Category Archives: கணியம்

[தினம் ஒரு கட்டளை] echo எதிரொலி

5 வது நாள் echo –  எதிரொலி ஒரு செய்தியையோ அல்லது ஒரு மாறியையோ  அனைத்து உயிர்ப்போடு இருக்கும் பயனர்களுக்கு அனுப்பவும் கோப்புகளை உருவாக்கவும். உள்ளடக்கத்தை மாற்றி எழுதவும் பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam:~/odoc $ echo ” Hi Everyone” Hi Everyone என்ற செய்தியை முதல்நிலை வெளியீட்டில் அனுப்பகிறது. hariharan@kaniyam:~/odoc $ echo $HOME $HOME எனும் மாறியில் உள்ள மதிப்பை வெளியிடுகிறது. hariharan@kaniyam:~/odoc $ echo “the text” > filename.extension the text… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 27. மின்னூர்திகளின் தரநிலைகள்

வண்டியை வாங்குவதற்கு முன் அதன் திறன் (power), முறுக்கு விசை (torque), முடுக்கம் (acceleration), ஓடுதூரம் (range) பொன்ற பல விவரங்களைக் குறிப்பாகப் பார்க்கிறீர்கள். ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவரவர் வழியில் சோதனை செய்து வெளியிட்டால் உங்களால் இவற்றை ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. இவற்றைப் பொதுவாகச் சோதிக்கும் செயல்முறைகள் தேவை. மேலும் சார்பற்ற மையம் ஒன்று சோதனை செய்து அறிக்கை வெளியிட்டால்தான் வாங்குபவர்களுக்கு நம்பத்தக்கதாக இருக்கும்.  இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (Automotive Research Association of… Read More »

[தினம் ஒரு கட்டளை] CAT ஒன்றிணை.

4 வது நாளில் நாம் காண இருக்கும் கட்டளை CAT cat என்றவுடன் பூனை என்று எண்ணிவிடாதீர்கள். concatnate என்பதன் சுருக்கமே அது. தொடரியல்: hariharan@kaniyam :~/odoc $ cat ./bashrc ஒரே ஒரு கோப்புடன் இந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்பின் உள்ளடக்கத்தை  முனையத்தில் காட்டும். hariharan@kaniyam:~/odoc $ cat video.mp4 அப்படியெனில் படம் அல்லது காணொலிகளை இந்த கட்டளை பயன்படுத்தி படித்தால் முனையத்தில் படத்தின்(காணொளியின்) இருநிலை மதிப்பின் உரைவடிவம் வெளியிடப்படும். hariharan@kaniyam:~/odoc $ cat file1… Read More »

[தினம் ஒரு கட்டளை] LS பட்டியலிடுவோமா ?

தினம் ஒரு கட்டளை பகுதியில் கணியம் வாசகர்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. இன்று மூன்றாவது நாளில் நாம் காண இருப்பது LS – பட்டியல் ls கட்டளையை நாம் பட்டியல் (list) எனப் பொருள் கொள்ளலாம். இந்தக்கட்டளை கோப்புறைகளையும் கோப்புகளையும் பட்டியலிட பயன்படுகிறது. எந்த ஒரு கோப்புறையின் பாதையையும் கொடுக்காமல் இக்கட்டளையை பயன்படுத்தும்போது தற்போது நாம் இருக்கும் கோப்புறையில் உள்ளவற்றை பட்டியலிடுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc $ ls hariharan@kaniyam: ~/odoc $ sudo ls . நீங்கள்… Read More »

[தினம் ஒரு கட்டளை] POWEROFF இயக்கத்தை நிறுத்து

இரண்டாவது நாளுக்கான கட்டளையாக நாம் பார்க்கவிருப்பது poweroff எனும் கட்டளைதான். POWEROFF – தொடரியல் :  hariharan@kaniyam: ~/odoc $  sudo poweroff இந்த கட்டளை இயங்குதளத்தின் இயக்கத்தை நிறுத்த பயன்படும் கட்டளை ஆகும். இந்த கட்டளை இயக்கப்பட்டவுடன் இயங்குதளத்தில் நிகழும் எல்லாவிதமான செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துகிறது. இவ்வாறு உடனடியாக செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் சேமிக்கப்படாமல் இருக்கும் வேலைகள் அனைத்தும் தொலைந்துவிடும். மேலும் இது தற்போது இணைப்பில் உள்ள எல்லா கோப்பு அமைப்புகளின் இயக்கத்தையும் துண்டித்துவிட்டு  வன்பொருளின் இயக்கத்தையும்… Read More »

[தினம் ஒரு கட்டளை] PWD நீ எங்கே இருக்கிறாய்?

லினக்ஸ் இயங்குதளத்தில் பல்வேறு கட்டளைகள் உள்ளன. அவற்றை ஓவ்வொன்றாக நாம் தினம் ஒரு கட்டளை  தொகுப்பில் காணலாம். அதன்படி முதல் நாளான இன்று. PWD கட்டளை பற்றி காணலாம். PWD – Print Working Directory தற்போது நாம் எந்த கோப்புறையில் பணிபுரிகிறோம் என்பதனை அறிய இந்த கட்டளை பயன்படுகிறது. லினக்ஸ் கட்டளைகள் அனைத்திலும் கட்டளைகளோடு சில தெரிவுகள் கொடுக்கப்படும் அவ்வாறு PWD கட்டளையோடு இரு தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை –logical மற்றும் –physical தொடரியல் :… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 26. ஓட்டுநர்களுக்கு உதவிக் குறிப்புகள்

மின்னூர்திகள் ஓடும்போது சத்தமே இருக்காது பெட்ரோல் டீசல் கார்களில் வரும் எஞ்சின் ஓடும் சத்தமும், அதிர்வும் மின்னூர்தி மோட்டார்களில் மிகக் குறைவு. காரில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் வசதியானது. ஆனால் சாலையில் செல்லும் பாதசாரிகளால் வண்டி மிக அருகில் வந்தாலும் அதை உணர முடியாது. இது விபத்து ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆகவே ஓட்டுநர் மேலும் கவனமாக ஓட்ட வேண்டும். முக்கியமாகப் பின்னோக்கிச் செல்லும்போது மிகக் கவனமாக ஓட்ட வேண்டும். கியர் மாற்றுதல் தானியங்கி கியர்… Read More »

புலவிளைவு  திரிதடையம்(FET ட்ரான்சிஸ்டர்) என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 21

ஏற்கனவே எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், தொடக்க கட்டுரைகளில் திரி தடையங்கள்(transistors) குறித்து பார்த்திருந்தோம். அடிப்படையில், டிரான்ஸிஸ்டர் கருவிகள் என ஆங்கிலத்தில் அறியப்படும் இவை, பல விதமான எலக்ட்ரானிக் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நான் அந்த கட்டுரையில் குறிப்பிட்டது இரு துருவ செயல்பாட்டு திரிதடையம்(BJT) மட்டும்தான். அதில் காணப்படக்கூடிய மற்றொரு வகை திரி தடையம், புல விளைவு திரிதடையம்( FET) என அறியப்படுகிறது. ஆங்கிலத்தில், ஃபீல்டு எஃபெக்ட் ட்ரான்சிஸ்டர் என அறியப்படும் இவை, மின்புலத்தைக் கொண்டு அதன் ஊடாக… Read More »

Machine Learning – ஓர் அறிமுகம் – இலவச இணைய உரை

நாள் – நவம்பர் 9 2024நேரம் – 11.30 AM – 1.30 PM IST இணைப்பு – meet.google.com/ykj-aksq-whw YouTube Live : www.youtube.com/live/rxH2k-kpgqw உரை – திரு. ராஜ வசந்தன்EachOneTeachOne Youtube channel நிறுவனர்CTO, Grids and Guides அனைவரும் வருக.

மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…!

மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…! உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக மின்னுருவாக்கம் (Digital) செய்யவேண்டுமா ? எனவே, பொதுமக்களும் நிறுவனங்களும் இந்த வாய்ப்பைநம் அடுத்த தலைமுறையினருக்கு பயன்படுத்திக் கொள்ளவும்.