Tag Archives: பயிலகம்

சென்னை பயிலகத்தில் பெண்களுக்கு இலவசக் கணினி, நிரலாக்கப் பயிற்சி

வரும் ஏப்ரல் 1 முதல் 5 வரை பெண்களுக்கு இலவசக் கணினி, நிரலாக்கப் (Programming) பயிற்சி சென்னை வேளச்சேரி பயிலகத்தில் நடைபெறுகிறது. என்னென்ன சொல்லிக் கொடுப்பார்கள்? கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன, லினக்ஸ் ஓர் அறிமுகம், ஆண்டிராய்டில் எஃப்-டிராய்டு பயன்பாடு, ஸ்கிராட்ச் நிரலாக்க மொழி (Scratch Programming) ஆகியன சொல்லிக் கொடுக்கப்படும். நான் இல்லத்தரசி. எனக்குக் கணினி அடிப்படைகள் மட்டுமே தெரியும். நான் இதில் சேரலாமா? தாராளமாக! கணினி / மடிக்கணினியை இயக்கத் தெரிந்தால் போதும்! நீங்கள்… Read More »

கிட்லேப் யூடியூப் நேரலை வகுப்புகள் – Gitlab Session Online in Tamil

கிட்லேப் நேரலை வகுப்புகள் யூடியூபில் இன்று முதல் நடத்தப்பட இருக்கின்றன. பயிலகம் யூடிபூப் சேனலில் பயிற்றுநர் விஜயராகவன் இவ்வகுப்புகளை நடத்துகிறார். யூடியூப் இணைப்பு: www.youtube.com/@PayilagamChennai

பயிலகத்தில் நடந்த லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான்

என்ன நடந்தது: லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான். எப்போது நடந்தது: ஜனவரி 29, 2023 8.30 முதல் 1.30 மணி வரை எங்கு நடந்தது: பயிலகம், வேளச்சேரி யார் நடத்தினார்கள்: பயிலகத்தின் முன்னாள் மாணவர்கள் யாகப்பிரியன், அலெக்சாண்டர், பாஸ்கர் யார் கலந்து கொண்டார்கள்: பயிலகம் மாணவர்கள் [இடமின்மை காரணமாகப் பொது நிகழ்வாக நடத்த இயலவில்லை] வழுக்கள் பற்றி: நிகழ்வுக்கு முன்னரே, யாகப்பிரியன் – எந்தப் பதிப்பை நிறுவ வேண்டும், எப்படி நிறுவ வேண்டும் என வலைப்பூ [yagapriyan.wordpress.com/2023/01/28/libre-office-tool-testing-hackathon-2023/] எழுதி… Read More »

லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் – சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப் நிறுவனத்தின் பணி வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வாய்ப்பு தரப்படும். * பயிற்சி முற்றிலும் இலவசமா? ஆம். முற்றிலும் இலவசம். *… Read More »

இணையவழி இலவச ஆங்கில இலக்கண வகுப்பு – பயிலகம்

1. ஆங்கிலம் தெரியவில்லை, அதனால் என்னுடைய முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. 2. சிறு வயதில் எனக்கு இங்கிலீஷ் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கவில்லை, அதன் பாதிப்பை இன்று வரை நான் உணர்கிறேன். 3. ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் இருப்பதால், இங்கிலீஷ் என்றாலே பயமாக இருக்கிறது. 4. ஆங்கிலம் தெரியாமல் இருப்பதால் நேர்காணல்(இன்டர்வியூ)களில் வெற்றி பெற முடியவில்லை. இப்படி, ஆங்கிலம் தெரியாமல் அவதிப்படுபவரா நீங்கள்? உங்களுக்கான ஆங்கில அடிப்படை இலக்கண வகுப்புகளைப் பயிலகம் திட்டமிடுகிறது. இவ்வகுப்புகள் இணையம் வழியே இரண்டு… Read More »

பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் – யூடியூப் தளத்தில் பயிலகம் பக்கத்தில் பதிவேற்றப்படும். யார் யார் படிக்கலாம்? பைத்தான் படிக்க விரும்பும் யாரும் படிக்கலாம் நான் ஐடி துறை இல்லை. படிக்கலாமா?… Read More »

ஜாவா படிக்க, தமிழில் இலவசக் காணொலிகள்

ஜாவா – ஓப்பன்ஜேடிகே(OpenJDK) வெளியிட்டு வரும் ஒரு கட்டற்ற மொழியாகும்.  பல்வேறு மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படும் வலிமையான மொழியாக அறியப்படும் ஜாவாவை இலவசமாக, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பயிலகம் – தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.  அவற்றுக்கான இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.  நிரலாக்கத்திற்குப் புதியவர்கள், மாணவர்கள் ஜாவாவில் நல்ல தேர்ச்சி பெற இவை உதவும். 1) ஜாவா – மொழி அடிப்படைகள் – www.youtube.com/playlist?list=PLgWpUXNR_WCfsFtL526RNHQ8a8p2-2m1V 2) ஜாவா – எக்செப்ஷன் ஹேண்ட்லிங் – www.youtube.com/playlist?list=PLgWpUXNR_WCcqkxnlN0msmmFATnDEDCKM 3)… Read More »