Category Archives: Events

நிகழ்வுக் குறிப்புகள் – தொல்லியல் பயிற்சியில் கட்டற்ற மென்பொருள் அறிமுகம்

  கடந்த 08.01.2020 அன்று சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்ற ‘தொல்லியல் -ஓர் அறிமுகம்‘ பயிலரங்கில், உதயசங்கர், சீனிவாசன் இருவரும் கட்டற்ற மென்பொருட்கள் மூலம் தொல்லியலை பொது மக்களுக்கு எடுத்துச் செல்வது பற்றி உரையாற்றினர். தமிழி(பிராமி) எழுத்துரு உருவாக்கம், அவற்றின் பயன்பாடுகள், ஜீனவாணி எனும் மென்பொருள் மூலம் தமிழி(பிராமி) எழுத்துக்களை உருவாக்கிப் பகிர்தல், அதன் கைபேசி செயலி ஆகியன பற்றி உதயன் விவரித்தார்.   தொல்லியல், தமி்ழ் போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு அரசு, கல்வி நிறுவனங்கள்… Read More »

தமிழ்ப்புலவர் தளத்தின் மூல நிரல் வெளியீட்டு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

  மென்பொருள் அறிஞர் திரு இராமசாமி துரைப்பாண்டி அவர்களின் ‘தமிழ்ப்புலவர்‘  tamilpulavar.org/ எனும் மென்பொருள் தளத்தினை, தமிழ் உலகுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்கும் விழா, இசைப்புலவர்  www.isaipulavar.in/ தளத்தின் மென்பொருள் தொடக்கவிழா , மற்றும் புத்தக வெளியீட்டுவிழா என அனைத்தும் ஒரே தமிழ்விழாவாக 10.01.2020 அன்று மாலை 04 .00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில் நடந்தது. நிகழ்வுக் குறிப்புகள் – திரு இராமசாமி துரைப்பாண்டி அவர்களின் இசைப்புலவர் தளத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும்,… Read More »

கணினிச் செயலாக்கத்துக்கான திறந்த தமிழ்ப் பிரதிகள்

மூலம் – tamil.digitalscholarship.utsc.utoronto.ca/ta/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D   திகதி:  சனிக்கிழமை, சனவரி, 18th, 2020 நேரம்: 9:30 முப 11:30 முப EST (கனடா நேரம்) நேரம்: 8.00 பிப 10:00 பிப IST (இந்திய நேரம்) www.worldtimebuddy.com/?qm=1&lid=6167865,30,1261481&h=6167865&date=2020-1-18&sln=9.5-11.5 இடம்: The BRIDGE Boardroom: IC 111 University of Toronto Scarborough Campus (UTSC) Instructional Centre (IC Building), ground floor 1095 Military Trail Toronto, Ontario M1C 1A4 Zoom link: zoom.us/j/299051550 (The… Read More »

FSFTN-ன் திண்டுக்கல் FOSS குழுவின் சார்பாக GNU/Linux Install Fest

அனைவருக்கும் வணக்கம், இந்த ஞாயிறு நமது FSFTN-ன் திண்டுக்கல் FOSS குழுவின் சார்பாக GNU/Linux Instal Fest நடைபெறவுள்ளது. நிகழ்விற்க்கு வரும் அனைவருக்கும் GNU/Linux நிறுவுவது எப்படி மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கப்படும். இந்த நிகழ்வில் பல்வேறு வகையான GNU/Linux Distro-கள் அனைவருக்கும் பகிரப்படும். நவம்பர் மாதம் துவக்கப்பட்ட திண்டுக்கல் FOSS குழுவில் இதுவே முதல் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வை நடத்துவதற்க்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கம் நமது… Read More »

FSFTN-ல் The Great Hack ஆவணப்படம் திரையிடல் – டிசம்பர் 15 2019 ஞாயிறு – மதியம் 2:30

  அனைவருக்கும் வணக்கம், வருகிற ஞாயிறு அன்று நமது *FSFTN*-ல் *The Great Hack* ஆவணப்படம் திரையிடப்பட இருக்கிறது. “அவர்கள் நம் Data-வை திருடிக்கொண்டனர், நம் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்தனர், இப்போது நம் வாழ்வையும் கட்டுப்படுத்துகின்றனர்” வாருங்கள் உலகின் மிகப்பெரிய Data திருட்டை பற்றியும் அதை எதற்க்காக பயன்படுத்தினர் என்பதைப் பற்றி பார்ப்போம். *இடம்* :- The OMR Activists Collective, 16வது குறுக்குத் தெரு, சாய் நகர், துரைப்பாக்கம், சென்னை 600097 *நாள்* – டிசம்பர்… Read More »

மதுரையில் விக்கிப்பீடியா நிகழ்வு – நவம்பர் 30 2019

வணக்கம், இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்றுப் பரிசை அள்ளும் அணியில் நீங்களும் இடம் பெற வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு மதுரையில் விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை 13 10 2019

நாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை இடம்: பயிலகம் 7 விஜய நகர் முதல் தெரு வேளச்சேரி சென்னை 42 (நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்) ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில் 40 பேர் கலந்து கொண்டனர். பின்வரும் தலைப்புகளில் சீனிவாசன் உரையாற்றினார். 1. மின்னூல் – வகைகள் – epub, mobi, PDF, HTML 2. மின்னூல் உருவாக்க உதவும் மென்பொருட்கள் – LibreOffice Writer, MS Office… Read More »

மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை

    நாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை இடம்: பயிலகம் 7 விஜய நகர் முதல் தெரு வேளச்சேரி சென்னை 42 (நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்) ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில் தொடர்புக்கு – த. சீனிவாசன் 9841795468 / முத்துராமலிங்கம் – 8344777333 ===   அச்சு நூல்கள் மின்னூல் வடிவம் எடுத்து, எழுதி முடித்தவுடனேயே, மின்னூலாக அனைவரின் கரங்களிலும் தவழும் அருமையான காலத்தில் வாழ்ந்து… Read More »

தமிழ் இணைய இணையர் விருது

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 18 வது தமிழ் இணைய மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப் 20-22, 2019 ல் நடைபெற்றது. மாநாட்டை அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த ஆண்டோபீட்டர், மறைந்த தகடூர் கோபி ஆகியோருக்கு ‘தமிழ் கணிமை முன்னேர் விருது’ வழங்கப்பட்டது. அதேபோல், எனக்கும் (து. நித்யா) என் இணையர் த.சீனிவாசன்-க்கும் ‘தமிழ் இணைய இணையர் விருது’… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019

  நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிரல் திருவிழா-2 கணியம் அறக்கட்டளை சார்பில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. காலை பத்து மணிக்குத் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணியம் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. சீனிவாசன் முதல் ஆளாக வந்து, கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களுடன் உரையாடத் தொடங்கினார். நிரல் திருவிழா எதற்கு? கணினித் துறையில் எப்படி ஊர் கூடித் தேர் இழுக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு விளக்கமாகச் சொன்னார். வந்த இளைஞர்களுக்குக் கணியத்தைப் பற்றிய அறிமுகத்தையும் சீனிவாசனைப்… Read More »