Tag Archives: தினம்-ஒரு-கட்டளை

[தினம் ஒரு கட்டளை] nice அருமை!

நாள் 22: nice nice மதிப்புகள்: 0 : இயல்புநிலை -20 : அதிக முன்னுரிமை 19 : குறைந்த முன்னுரிமை ===================================== nice : இந்த கட்டளை ஒரு செயல்பாட்டினை தொடங்கும்போது அதற்கான செயல்பாட்டு முன்னுரிமையை அளிக்க வகைசெய்கிறது. பின்வரும் எடுத்துகாட்டில் இயல்புநிலை nice மதிப்பு கொண்டு கட்டளையை எப்படி இயக்குவது என பார்ப்போம். (எ.கா) hariharan@kaniyam :~/odoc/ $ nice ls தொடரியல்: hariharan@kaniyam :~/odoc/ $ nice commandname தெரிவுகள்: nice -n:… Read More »

[தினம் ஒரு கட்டளை] passwd கடவுச்சொல் மாற்றலாமா?

நாள் 21 :  passwd passwd :இந்த கட்டளை ஒரு பயனர் உள்நுழைய பயன்படுத்தும் கடவுச்சொல்லை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. சில தெரிவுகளுடன் இந்த கட்டளையை பயன்படுத்தி பயனர் கணக்கை பூட்டவும் திறக்கவும் மூடவும் இயலும்.sudo or as root ஆக பயன்படுத்தப்படும் போது தற்போதைய  கடவுச்சொல் தேவையில்லை பிற பயனரின் கடவுச்சொல்லை மற்றும் போது கேட்கும். sudo வைப் பயன்படுத்தியோ அல்லது root கணக்கிலிருந்தோ கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளலாம். தொடரியல் : sudo password username passwd sudo… Read More »

[தினம் ஒரு கட்டளை] cd கோப்புறையை மாற்று

நாள் 20: cd cd : இந்த கட்டளை ஒரு கோப்புறையிலிருந்து வேறொரு கோப்புறைக்கு மாற பயன்படுகிறது. இந்த கட்டளை மிக எளிமையான பயன்பாட்டினை கொண்டுள்ளாதால் பிற தெரிவுகள் பெரியதாக கவனிக்கப்படுவதில்லை. cd /path/to/directory :ஒரு குறிப்பிட்ட கோப்புறைக்கு மாற cd .. : தற்போதைய கோப்புறையின் தாய் கோப்புறைக்கு செல்ல cd : எந்தொரு அளபுருக்களும் இல்லாது இருப்பின் $HOME கோப்புறைக்கு செல்லும் cd – :கோப்புறை மற்றத்திற்கு முன்னர் இருந்த கோப்புறைக்கு செல்ல பயன்படுகிறதுcd… Read More »

[தினம் ஒரு கட்டளை] rm நீக்கு

நாள் : 19 rm : இந்த கட்டளை கோப்புகளை தெரிவுகளுடன்  நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதே கட்டளையை நாம் கோப்புறையை நீக்கவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடரியல் : hariharan@kaniyam : ~/odoc $ rm file.extension rm file1.extension file2.extension தெரிவுகள் : rm -r : இந்த தெரிவு மூலம் நீக்கவேண்டிய கோப்புறையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் கோப்புறையினில் இருக்கும் பிற கோப்புறைகளையும் நீக்ககூடியது. இந்த தெரிவில்  r  என்பது recursive… Read More »

[தினம் ஒரு கட்டளை] history னா வரலாறு தானே

நாள் 18: history history :  இந்த கட்டளை நாம் முனையத்தில் முன்பு கொடுத்த கட்டளைகளை பார்க்க பயன்படுத்தபடுகிறது. தொடரியல் : hariharan@kaniyam:~/odoc $  history தெரிவுகள்: history -w : இந்த தெரிவு தற்போதைய அமர்வில் பயன்படுத்தப்படும் கட்டளையை சேமித்து ஒரு கோப்பில் எழுதி பிறகு பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. hariharan@kaniyam:~/odoc $  history -w history -r : இது -w தெரிவின் மூலம் பயன்படுத்தப்பட்ட கட்டளைகளை படிக்க பயன்படுகிறது. hariharan@kaniyam:~/odoc $  history -r… Read More »

[தினம் ஒரு கட்டளை] reboot மீள்துவங்கு

நாள் 17: reboot reboot : இந்தக் கட்டளை கணினியின் இயக்கத்தை நிறுத்தி கணினியை மீள்துவக்கம் செய்ய பயன்படுகிறது. தொடரியல் : sudo reboot தெரிவுகள் : reboot “[message]” : இந்த கட்டளை கணிணியை மீள்துவக்கம் செய்யும் முன்னர் எதாவது செய்தியை காட்டுவதற்கு பயன்படுகிறது. இந்த கட்டளை எல்லா செயல்பாடுகளும் பதிவு செய்யப்படும்போது பயன்படும். hariaharan@kaniyam:~/odoc $  sudo reboot “message” –force : கட்டளையை இந்த தெரிவுடன் பயன்படுத்தப்படும்போது reboot போலவே செயல்படுகிறது. அனால்… Read More »

[தினம் ஒரு கட்டளை] wc வார்த்தைகளின் எண்ணிக்கை

நாள் 16 :  wc wc: இந்த கட்டளை கோப்பாகவோ அல்லது உள்ளீடாகவோ கொடுக்கப்பட்ட சரத்திலிருந்து வரிகளின் எண்ணிக்கை (அ)  வார்த்தைகளின் எண்ணிக்கை (அ) எழுத்துக்களின் எண்ணிக்கை (அ)  பைட்டுகளின் எண்ணிக்கையை அளிக்கிறது. தொடரியல் : hariharan@kaniyam :~/odoc $ wc மேற்கண்ட கட்டளை வரிகளின் எண்ணிக்கை,வார்த்தைகளின் எண்ணிக்கை மற்றும் எழுத்துகளின் எண்ணிக்கையை ஒரு தத்தி (tab) இடைவெளியில் தரும். hariharan@kaniyam :~/odoc $ cat “filename” | wc -l தெரிவுகள்: உள்ளீடு அளிக்கும் வகையில்… Read More »

[தினம் ஒரு கட்டளை] df வட்டுகளின் பயன்பாடு எவ்வளவு?

நாள்15: df அமைப்பில் உள்ள வட்டுகளின் பயன்பாடு எவ்வளவு என்பதனை அறிய இந்தக்கட்டளை பயன்படுகிறது. df: இந்த கட்டளை இணைக்கப்பட்ட சேமிப்பிட விவரங்களை குறிப்பாக மொத்த அளவு, பயன்படுத்தப்பட்ட அளவு, பயன்பாட்டிற்கு இருக்கும் சேமிப்பிட அளவு ஆகியவற்றை காட்டுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc/ $ df தெரிவுகள்: -h: இந்த தெரிவானது கோப்பின் அளவுகளை வெறும் பைட்டுகளில் காட்டாமல் mb,gb எனும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அளிக்கிறது. Syntax: df -h df -T: எனும் தெரிவு… Read More »

[தினம் ஒரு கட்டளை] ping கணினி இணைப்பில் இருக்கிறதா?

நாள் 14: ping ping: இந்தகட்டளை இரு கணிணிகள் சரிவர இணைய இணைப்பில் இருக்கின்றனவா என்பதை சோதிக்க பயன்படுகிறது.இந்த பிங் கட்டளை கொடுக்கப்பட்ட கணினியின் இணையப் பெயரையும் (hostname) அல்லது இணைய நெறிமுறை முகவரி (ip address)வைத்து ICMP துணுக்குகளை கொடுக்கப்பட்ட  முடிவில்லாமல் இணைய முகவரிக்கு அனுப்பும். தொடரியல்:  hariharan@kaniyam : ~/odoc $ ping [ipaddress/websiteaddress] hariharan@kaniyam : ~/odoc $ ping google.com hariharan@kaniyam : ~/odoc $ ping 8.8.8.8 தெரிவுகள்: -c:… Read More »

[தினம் ஒரு கட்டளை] uptime இயங்குநேரம்.

13ம் நாள் uptime: இந்த கட்டளை இயங்குதளம் துவங்கியதிலிருந்து எவ்வளவு நேரமாக இயங்குகிறது என காட்டுகிறது. மேலும் சராசரியாக எவ்வளவு பளுவை மையச்செயலகம்  தாங்குகிறது என்பதையும் கூறுகிறது. இந்தக்கட்டளை காட்டும் விவரங்கள்: 1. தற்போதைய நேரம். 2. இயங்கும் நேரம் நாட்களில் (1 நாள்களுக்குள் இயங்கும் நேரம் இருப்பின் மணிநேரங்கள் மற்றும் மணித்துளிகள் காட்டப்படும்) 3. மணிநேரங்கள் மற்றும் மணித்துளிகள் (நாட்கள் அல்லமல் இருக்கும் நேர விவரங்கள்) 4. தற்போது இயக்கத்தில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 5.… Read More »