எளிய தமிழில் IoT 12. தரவை தரவுத்தளத்தில் சேமித்தல்
IoT அமைப்பில் தரவுகள் பெரிய அளவில் வந்து கொண்டே இருக்கின்றன. காணொளித் தாரை (streaming video), வானலை அடையாளம் (RFID) தரவுகள், உணரிகள் (sensors) அனுப்பும் தரவுகள் ஆகியவை இதில் அடங்கும். அனேகமாக இவையெல்லாமே காலத்தொடர் (time series) தரவுகள்தான். இம்மாதிரி பெரிய அளவில் தரவுகளைக் கையாளுவதே ஒரு சவால்தான். மேலும் தொழிற்சாலையில் இயந்திரங்களைக் கட்டுப்பாடு செய்ய இந்தத் தரவுகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்து நிகழ் நேரத்தில் (realtime) முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கலாம். இவை தவிர தரவுகளையும்… Read More »