Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

கனடாவில் தமிழில் பைத்தான் நிரல் பயிற்சி

சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில் கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து  எளிய தமிழில் பைத்தான் (Introduction to Programming Python in Tamil) பகுதிநேர (Part-time) நேரடிப் பயிற்சி வகுப்பனை வரும் சனவரி 27ஆம் தேதி துவங்குகிறது. மேலும் விவரங்களுக்கு +1 437 432 9804 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம். பதிவு செய்ய எளிய தமிழில் பைத்தான்

கிட்லேப் யூடியூப் நேரலை வகுப்புகள் – Gitlab Session Online in Tamil

கிட்லேப் நேரலை வகுப்புகள் யூடியூபில் இன்று முதல் நடத்தப்பட இருக்கின்றன. பயிலகம் யூடிபூப் சேனலில் பயிற்றுநர் விஜயராகவன் இவ்வகுப்புகளை நடத்துகிறார். யூடியூப் இணைப்பு: www.youtube.com/@PayilagamChennai

தொ. பரமசிவன் மின்னூல்கள் தளம் வெளியீடு

தொ. பரமசிவன் அவர்களது நூல்களைத் தொகுத்து மின்னூல்களாக, ஒரு தனி வலைத்தளமாக வெளியிடுகிறோம். thopa.FreeTamilEbooks.com பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 – திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி… Read More »

AWS Cloud அறிமுகம் – இணைய வழி தொடர் வகுப்பு

கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் DevOps அறிமுகம் தொடர் வகுப்புகள், தமிழில் நடத்தி வருகிறோம். இதுவரை Linux, git, docker, jenkins, ansible, prometheus/grafana ஆகியவை பற்றி நடத்தியுள்ளோம். எல்லா வகுப்புகளையும் பதிவு செய்து யுடியூபில் வெளியிடுகிறோம். காண்க – www.youtube.com/@kaniyamfoundation/ அடுத்த நிகழ்வாக AWS Cloud, Terraform பற்றி அறிமுக வகுப்புகள் நடத்துகிறோம்.இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோரை அழைக்கிறோம். பாடத்திட்டம் – வகுப்புகள் தொடங்கும் நாள் – நவம்பர் 15 2023 நேரம் –6.30… Read More »

துருவங்கள் – நுட்ப நாவல் – நக்கீரன்.ந

ஒரு காதல் கதையில் கணினியைச் சொல்லித் தர முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் நக்கீரன். மதன், கார்த்திகா ஆகிய இருவர் தாம் இந்தக் கதையின் தலைவனும் தலைவியும். இவர்கள் இருவரையும் லினக்ஸ் இணைக்கிறது. இது தான் கதையின் சுருக்கம். கதைச் சுருக்கத்தைக் கேட்டவுடன் ‘ஓ! அவ்வளவு தானா!’ என்று நினைத்து விடாதீர்கள். நீங்கள் இந்தக் கதையில் புரட்டப் போகும் ஒவ்வொரு பக்கத்திலும் எதிர்பாராத திருப்பங்களும் எதிர்பார்க்கும் விருப்பங்களும் நிரம்ப இருக்கின்றன. காதலிக்க விரும்பும் ஒவ்வோர் இளைஞருக்கும் இந்தப்… Read More »

40 ஆவது ஆண்டில் GNU திட்டம்

நாம் எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தையே மாற்ற வல்லவை. சில நேரங்களில் நமது நற்செயல்கள் நமது வாழ்வை மட்டுமல்ல, பிறருக்கும் நல்வாழ்வை அளிக்க வல்லவை. சில செயல்கள் உலகோர் அனைவருக்கும் நல்வாழ்வு தர வல்லவை.உலக வரலாற்றில் அச்செயல்களே அச்சாணியாக நின்று, வரலாற்றை நகர்த்திச் செல்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், செப்டம்பர் 27 1983 ல் ரிச்சர்ட் ஸ்டால்மன் (Richard Stallman) வெளியிட்ட குனு திட்டம் ( GNU ) , கணினி வரலாற்றை புரட்டிப்போடும்… Read More »

விழுப்புரத்தில் கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition) – 24/09/2023

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்…! 10வது ஆண்டாக விழுப்புரத்தில் அறிவியல் கண்காட்சியைப் போல, கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition). வருடாந்திர மென்பொருள் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (24/09/2023) அன்று நடைபெறுகிறது. இதில் ஏராளமான கட்டற்ற(சுதந்திர) மென்பொருள் தொழில்நுட்பங்களை பற்றிய தலைப்புகள் இடம்பெறுகின்றன. அனைவரும் வருக…! அனுமதி இலவசம்…! இந்த கண்காட்சியின் தலைப்புகள் பின்வருமாறு: தேதி: செப்டம்பர் 24, 2023 – ஞாயிறு நேரம்: 9 AM – 1 PM இடம்: பத்மநாபன் அரங்கம், அலமேலுபுரம்,… Read More »

தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023 – செப் 10 2023 நிகழ்வுகள்

சென்ற வாரம் தொடங்கிய கட்டற்ற மென்பொருள் விடுதலை விழாக் கொண்டாட்டங்கள், இந்த வாரம் பல்வேறு இணைய உரைகளோடு தொடர்கின்றன. நேற்று நான்கு இணைய உரைகள் இனிதே நடந்தன. இன்றைய நிகழ்ச்சிகள் நாள்- செப்டம்பர் 10 2023 – ஞாயிறு 10.00 IST – GitLab – ஓர் அறிமுகம் – விஜயராகவன்11.00 IST – லேம்டா (lambda functions) – ஓர் அறிமுகம் – பிரித்திவிராஜ்17.00 IST – Emacs – அறிமுகம் மற்றும் ஈமேக்ஸில் RSS… Read More »

தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023 – வாரம் – 2

சென்ற வாரம் தொடங்கிய கட்டற்ற மென்பொருள் விடுதலை விழாக் கொண்டாட்டங்கள், இந்த வாரம் பல்வேறு இணைய உரைகளோடு தொடர்கின்றன. இந்த வார நிகழ்ச்சிகள் நாள்- செப்டம்பர் 9 2023 – சனி 10.00 IST – செயற்கை நுண்ணறிவு பற்றிய சுருக்கமான அறிமுகம் – இராஜவசந்தன்11.00 IST – Docker: புதியவர்களுக்கான எளிய அறிமுகம் மற்றும் பயன்பாட்டு விளக்கம் – சாகில்17.00 IST – FastAPI – ஒரு அறிமுகம உரை – அதிபன்18.30 IST –… Read More »