Tag Archives: tamil

எளிய தமிழில் CAD/CAM/CAE 22. பாகங்களின் பட்டியல் (Bill of Materials)

சரி, பாகங்களை வரைந்து விட்டீர்கள். அவற்றைத் தொகுத்துப் பார்த்து விட்டீர்கள். தொகுத்த பின் இயக்கியும் பார்த்து விட்டீர்கள். பொறியியல் பகுப்பாய்வு செய்தாகிவிட்டது. அடுத்து தயாரிப்பைத் தொடங்க வேண்டும் அல்லவா? ஆகவே, வடிவமைப்பு மற்றும் வளராக்கத் துறையிலிருந்து (design and development department) உற்பத்தித் துறைக்கு (production department) இந்தத் தயாரிப்பை வெளியீடும் செய்து விட்டீர்கள். பாகங்களின் பட்டியலை எடுத்து உற்பத்தித் துறையினர் எந்தெந்த பாகங்களைத் தங்கள் தொழிற்சாலையிலேயே தயார் செய்வது மற்றும் எந்தெந்த பாகங்களை வெளியிலிருந்து வாங்குவது… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 21. 3D CNC நிரல் இயற்றல்

பலவிதமான சிஎன்சி இயந்திரங்கள் கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களை சுருக்கமாகக் கயெக (CNC) எந்திரம் என்று கூறலாம். சந்தையில் கீழ்க்கண்டவாறு பலவிதமான கயெக (CNC) இயந்திரங்களும் அவற்றுக்கான கட்டுப்படுத்திகளும் உள்ளன. கயெக துருவல் எந்திரங்கள் (CNC mills) கயெக கடைசல் எந்திரங்கள் (CNC lathes) இழுவை கத்தி எந்திரங்கள் (DragKnife Cutters) சீரொளி வெட்டு எந்திரங்கள் (Laser Cutters) செதுக்கும் எந்திரங்கள் (Engravers) மின்ம வெட்டு எந்திரங்கள் (Plasma Torch Cutters) கம்பி… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 20. 2D உருவரைவிலிருந்து CNC நிரல் இயற்றல்

வெட்டுளி ஆரத்தை ஈடு செய்தல் (cutter radius compensation) தகடு, பலகை போன்ற தட்டையான கச்சாப்பொருட்களில் வெளி வடிவத்தை வெட்டுவதை பக்கத்தோற்ற வெட்டு (profile cutting) என்கிறார்கள். உள்பக்கத்தை வெட்டுவதை உட்பள்ள வெட்டு (pocket cutting) என்கிறார்கள். இம்மாதிரி வெட்டை சிஎன்சி உளிக் குடைதல் (CNC Router) பயன்படுத்திச் செய்ய வேண்டுமென்றால் G நிரலில் நாம் படத்தில் கண்டவாறு வெட்டுளி ஆரத்தை ஈடு செய்ய வேண்டும்.  வழக்கமான துருவல் என்றால் G42 நிரல் பயன்படுத்த வேண்டும். ஏறு… Read More »

எளிய தமிழில் Python – 03 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. Getting Inputs From User 2. Type Casting 3. Command Line Arguments போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி…

எளிய தமிழில் Python – 02 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. History of Python 2. GEN of Python 3. Python Installation 4. Printing Statement 5. Comments in Python 6. Arithmetics 7. Data Types போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி… அடுத்த காணொளி…

எளிய தமிழில் Python – 01 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. What is Program? 2. What is Programming Language? 3. Why Python? 4. Simple Syntax 5. Usage போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… அடுத்த பாகம்…

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா ஆதரவு கட்டுரைகளுக்கு பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்து காணொளி இந்தச் சுட்டியில் உள்ளது. இந்தக் காணொளியில் மொசில்லா ஆதரவு(Support Mozilla) கட்டுரைகளுக்குப் பங்களிப்பது குறித்து இந்தக் காணொளியில் காணலாம். சுட்டிகள்: 1. support.mozilla.org/ta/ 2. mozillians.org/ 3. groups.google.com/forum/#!forum/mozilla.dev.l10n.ta/join 4. lists.mozilla.org/listinfo/dev-l10n-ta  

எளிய தமிழில் CAD/CAM/CAE 19. சிஎன்சி நிரல் இயற்றல் (Computer Aided Manufacturing – CAM)

கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களைத் தமிழில் அஃகுப்பெயராக கயெக எந்திரங்கள் என்று கூறலாம். இவற்றுக்கு எவ்வாறு நிரல் எழுதுவது என்பது பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம் கயெக நிரலாக்கம் (CNC Programming). கயெக எந்திரங்கள் பற்றிய அடிப்படைகள் தெரிந்துகொள்ள என்னுடைய எளிய தமிழில் CNC மின்னூலை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். நாம் ஒரு பாகத்தை CNC இயந்திரத்தில் வெட்டித் தயாரிக்க வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அதற்கு G… Read More »

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா தமிழ் மொழியாக்கத்தில் பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா என்ற திறந்த மூல மென்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும், உலாவிகளில் ஒன்று. கணினிக்கான உலாவியாக உருவெடுத்த ஒரு தொழில்நுட்பம் இன்று, இணைய உலகில் தனியுரிமையை பாதுகாக்கவும், இணையத்தை கட்டற்ற அமைப்பாக வைக்கவும், தன்னாலான போராட்டத்தைச் சில சமரசங்களோடு நடத்திவருகிறது. ஒரு பயனுருடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துப் பணமாக்கவும், பயனர் வாழ் பகுதியின் அரசியலை தீர்மானிக்கவும் இணையம் பயன்படுத்தப்பட்டுவரும் இதே காலக்கட்டத்தில் தான், ஒரு அமைப்பு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்துடன்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 18. எண்சார்ந்த பகுப்பாய்வு (Numerical Analysis)

உங்கள் முன்னிருக்கும் ஒரு பொறியியல் வடிவமைப்பு பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுக்கு ஒரு நூதனமான எண்ணம் உதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கருத்துரு நடைமுறையில் செயல்படுமா என்பதை எவ்வாறு நிரூபணம் செய்வது? மேட்லாப் (MATLAB) போன்ற கணித ரீதியான “முன்மாதிரி” மற்றும் சிமுலிங்க் (Simulink) போன்ற அமைப்புகள் “கருத்துருக்கான ஆதாரம் (proof of concept)” அமைப்புகளை உருவாக்குவதற்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கின்றன. அதன் பின்னர்தான் அந்த கருத்துருவை மேம்பாடு செய்து செயல்முறைக்குக் கொண்டுவர ஒரு குழுவை அமைக்கவும்… Read More »