Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

Gcompris – கல்வி கற்க உதவும் கட்டற்ற மென்பொருள்

நமது செயல்களை எளிமையாக்க ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் விலை கொடுத்து வாங்கினாலும், நிறுவும் போது சில கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக்கொள்வோம். I agree என்ற பட்டனுக்கு மேலே உள்ள உரையை யாரும் படிக்க மாட்டோம். அதில் கீழ்காணும் வகையில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். ‘இந்த மென்பொருளை ஒரே ஒரு கணினியில் மட்டுமே நிறுவுவேன். வேறு யாருக்கும் தரவே மாட்டேன். நிறுவனத்தின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்கிறேன்.’ சிறு வயதில் இருந்தே உணவு, இனிப்பு என நம்மிடம் இருக்கும்… Read More: Gcompris – கல்வி கற்க உதவும் கட்டற்ற மென்பொருள் »

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 1

விக்கி மின்மினிகள் பயிற்சிக்கு வருக ! வருக ! முதல் நாளான இன்று பின்வருவனவற்றை முயன்று பாருங்களேன் ! விக்கிப்பீடியாவில் உங்களுக்கு என்று ஒரு பயனர் கணக்கு தொடங்குங்கள். கணக்கு தொடங்க இங்கு செல்லுங்கள். இப்பயனர் பெயரை அனைத்து மொழி விக்கிமீடியா திட்டங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம். விக்கிப்பீடியாவுடன் பிற உறவுத் திட்டங்களைப் பற்றி அறிவீர்களா? விக்சனரி, விக்கிமூலம், விக்கி நூல்கள், விக்கி செய்திகள், விக்கி மேற்கோள் ஆகிய திட்டங்களை ஒரு முறை பார்வையிடுங்கள். விக்கிப்பீடியாவின் தேர்தெடுத்த கட்டுரைகளை… Read More: விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 1 »

லிப்ரெஓபிஸ் (Libre Office) முன்னேற்றம் – தமிழாக்கம்

நண்பரே, வணக்கம். கட்டற்றத் திறவுற்று மென்பொருட்களில் லிப்ரெஓபிஸ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதனைத் தமிழாக்கும் பணியை 2011 ஆண்டு முதற்கொண்டு நாம் மெற்கொண்டு வருகின்றோம். கடந்த ஆண்டு லிப்ரெஓபிஸ் முழுமையாக தமிழாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவ்வாண்டு, லிப்ரெஓபிஸின் புதிய வெளியீடுகள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் 22 ஆம் திகதி லிப்ரெஓபிஸ் 4.3 வெளிவரவிருக்கிறது. அப்பதிப்பும் முழுமையாக தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுவரை அதன் ஒரு இலட்சம் சொற்களில் 88 ஆயிரத்தை தமிழுக்கு மொழிபெயர்த்து விட்டோம்.… Read More: லிப்ரெஓபிஸ் (Libre Office) முன்னேற்றம் – தமிழாக்கம் »

ProjectMadurai திட்டத்தின் நூல்களை கிண்டில் கருவிகளுக்காக 6 inch PDF மாற்றுதல்

ProjectMadurai.com தளத்தில் பல பழம் பெரும் இலக்கியங்கள் HTML வடிவிலும் A4 PDF வடிவிலும் வழங்கப் படுகின்றன. கிண்டில் மற்றும் பல ஆன்டிராயுடு கருவிகளில் (<=4.2.x) இன்னும் தமிழ் சரியாகத் தெரிவதில்லை. அவற்றில் தமிழ் நூல்கள் படக்க 6 அங்குல PDF கோப்புகள் பயன்படுகின்றன. GNU/Linux இயக்குதளத்தில் உள்ள கருவிகளைக் கொண்டு, Project Madurai தளத்தில் உள்ள அனைத்து நூல்களையும் 6 அங்குல PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். 1. கோப்புகளின் பெயர்களை பிரித்தெடுத்தல்.… Read More: ProjectMadurai திட்டத்தின் நூல்களை கிண்டில் கருவிகளுக்காக 6 inch PDF மாற்றுதல் »

அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம். நமது சாதனங்களை அலங்கரிப்பதற்குத் தகுந்த படங்கள் அவற்றைக் கையாளும் சுதந்திரத்துடன் (Creative Commons License) நமக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் தமிழில்? மேற்கண்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சமூக வளர்ச்சித் திட்டம் தான் “Tamil Wallpapers in Creative Commons License”. அழகிய தமிழ்… Read More: அழகுத் தமிழில் வண்ணப்படங்கள் »

தமிழ்99 – ஸ்டிக்கர்கள் – நீங்களே அச்சடிக்கலாம்

      தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.   தமிழ்99 விசைப்பலகை முறை, தமிழில் தட்டச்சு செய்வதை எளிதாக்குகிறது. இதன் சிறப்புகள் – 1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு 2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம். 3. பழகுவது எளிது. 4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிந்து கொள்கிறோமோ அந்த வகையில தான் இது செயற்படும்… Read More: தமிழ்99 – ஸ்டிக்கர்கள் – நீங்களே அச்சடிக்கலாம் »

கணியம் – இதழ் 23

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மாத இதழ் சற்றே கால தாமதமாக வெளிவருகிறது. மன்னிக்கவும்.   சென்ற வாரம், சான்பிரான்சிஸ்கோ நகரில், எழில் [ ezhillang.org]எனும் தமிழ் நிரல் மொழியை உருவாக்கிய, முத்து அவர்களை சந்தித்தேன். தமிழுக்காய் பல செயல்களை ஆர்வமுடன் செய்யும் இளைஞர். கல்லூரிக் கல்வி கணிணித்துறையாய் இல்லாத போதிலும், தானே பல்வேறு நுட்பங்களைக் கற்று, தமிழிலேயே நிரல் எழுதும் வகையில், எழில் என்ற புதிய நிரல் மொழியை… Read More: கணியம் – இதழ் 23 »

கணியம் – இதழ் 22

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற விக்கிபீடியாவின் பத்தாண்டு நிகழ்வுகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் விக்கி அறிமுகப்பயிற்சிப் பட்டறைகள் நடந்து வருகின்றன. 100க்கும் மேற்பட்ட புது விக்கிபீடியர்கள் உருவாகி உள்ளனர். உங்கள் ஊரிலும் விக்கி பயிற்சிப் பட்டறை நடத்த எங்களை தொடர்பு கொள்ளவும்.   தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக மயூரநாதன், சுந்தர், இரவி, செல்வா ஆகிய நால்வரும், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர்… Read More: கணியம் – இதழ் 22 »