம் ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கும், எளிய வரிசைச்சேவையின் (Simple Queue Service – SQS) மூலம் அதைப் பெற்றுக்கொள்வதற்கும் இவ்விடைமுகங்கள் பயன்படுகின்றன. இவ்வாறாக அமேசானின் இணையச்சேவைகளுக்குள்ளே நிகழும் தரவுப் பரிமாற்றங்கள், சரியான பொறுப்புடைய சேவையிலிருந்துதான் தொடங்குகிறதா என்பதை IAM பொறுப்புகள் (roles) மூலம்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை – பகுதி 2

குழுக்களை உருவாக்கல்: பயனர்களை உருவாக்கும்போதே, அவர்களை குழுக்களில் சேர்ப்பதற்கான திரையும் காட்டப்படுகிறது. இதன்மூலமாக ஏற்கனவேயுள்ள குழுக்களிலோ, அல்லது புதிய குழுவை உருவாக்கியோ, பயனர்களைச் சேர்க்கமுடியும். தற்சமயம் நம்மிடம் எந்தவொரு குழுவும் இல்லை. எனவே புதியதொரு குழுவை உருவாக்கலாம். குழுவின் பெயரையும், அதற்கான அணுக்கக்கொள்கைகளையும் தீர்மானித்தபின், குழுவை உருவாக்குவது மிகஎளிதான காரியம். குழுவிற்கான பெயரும், அதன் உறுப்பினர்களுக்கான எல்லைகளை வர்ணிக்கும் கொள்கை ஆவணங்களும் இருந்தால் ஒரு குழுவினை உருவாக்கிடலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப குழுக்களை உருவாக்கிக்கொள்ளலாம். எடுத்துகாட்டாக, நிரல்… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 12. ஏன் திறந்த மூலமும், திறந்த தரவுகளும், திறந்த ஆய்வும்?

இது நாள் வரை பொதுமக்களின் வரிப் பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகளும், மென்பொருட்களும் பெரும்பாலும் சமூகம், பொதுமக்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாமலே செய்யப்படுகின்றன. ஆராய்ச்சித் தரவும் மென்பொருட்களும் பெரும் செலவில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்வதேயில்லை. பெரும்பாலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பிறகு விரைவில் அந்தத் திட்டம் தரவுகளை இழந்து விடுகிறது. மென்பொருட்கள் மக்களுக்குப் பயன் தராமல் வீணாகின்றன. பண விரயம் மட்டுமல்லாமல், ஒத்துழைப்பையும் முன்னேற்றத்தையும் இந்த அணுகுமுறை தடுக்கிறது. ஆய்வறிக்கைகள்படி இக்கருவிகள், வளங்கள் யாவும் உருவாக்கப்பட்டு… Read More »

17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு – ஜூலை 6,7,8, 2018 – கோவை

உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை 6,7,8, 2018 தேதிகளில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர், மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் கீழ்வரும் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600ரூ அரைநாள் பயிற்சி, 900 ரூ முழு நாள் பயிற்சி) தமிழ் விக்கிமூலம் Git – ஒரு அறிமுகம் Python –… Read More »

Universe தெரியும். Fediverse தெரியுமா?

  பிரபஞ்சம் என்பது எல்லையற்றது. அதில் பல மண்டலங்களும் (Galaxy), எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், கோள்களும், தூசித் துகள்களும் அதனதன் பாதையில் சுற்றித் திரிகின்றன என்பதை நாம் அறிவோம். இதில் ஓவ்வொரு நட்சத்திரமும், கோளும் வெவ்வேறு தன்மைக் கொண்டவை. சில வாயுக்களால் நிரம்பி இருக்கும், சில தண்ணீர் இல்லாமல் வற்றி போயிருக்கும், சில தண்ணீரால் முழ்கிக் கிடக்கும், சில வெப்பமாய் இருக்கும், சில குளிரில் உறைந்து போய் இருக்கும். இப்படி இயற்கையில் பன்முகத்தன்மை நிறைந்து பிரபஞ்சம் எங்கும் பரவிக்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை

ஓர் அடுக்குமாடிக்குடியிருப்பின் பராமரிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என சற்று சிந்தித்துப்பார்க்கலாம். அநேகமாக எல்லா அடுக்குமாடிக்குடியிருப்புகளிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பர். அக்குடியிருப்புக்குள் வந்துபோகிற நபர்களையும், வாகனங்களையும் கண்காணித்து, பதிவுசெய்துகொள்வது அவர்கள் வேலை. மேலும், தோட்டப்பராமரிப்புக்கும், துப்புரவுக்கும், மின்சார உபகரணங்கள் பராமரிப்புக்கும், நீர் மேலாண்மைக்கும் என பல்வேறு பணியாளர்கள் அக்குடியிருப்புக்குள் வந்து அவர்கள் வேலைகளைச் செவ்வனே செய்யவேண்டியுள்ளது. இவர்களனைவரும் தங்களுக்குரிய வேலையைத் தவிர்த்து வேறொரு வேலையில் ஈடுபடமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கவேண்டும். இதேபோன்றதொரு தேவை, அமேசான் இணையச்சேவைகளுக்கும் உண்டு. பெருநிறுவனங்களில்… Read More »