Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

உபுண்டு முனையச் சிறுகுறிப்பு

உபுண்டு முனையச் சிறுகுறிப்பு கீழ்கண்டவற்றை உபுண்டு ஜினோம் முனையத்தில் தட்டச்சு செய்யுங்கள்: sudo apt-get install fortunes-ubuntu-server -y இனி உபயோகமான குறிப்புகள் பெற, பின்வரும் கட்டளையைப் பல முறை பயன்படுத்துங்கள்: ubuntu-server-tip இதோ சில எடுத்துக்காட்டுகள்: lsof பயன்படுத்தி எந்தெந்த கோப்புகளுக்கு ஓப்பன் ஹாண்டில் (open handle) உள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம். ‘lsof +D /path’ பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள தடத்திற்கான பிராசஸ்களை (process) கண்டுபிடித்து விடலாம் நீங்கள் ஏதாவது தவறான கட்டளை அல்லது கடவுச்சொல்… Read More »

எளிய தமிழில் MySQL – மின்புத்தகம்

MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் ( Free Open Source Software ) வகையிலான Database System. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன், மேலும் புதிய பகுதிகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு… Read More »

லினக்ஸ் இயங்குதளங்களில் தமிழில் எழுதுவது எப்படி?

கட்டற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்த விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் பலருக்கும் இருக்கும் ஐயமே அவற்றில் தமிழில் எழுதும் வழி தான். விண்டோஸ் இயங்கு தளத்தில் தமிழில் எழுத அழகி, முரசு, அஞ்சல் போன்ற மென்பொருட்கள் உள்ளன.லினக்ஸில் தமிழில் எழுத பல வழிகள் இருந்தாலும், ibus முறையே மிக எளிதானது. அமைப்புகளில் (Settings) சில சிறு மாற்றங்கள் செய்தால், எளிதாய் மொழி மாற்றி எழுதலாம்.   முதல் படி – நிறுவுதல் (Installation):   பெரும்பாலான அன்பர்களுக்கு ibus… Read More »

Libreoffice-formula-vs-Microsoft-equation-editor

 இன்றைய கணினி உலகில் Microsoft Office என்ற வார்த்தையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலராலும் Microsoft Office பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல பள்ளிகளில் மாணவர்கள் Microsoft Office-ஐ ஒரு பாடமாகவே பயில்கின்றனர். MS Office-க்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கையேடுகள், பள்ளிகளிலும் கணினி பயிற்சி மையங்களிலும் வழங்கப்படுவதை பரவலாக காணமுடிகிறது. இதனால் MS Office பலரது அன்றாட பணிகளின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இருப்பினும்,இது போன்ற எளிய அல்லது… Read More »

777

 “777” எண்ணை கண்டால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும் நிறைய பேருக்கு ஓவாமை. இது ஆபத்தின் அறிகுறி 😉 ஆனால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும், நிறைய பேர் சர்வ சாதாரனமாக செய்யும்/கொண்டிருக்கும் பழக்கம் இது உபண்டுவில் “sudo apt-get install acl” கட்டளையை முனையத்தில் கொடுங்க அது கொடுக்கும் .getfacl மற்றும் setfacl ஆணைகளை கொண்டு இந்த கெட்ட பழக்கம் உடையவராக நிங்களும் இருந்தால் விரைந்து மாற்றிக்கொள்ளுங்கள் ~ ஆமாச்சு

கட்டற்ற ஆய்வு மேற்கொள்ள 5 ஒழுங்கு முறைகள்

  UNICEF-ல் உள்ள சிலர், Mel-லிடம், கட்டற்ற ஆய்வு எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், என்பது பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அவர், அவர்களுக்கு அளித்த பதில் பின்வருமாறு. ஒரு ஆய்வாளர், கட்டற்ற ஆய்வு மேற்கொள்ள சில அடிப்படை காரியங்கள் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு. 1.Radical(Real time transparency) உண்மை நிலை தெளிவு: நம் அனைத்து வேலைபாடுகளையும், அது இயற்றப்பட்ட உடன், திருத்தப்படக் கூடிய வடிவில் creative common license ஆக வெளியிட… Read More »

ஒரு கட்டற்ற மென்பொருள் மேதையின் மறைவு…

    கென்னத் கான்ஸல்வேஸ் – கட்டற்ற மென்பொருள் மடலாடற்குழுக்களில் சிறிதளவேனும் பங்குகொண்டோருக்கு இந்தப் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். சென்னை லினக்ஸ் பயனர் குழு உள்பட பல குழுக்களுக்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. இத்தகைய மாமனிதர் இப்பொழுது நம்மிடையே இல்லை. அவரது மறைவு கட்டற்ற மென்ம உலகில் பலருக்கு ஈடு செய்யமுடியாப் பேரிழப்பு. கணியம் குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது மகத்தான பங்களிப்புகளையும் இங்கே நினைவுகூர்கிறது. கென்னத் கான்ஸல்வேஸ் உதகையில் பிறந்த ஒரு… Read More »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு- 2012

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2012 திசம்பர் மாதம் 28 முதல் 30 வரை மூன்று நாள் நடைபெற உள்ளது. உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும். கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும்… Read More »

ரிச்சர்டு ஸ்டால்மன்

ரிச்சர்டு ஸ்டால்மன்   இலவச மென்பொருள் எனும் கருத்து 1980ம் ஆண்டு கணினி ஆராய்ச்சியாளரான ரிச்சர்டு எம். ஸ்டால்மென் என்பவரால் தொடங்கப்பட்ட குனூ GNU எனும் திட்டத்தின் விளைவாகும். குனூ என்பது மற்ற வணிகம் சார்ந்த மென்பொருட்களுக்கு ஒரு மாற்றாக இருந்தது. குனு என்பது “GNU is Not Unix” என்பதின் விரிவுச்சொல்லாகும். இது ஒரு முற்றிலும் இலவசமான இயங்கு தளத்தை உருவாக்குவதற்காக தோன்றிய ஒரு யோசனை. இங்கு இலவசம் எனும் வார்த்தை கவணிக்கத்தக்கது. இலவசம் எனும்… Read More »

கணியம் – இதழ் 3

வணக்கம். ‘கணியம்‘ இதழை படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய அறிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் சென்றடையும் முயற்சியில் பங்குபெறும் அனைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கும் உலகத்தமிழர் அனைவர் சார்பிலும் பாராட்டுகிறேன். கணிணியில் தட்டச்சு பயிற்சியின்றி தமிழ் எழுதுவது, மிகவும் கடினமானது. பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, பல மணிநேரங்களை ஒதுக்கி, அவர்கள் எழுதும் இந்த பணி, தமிழை தொழில்நுட்ப தேரிலேற்றி, அடுத்த தலைமுறைக்கு தயார்படுத்துகிறது. விக்கிபீடியா ஊடகப் போட்டி, பிப்ரவரி… Read More »