கணியம் – இதழ் 16
வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உபுண்டு லினக்ஸின் அண்மைய பதிப்பான 13.04(Raring Ringtail) 25-ஏப்ரல்-2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்ய: www.ubuntu.com/download/desktop உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர். உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. Getting Started With Ubuntu :என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது ubuntu-manual.org/ உலகெங்கும் உள்ள உபுண்டு லினக்ஸ் பயனர்கள் இதன் வெளியீட்டு விழா ஒன்றை நடத்துகின்றனர்.… Read More »