Category Archives: கணியம்

நடைமுறைக்கேற்ற நிரலரின் பத்து அடிப்படை பண்புகள்

1. துறைசார்ந்த மொழியைப் பேசவேண்டும். ஒவ்வொரு மென்பொருளும் ஏதோவொரு துறையின் தேவைக்காகவே உருவாக்கப்படுகிறது. எந்தத் துறையின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக மென்பொருளை உருவாக்குகிறோமோ, அதற்கான நிரலில், அந்தத் துறை சார்ந்த கலைச்சொற்கள் நிறைந்திருக்கவேண்டும். அப்போதுதான், துறைசார் வல்லுநர்களும் (SME), நிரலர்களும் மென்பொருள் குறித்த விவாதங்களில் சிரமமின்றி பேசிக்கொள்ளமுடியும். அதேபோல, நிரலின் கூறுகள் (module), இனக்குழுக்கள் (class), மாறிகள் (variables) ஆகியவற்றுக்கு பெயரிடும்போதும், துறைசார்ந்த பெயர்களையே வைப்பது நல்லது. Image by OpenClipart-Vectors on Pixabay முன்னாள் ஜெர்மன் அதிபர்… Read More »

எளிய தமிழில் Robotics 4. சேவை எந்திரன்கள்

மூன்று மைல் தீவு (Three Mile Island) 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலையத்தில் விபத்து ஆகி கதிரியக்க பொருட்கள் கசிந்து விட்டன. மேல் தளத்தைப் பார்வையிட முடிந்தது. பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்துகொண்டு சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்க முடிந்தது. ஆனால் கீழ்த்தளத்திலிருந்த நிலவறையைப் பார்க்க இயலவில்லை. ஆகவே பிரச்சினையின் பரிமாணத்தை அளவிடக்கூட இயலவில்லை. பிட்ஸ்பர்கில் உள்ள கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் எந்திரனியல் பேராசிரியர் வில்லியம் விட்டேக்கர் தலைமையிலான மாணவர்கள்… Read More »

எளிய தமிழில் Robotics 3. கொஞ்சம் கோட்பாடு கொஞ்சம் கைப்பயிற்சி

பயிற்சி வழிக் கற்றல் கோட்பாடுகள் உருவமற்றவை. அதிகமானால் சலிப்புத் தட்டும், புரிந்து கொள்வதும் கடினம். கைப்பயிற்சியில் விளையாட்டாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் வெறும் கைப்பயிற்சி மட்டுமே செய்தால் நாம் முயற்சிப்பது வேலை செய்தாலும் ஏன் வேலை செய்தது என்று தெரியாது. ஏதாவது பிரச்சினை வந்து கொஞ்சம் மாற்ற வேண்டுமென்றால் எதை மாற்றுவது, ஏன் என்றும் புரியாது. எனவே கொஞ்சம் கைப்பயிற்சிகளுடன் கொஞ்சம் அடிப்படைகளைக் கலந்து படித்தால் எளிதாகப் புரியும் மற்றும் சலிப்புத் தட்டாது. உணர், திட்டமிடு, செய் எந்திரனியலில்… Read More »

Machine Learning – 25 – Neural Networks

மனிதனுடைய மூளை எவ்வாறு கற்கிறது என்பதை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே Neural network ஆகும். முதலில் குழந்தையாகப் பிறக்கும்போது மனித மூளைக்கு ஒன்றுமே தெரியாது. பின்னர் அதிலுள்ள ஒரு மூளை நரம்பு (நியூரான்) புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறது. அடுத்ததாக மற்றொரு நரம்பு ஏற்கெனவே கற்றுக் கொண்டுள்ள விஷயத்தோடு சேர்த்து இன்னொரு புதிய விஷயத்தையும் கற்றுக் கொள்கிறது. இவ்வாறே பல்வேறு நரம்புகள் வலைப்பின்னல் வடிவில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொண்டே… Read More »

கணியத்தில் பெண்களின் பங்களிப்பு

இன்றைய நிறுவனங்கள் பலவற்றிலும், தொடக்க நிலையில் ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும், நான்கைந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள பெண்களைக் கண்டறிய சிரமப்படுகின்றனர். அதிலும் பெண் தலைவர்களைக் கொண்ட நிறுவனங்கள் அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். பள்ளிப்படிப்பை முடித்த பெண்கள் அனைவரும் கல்லூரிக்குச் செல்வதில்லை. கல்லூரியில் பட்டம் பெற்ற பெண்கள் அனைவரும் வேலைக்குச் செல்வதில்லை. வேலையில் சேர்கிற பெண்கள் அனைவரும், திருமணத்திற்குப் பின்னும், மக்கட்பேறுக்குப் பின்னரும் பணியைத் தொடர்வதில்லை. இதனை… Read More »

Machine Learning – 24 – Multi-class classification

Multi-class classification 0 மற்றும் 1 என இரு பிரிவுகள் மட்டும் இல்லாமல், பல்வேறு பிரிவுகள் இருப்பின், புதிதாக வரும் ஒன்றினை எந்த பிரிவின் கீழ் அமைக்க வேண்டும் என கணிப்பதே multi-class classification ஆகும். இதில் எத்தனை பிரிவுகள் இருக்கிறதோ, அத்தனை logistic கணிப்புகள் நடைபெறும். பின்னர் புதிதாக வருகின்ற ஒன்று, அனைத்தினாலும் கணிக்கப்பட்டு , எதில் அதிகமாகப் பொருந்துகிறதோ, அந்தப் பிரிவைச் சென்றடையும். கீழ்க்கண்ட உதாரணத்தில் சிகப்பு, ஊதா, பச்சை, மஞ்சள் எனும் நான்கு… Read More »

Machine Learning – 23 – Logistic regression

Logistic regression நமது கணிப்பு ஒரு முழு மதிப்பினை வெளிப்படுத்தாமல், ஏதேனும் ஒரு வகையின் கீழ் அமைந்தால், அதுவே logistic regression எனப்படும். இந்த வகைப்படுத்தல், binary மற்றும் multiclass எனும் இரு விதங்களில் நடைபெறும். logistic regression என்பது இதற்கு உதவுகின்ற ஒரு algorithm ஆகும். இதன் பெயரில் மட்டும்தான் regression எனும் வார்த்தை உள்ளது. ஆனால் இது ஒரு classification-க்கான algorithm ஆகும். Sigmoid function: ஒரு விஷயம் நடைபெறுமா? நடைபெறாதா? அல்லது இருக்கா?… Read More »

எளிய தமிழில் Robotics 2. தொழில்துறை எந்திரன்கள்

முதல் எண்ணிம கட்டுப்பாடு மற்றும் நிரல் எழுதி இயக்கக்கூடிய எந்திரனை 1954 இல் ஜார்ஜ் டெவல் (George Devol) என்பவர் உருவாக்கினார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு முதல் யூனிமேட் (Unimate) என்ற பெயர் கொண்ட எந்திரனை இவர் விற்றார். 1961 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியிலுள்ள ஒரு ஆலையில் அச்சு வார்ப்பு எந்திரத்திலிருந்து பழுக்கக் காய்ச்சிய உலோக பாகங்களை எடுத்து அடுக்கி வைக்க இந்த எந்திரன் நிறுவப்பட்டது. இது ஒரு எந்திரன் கை (Robotic Arm).… Read More »

Machine Learning – 22 – Polynomial Regression

Polynomial Regression ஒரு நேர் கோட்டில் பொருந்தாத சற்று சிக்கலான தரவுகளுக்கு polynomial regression-ஐப் பயன்படுத்தலாம். கீழ்க்கண்ட நிரலில் ஒரு வீட்டிற்கான சதுர அடியும், அதற்கான விலையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் linear மற்றும் 2nd order, 3rd order, 4th order & 5th order polynomial பொருத்திப் பார்க்கப் படுகிறது. This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears… Read More »

open-tamil மூலம் தமிழுக்கான வேர்ச்சொல் காணும் நிரல் வெளியீடு

தமிழில் வேர்ச்சொல் வடிகட்டியை open-tamil பைதான் நிரல் தொகுதி மூலம் வழங்குகிறோம். ஆசிரியர்: முத்தையா அண்ணாமலை <ezhillang@gmail.com> சுருக்கம்: இந்த கட்டுரையில் நான் சமீபத்தில் 2013-இல் வெளியிடப்பட்ட தமிழ் வேர்ச்சொல் பகுப்பாய்வு வடிகட்டியை பொது பயனுக்கு மாற்றியது பற்றி விரிவாக எழுதுகிறேன். இந்த வேலைப்பாடுகள் முழுதுமே திறமூல மென்பொருள் சூழலினால் உருவானது என்பதை மனதில் கொள்வது முக்கியமானதும் கூட. தமிழின் கணிமை ஆய்வின் பொது வளர்ச்சிக்கு இத்தகைய பொதுவெளியில் உள்ள மென்பொருள்கள் தொடர்ந்து உதவும் என்றும், உருமாறி… Read More »