Category Archives: கணியம்

IRC – ஒரு அறிமுகம்

இணையம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிக பிரபலமாக இருக்கும் ஒரு தொடர்பு முறையை தான் IRC (இன்டர்நெட் ரிலே சாட்) என்று கூறுகிறார்கள். அப்பிடி இதில் என்ன தான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம்.   IRC என்றால் என்ன? 1980 களில் தொடங்கப்பட்ட தொலைதொடர்பு முறை தான் இந்த IRC . அன்று முதல் இன்று வரை இது பல பயனர்களை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள உதவுகிறது. இந்த தொடர்பு முறை… Read More »

LESS – CSS – விழுதொடர் நடைதாள் மொழி

LESS – CSS – விழுதொடர் நடைதாள் மொழிCSS எனப்படும் விழுதொடர் நடைதாள் மொழி (Cascading Style Sheets) பற்றிப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இணையத்தின் ஆஸ்தானக் குறியீட்டு மொழியாக மீயுரைக் குறியீட்டு மொழி (HTML) விளங்குவதைப் போல, இணையத்தின் ஆஸ்தான ஒப்பனையாளர் நமது CSS தான். மிகவும் எளிமையான மொழிதான் என்றாலும், தனக்கென பல வறையரைகளைக் கொண்டது CSS. எடுத்துக்காட்டாக, இம்மொழியில் மாறிகள் (variables) இல்லை. இணையதளம் பெரிதாக வளரும்போது CSS நிரல்களைப் பராமரிப்பது… Read More »

பைதான் – அடிப்படை கருத்துகள் -03

பைதான் – அடிப்படை கருத்துகள் -03   பின் வரும் உதாரணங்கள் பைதான் interpreter-ல் இயக்கப் படுகின்றன. Input statement-கள் >>> மற்றும் … என்று தொடங்குகின்றன. Output-களுக்கு முன்னால் எதுவும் இருக்காது. இந்த உதாரணங்களை நீங்கள் அப்படியே பைதான் interpreter-ல் டைப் செய்து வேண்டும். comment-கள் # என்று தொடங்கும். இவை statement-களின் இறுதியில் அவற்றை விளக்குவதற்காக தரப்பட்டுள்ளன. உதாரணம்: # this is the first comment SPAM = 1 # and… Read More »

வேர்ட்பிரசு – சுழியத்திலிருந்து…01

வேர்ட்பிரசு – சுழியத்திலிருந்து…   கடந்த 2003 ஆம் ஆண்டு மேட் முல்லன்வெக், (Matt Mullenweg) மற்றும் மைக் லிட்டில் (Mike Little) வேர்ட்பிரசு (WordPress) என்ற கட்டற்ற மென்பொருளை வலைப்பதிவுகளை நிர்வகிப்பதற்காக உருவாக்கிய போது அதை சீந்துவோர் யாருமில்லை, உருவாக்கியவர்களோடு சேர்த்து பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை பத்தைக் கூடத் தாண்டவில்லை. அதற்கு முன்பு வெளிவந்த b2 cafelog என்ற வலைப்பதிவு மென்பொருளின் தொடர்ச்சியாகத்தான் வேர்ட்பிரசை மேட்டும், மைக் லிட்டிலும் உருவாக்கினார்கள். அது வெறும் வலைப்பதிவுகளை உருவாக்குவதற்கான கருவியாகத்தான்… Read More »

அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள்

அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள் ~ ஸ்ரீராம் இளங்கோ நாம் லினக்ஸ் அடிப்படையில் உருவான உபுண்டு, லினக்ஸ் மின்ட் (linux Mint ) போன்ற இயக்கு தளங்களை நிறுவிய பின் லிபரே ஆபீஸ் (Libre Office ), VLC ஆகிய தேவையான மென்பொருட்களை நிறுவுவது உண்டு. ஆனாலும் விண்டோஸ் இயக்கு தளங்களை பயன்படுத்தியவர்களுக்கு லினக்ஸ் ஒரு மூன்றாவது நபரை போன்றே காட்சியளிக்கும். அந்த சங்கடத்தை போக்க நீங்கள் பின்வரும் 10 பயன்பாட்டு மென்பொருட்களை நிறுவி பயன்படுத்தலாம். பிதொஸ்… Read More »

BKchem : வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை எளிதாக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள்

வேதியியல், இயற்பியல், பொருளறிவியல் (Material Science), மீநுண்ணறிவியல் (Nanoscience), வேதி தகவல் நுட்பம் (Cheminformatics), உயிரி தகவல் நுட்பம் (Bioinformatics) இதுபோன்ற வேதியியல் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களும், மாணவர்களும் பெரும்பாலும் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், திட்ட விளக்கங்கள் போன்றவற்றிற்கு தேவைப்படும் வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை Perkin Elmer (பல ஆராய்ச்சிக் கருவிகளை தயாரித்து வழங்கும் பெரிய நிறுவனம்) -ன் தயாரிப்பான ChemDraw என்ற வர்த்தக மென்பொருளைக் (Cracked version) கொண்டே உருவாக்கி வருகின்றனர். லினக்ஸ்… Read More »

நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்!

 நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்! (Burning a Data CD/DVD with Nautilus)அண்மைக் காலங்களில், விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை. லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3B போன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம். ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டிலஸ் கோப்பு மேலாளர் (Nautilus File Manager) மூலம் இதை எளிதாகச் செய்யலாம் தெரியுமா? எப்படி… Read More »

டக்ஸ்மேதுடன்(TuxMath) கணிதம் படியுங்கள்

கணித சூத்திரங்களை கற்பது சில காலங்களாக்வே கடினமானதாக இருந்து வருகிறது. அவை எளிதில் கொள்ளும் படியாக இல்லா விட்டால் சிறிது சிரமம் தான். TuxMath பயன்படுத்துபவர்கள் விரைவாக கணித சிக்கல்களை அவிழ்பதாக கூறப்படுகிறது. நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை TuxMath விளையாடினால் நியாபகத் திறன் அதிகரிக்கும். இந்த விளையாட்டு மிகுந்த கேளிக்கைகள் நிறந்தது. Terry Hancock தன் மகனுக்கு கணிதம், வேப்பங்காயாய் கசப்பதாக கூறுகிறார்.அவன் எளிதில் கவனத்தை சிதற விடுவதாகவும், இதன் காரணமாக Terry Hancock… Read More »

முனையத்தில் அளவுகள்

முனையத்தில் அளவுகள்  GNU Units அளவுகளை ஒரு அலகிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுகின்றது. இந்த நிரல் பெரும்பாலான லினக்ஸ் வழங்கல்களில் (distribution) தானாகவே நிறுவப்பட்டிருப்பதில்லை. எனவே, நீங்கள் உங்களது வழங்கலின் களஞ்சியத்திலிருந்து(repository) GNU Units நிரலை நிறுவிக் கொள்ளுங்கள். GNU Units பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளும் வரை, units -v (v for verbose)’ கட்டளையை முனையத்தில் அடியுங்கள். இது பெறுகையை எளிதில் புரிந்து கொள்ள உதவும். ‘units -v’ என்று முனையத்தில் அடிக்கும் போது, கீழே… Read More »

MySQL – இன் வடிவமைப்பு

MySQL – இன் வடிவமைப்பு  MySQL மற்றும் பிற RDBMS முதலியவை பற்பலக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு மென்பொருள் அமைப்பாகும்.இதன் வெவ்வேறு பாகங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்புரிகின்றன என்பதைப் பற்றி  இந்த வரைபடத்தில் சுருக்கமாகக் காணலாம். மேலும், இதன் மூலம் பின்வருவனவற்றைக் கற்கலாம்: MySQL மற்றும் பிற RDBMS – இன் முக்கியமான logical components பற்றி தெரிந்து கொள்ளலாம். MySQL ஆனது எவ்வாறு அதன் சுற்றுப்புறத்தோடுத்  தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பற்றிக் காணலாம். MySQL RDBMS… Read More »