Category Archives: கணியம்

உங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி செய்து பார்க்க தயாரா?

உங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி செய்து பார்க்க தயாரா?  ‘Boot 2 Gecko’ என்னும் குறியீட்டில் வெளிவந்துள்ள ஃபயர்பாக்ஸ் OS, மோசில்லாவின் முழுமையாய் இணைய அடிப்படையில் இயங்கும் திறந்த மூல மொபைல் இயங்குதளமாக ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.   லினக்சை அடிப்படையாகக் கொண்ட பயர்பாக்ஸ் OS, சில இயங்குதளம் சார்ந்த API கள் தவிர, ஒரு ஸ்மார்ட்போனில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து பயன்பாடுகளையும் ஆதரிக்கும். இதில் ‘திறந்த மூல வலை’ (‘open web’… Read More »

எங்கிருந்தும் உங்கள் கணினியை இயக்கலாம்

எங்கிருந்தும் உங்கள் கணினியை இயக்கலாம்அலுவலகங்களில் உள்ள உங்களது கணினியை உங்கள் வீட்டிலிருந்து இயக்க வழியும், வசதியும் கிடைத்தால் எவ்வளவு வசதியாய் போய்விடும் என்று எண்ணி, இயங்கு தளம் மாறுபடுகிறது என்ற காரணத்தால் விட்டுவிட்டீர்களா? வீட்டில் குனு/லினக்ஸ்-ம் அலுவலகத்தில் விண்டோஸ் இயங்குதங்களும் பயன்படுத்துகிறீரா? குழப்பம் தேவையில்லை. உங்களுக்கான வழி இதோ! விண்டோஸ் இயங்கு தளங்களில் உள்ள மிக முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள வசதிகளில் ஒன்றான இந்த ரிமோட் டெஸ்க்டாப் லாகின் எனப்படும் தொலைதூரத்திலிருந்து இணைய வசதியுடன் உங்கள்… Read More »

லினக்ஸ் இயங்குதளங்களில் தமிழில் எழுதுவது எப்படி?

கட்டற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்த விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் பலருக்கும் இருக்கும் ஐயமே அவற்றில் தமிழில் எழுதும் வழி தான். விண்டோஸ் இயங்கு தளத்தில் தமிழில் எழுத அழகி, முரசு, அஞ்சல் போன்ற மென்பொருட்கள் உள்ளன.லினக்ஸில் தமிழில் எழுத பல வழிகள் இருந்தாலும், ibus முறையே மிக எளிதானது. அமைப்புகளில் (Settings) சில சிறு மாற்றங்கள் செய்தால், எளிதாய் மொழி மாற்றி எழுதலாம்.   முதல் படி – நிறுவுதல் (Installation):   பெரும்பாலான அன்பர்களுக்கு ibus… Read More »

லினக்ஸில் ‘Deja Dup’ உதவியுடன் தரவுகளைக் காப்பெடுத்தல்

லினக்ஸில் ‘Deja Dup’ உதவியுடன் தரவுகளைக் காப்பெடுத்தல் ~ஆனந்தராஜ் இயக்குதல்: நீங்கள் உபுண்டு 11 .10 அல்லது அதற்கு மேல் உள்ள இயங்குதளங்களை இயக்குபவரானால், நீங்கள் இந்த ‘Deja Dup’-ஐ தனியாக நிறுவ தேவையில்லை. நீங்கள் ‘Deja Dup’-ஐ முதன் முதலாக பயன்படுத்தத் தொடங்கும் போது, படத்தில் காட்டியுள்ள படி, இரு பொத்தான்களைக் கொண்ட திரை தோன்றும். இதன் பொதுவான அமைப்புகளின் படி, இந்த மென்பொருளானது Trash மற்றும் Download அடைவுகளைக் காப்பெடுக்க எடுத்துக் கொள்ளாது. அது… Read More »

Libreoffice-formula-vs-Microsoft-equation-editor

 இன்றைய கணினி உலகில் Microsoft Office என்ற வார்த்தையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலராலும் Microsoft Office பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல பள்ளிகளில் மாணவர்கள் Microsoft Office-ஐ ஒரு பாடமாகவே பயில்கின்றனர். MS Office-க்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கையேடுகள், பள்ளிகளிலும் கணினி பயிற்சி மையங்களிலும் வழங்கப்படுவதை பரவலாக காணமுடிகிறது. இதனால் MS Office பலரது அன்றாட பணிகளின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இருப்பினும்,இது போன்ற எளிய அல்லது… Read More »

777

 “777” எண்ணை கண்டால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும் நிறைய பேருக்கு ஓவாமை. இது ஆபத்தின் அறிகுறி 😉 ஆனால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும், நிறைய பேர் சர்வ சாதாரனமாக செய்யும்/கொண்டிருக்கும் பழக்கம் இது உபண்டுவில் “sudo apt-get install acl” கட்டளையை முனையத்தில் கொடுங்க அது கொடுக்கும் .getfacl மற்றும் setfacl ஆணைகளை கொண்டு இந்த கெட்ட பழக்கம் உடையவராக நிங்களும் இருந்தால் விரைந்து மாற்றிக்கொள்ளுங்கள் ~ ஆமாச்சு

HTML5 – ஒரு பட விளக்கம்

HTML5 – ஒரு பட விளக்கம்அறிமுகம்   பழையன கழிதலும் புதியன புகுவதும் கணினித் துறையில் அன்றாடம் நடப்பது. அப்படிப்பட்ட மாற்றங்களில் அடிக்கடி பேசப்படுவது HTML5. இணைய தள வடிவமைப்பிற்கு ஒரு புது உருவம் கொடுப்பது தான் HTML5. கைபேசி, அலைபேசிகளிலிருந்து, கைப்பலகை கணினிகள் வரை பலவித கருவிகள் கொண்டு நாம் இணையத்தை வலம் வருகிறோம். எனவே ஓர் இணையத் தள பக்கத்தை வடிவமைக்கும் போதே இன்றைய கணினிக் கருவிகள் அனைத்திலும் சரியாக வேலை செய்யுமா என்று… Read More »

வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03

வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03 ~தமிழினியன்   இந்தக் கட்டுரையில் வேர்ட்பிரசை நிறுவும் வழிமுறைகள், வேர்ட்பிரசை நிறுவிய பிறகு, வார்ப்புருக்கள் மற்றும் நீட்சிகளை நிறுவும் வழிமுறைகளைப் பார்ப்போம். முதலில் வேர்ட்பிரசை உங்கள் வழங்கியில் நிறுவ குறைந்தபட்சமாக சில கட்டாயத் தேவைகள் இருக்க வேண்டும். அவை   PHP 5.2.4 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு MySQL 5.0 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு உங்கள் வழங்கியில் இந்த குறிப்பிட்ட பதிப்புகள் இல்லாவிட்டால், வேர்ட்பிரசு 3.2க்கு மேலானவற்றை நிறுவ முடியாது.… Read More »

MySQL பாகம்: இரண்டு

Databases, Tables மற்றும் Indexes-ன் உருவாக்கம் மற்றும் நிர்வாக முறைகள் இந்த பாகத்தில் நாம் MySQL-ல் structures-ஐ உருவாக்குவது பற்றியும் மற்றும் அதனை நிர்வாகம் செய்வது பற்றியும் காண்போம். இது MySQL Server-இல் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்பட்டு மற்றும் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பது பற்றிய logical View-ஐக் கொடுக்கும். முதலில் நாம் databases, tables, columns மற்றும் indexes பற்றிய ஒரு சில அடிப்படை விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு சிறிய முன்னுரை: Databases, Tables, Columns மற்றும்… Read More »

கணியம் – இதழ் 11

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மாத கணியம் இதழ் சற்றே தாமதமாகவே வெளிவருகிறது. கடும் மின்தடை மற்றும் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி கணியம் இதழை வளர்க்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். உபுண்டு 12.10 மற்றும் அதை சார்ந்த லினக்ஸ் மின்ட் 14 சமீபத்தில் வெளியிடப்பட்டன. fedora உம் தனது அடுத்த பதிப்பை தயார் செய்து வருகிறது.  நமது இயங்கு தளத்தை மேம்படுத்திக் கொள்வதால் விரைவு,… Read More »